இந்த கார்ட்டூனுக்கும், அந்தக் கார்ட்டூனும் சம்பந்தமில்லை. |
பத்திரிகைகளின் வழக்கமான செயல்பாடுகளில் ஒன்று கார்ட்டூன் என்னும் கேலிச்சித்திரங்கள் வரைவது. சமூக அவலங்களை ஓராயிரம் வார்த்தைகளில் சொல்வதை விட ஒரேயொரு கேலிச்சித்திரம் மூலமாக நச்சென்று சொல்லிவிடலாம். அதன் வலிமை அப்படி. அப்படி வரைந்து அவ்வப்போது பத்திரிகைகள் வழக்கில் சிக்கிக்கொள்வதும் உண்டு.
எம்.ஜி.ஆர்.,ஆட்சிக்காலத்தில் கூட, விகடன் வெளியிட்ட ஒரு கேலிச்சித்திரத்திற்காக அப்போதைய சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மூலம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்ததுண்டு.
நேற்று இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று, மிகவும் கேவலமாக மஞ்சள் பத்திரிகை அளவுக்கு இறங்கி, அருவருக்கத்தக்க முறையில் ஜெயலலிதாவையும், மன்மோகன் சிங்கையும் விமர்சித்து ஒரு கார்ட்டூனை வெளியிட்டிருக்கிறது. அதை பார்த்த மாத்திரத்தில் பகீரென்று இருந்தது எனக்கு.
ஒரு மாநிலத்தின் முதல்வரும் ஒரு நாட்டின் பிரதமரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள்தான். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அதே நேரம் அவர்களின் தவறுகளை நாகரீகத்தோடும் கண்ணியத்தோடும், வரம்பு மீறாமலும் சுட்டிக்காட்டுவதுதான் பத்திரிகைகளின் மரபு, தர்மம். அதைவிடுத்து இப்படியெல்லாம் கார்ட்டூன் போட்டு அவமானப்படுத்துவது பத்திரிகை தர்மத்திற்கு உகந்ததல்ல.
நிச்சயம் அந்தப்பத்திரிகை ஆசிரியரும், அந்த கார்ட்டூனிஸ்டும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே...அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. காலம் தாழ்த்தாமல் அந்தப்பத்திரிகை ஆசிரியர் மீதும் கார்ட்டூனிஸ்ட் மீதும் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் ராஜபக்ஷே....எடுப்பாரா... அல்லது பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற பழமொழிக்கு உயிரூட்டுவாரா என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி....
Tweet |
கண்டிக்கத்தக்க விஷயம்!
பதிலளிநீக்குஅந்த கார்ட்டீன் படத்தை பகிராததற்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்
எனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்...
பதிலளிநீக்குநிச்சய்ம் கண்டிக்கப் படவேண்டிய அல்ல
பதிலளிநீக்குதண்டிக்கப்படவேண்டிய விஷயம்
சுருக்கமாக ஆயினும் மிகச் சரியாக
கண்டனத்தைப் பதிவு செய்தமைக்கு
வாழ்த்துக்கள்
என்ன சார் நீங்க?கடந்த கால இன அழிப்பின் போது எத்தனை பெண் போராளிகள் உயிருடனும்/உயிரின்றியும் க................டார்கள் என்று தெரியாதா?ஏதோ ராஜபக்ஷே காந்தியின்/இயேசுவின்/அன்னை தெரேசாவின் மறு அவதாரம் என்றா நினைக்கிறீர்கள்?"பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று அறுபத்து நான்கு ஆண்டுகளாகப் பார்க்கிறோமே?
பதிலளிநீக்குhttp://www.funtamilvideos.com/naan
பதிலளிநீக்குDo you want to see fun videos
பதிலளிநீக்குhttp://www.funtamilvideos.com/comedy
நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்... வேறு ஒரு படத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
பதிலளிநீக்குமிகவும் கண்டிக்க வேண்டிய விசயம்! தமிழர்கள் இதிலாவது ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html
கேட்டா பத்திரைகை தர்மம்னு சொல்லுவானுக வெளக்கெண்ணைய்க.....
பதிலளிநீக்குயாராகா இருந்தாலும் சரி அநாகரிகமான பேச்சோ, எழுத்தோ இருந்தால் அவர்கள் மிருகத்துக்கு சம்மமானவர்கள் தான்....
பொது வெளியில் அநாகரிகமாக பேசும் கயவர்கள் எல்லாம் என்னத்துக்கு எழுத வர்றானுக????
வன்மையான கண்டனங்கள் .
பதிலளிநீக்குஅந்த கார்டூன் வெளியிடாததற்கு நன்றி சகோதரர் கசாலி அவர்களே,
பதிலளிநீக்குநிச்சயமாக கட்சி வேறுபாடு இன்றி கண்டிக்கப்படவேண்டிய ஒன்றுதான்.
கொஞ்சம் முன்புதான் வேறு ஒரு தளத்தில் அந்த படத்தை பார்த்தேன் .அநாகரிகத்தின் உச்சம் இது
பதிலளிநீக்குகொடுமை அண்ணே ..
பதிலளிநீக்குவன்மையாக தண்டிக்க வேண்டும்
வன்மையாய கண்டனங்கள்......கஸாலி அரசர் குளம்
பதிலளிநீக்குkodumai annaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
பதிலளிநீக்குநிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் கஸாலி...நல்ல பதிவு.
பதிலளிநீக்குஅவன் பிறப்புதான் சந்தேகமாக உள்ளது... பிஞ்சிலே பழுத்த நஞ்சு...
பதிலளிநீக்குஎனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்...
பதிலளிநீக்குnichchayam thandikkapadamaattaargal vendumendral sigappu kambala varaverppu kedaikkum kaaranam idhaipattri endha oru thalaivaro alladhu tholaikkattchiyo innavarai karuththukkooravillai vetkam kettavargal
பதிலளிநீக்குnandri
surendran
எனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.
பதிலளிநீக்குகுற்றவாளியிடம் போய் நீதியை எதிர்பார்க்கின்றீர்கள். தூண்டி விட்டுவேடிக்கை பார்ப்பது அந்த மனிதனின் வழக்கம். அங்கு போய் நீதியை எதிர்பார்ப்பது மடமை. நாகரிகம் அறியாத இனம் அந்த இனம் அவர்களிடம் போய் நாகரீகத்தை எதிர்பார்ப்பது மடமை. வெளியிட்ட பத்திரிகை தனது பத்திரிகைத்தர்மத்தை மீறி விட்டது. சிங்கள ஈனப்பிறவிகளிடம் இதற்கு மேல் எத்தனையோ அநாகரிகங்களைப் பார்த்தவர்கள் ஈழத்தமிழர்கள். இந்தியாவே சிங்களவனின் காலடியில் சுருண்டு கிடக்கும் போது யார் தண்டனை கொடுப்பது?
பதிலளிநீக்குகண்டிக்கத்தக்க விஷயம். சிங்களர்களிடம் நாகரீகம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அதுவும் ராஜபக்ஷே அரசிடம்.
பதிலளிநீக்குஅவர்களது லெவல் அவ்வளவுதான்.