தமிழ் சினிமாவில் வசனங்கள் மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர். ஒரு கதாசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக, தயாரிப்பளாராக தமிழ் சினிமாவை பொறுத்தவரை கலைஞரின் ஆளுமை மிகப்பெரியது. ஏறக்குறைய அரை நூற்றாண்டைக்கடந்து சினிமாவிற்கான தன் பங்களிப்பை ஆற்றி வருகிறது கலைஞரின் பேனா. திராவிட இயக்கங்களுக்காக சினிமாவில் கலைவாணர் என்.எஸ்.கே., துவங்கி எத்தனையோ நடிகர்கள் பிரச்சாரம் செய்திருந்தாலும் அத்தனை நடிகர்களுக்கும் இணையாக திரைக்குப்பின்னால் தன் அழகு தமிழின் மூலம் பிரச்சாரம் செய்தவர் கலைஞர் மு.கருணாநிதி என்றால் அது மிகையாகாது.
எம்.ஜி.ஆர்.,முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமான ராஜகுமாரி, சிவாஜி அறிமுகமான பராசக்தி என்று இரு ஜாம்பவான்களின் முதல் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். எஸ்.எஸ்.ஆரோடு ஜெயலலிதா நடித்த மணிமகுடம், எம்.ஜி.ஆரோடு நடித்த படங்களில் ஒன்றான எங்கள் தங்கம் படத்திற்கும் அவர்தான் வசனம். ஜானகியும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த மருத நாட்டு இளவரசிக்கும் கலைஞர்தான் வசனம். இப்படி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஜானகி என்று மூன்று முதல்வருக்கும் வசனம் எழுதிய பெருமை கலைஞரையே சாரும். எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் கூட கலைஞரின் வசனத்தை மக்கள் ஆனையிட்டால், பொறுத்தது போதும், சட்டம் ஒரு இருட்டறை ஆகிய படங்களில் பேசி நடித்தவர்தான்.
அந்த காலக்கட்டத்தில், கலைஞரின் பராசக்தி, மனோகரா வசனமும், சிவாஜி பேசிய வீரபாண்டிய கட்டபொம்மன் வசனமும்தான் திரையுலகில் நுழைபவருக்கான துருப்புச்சீட்டு, பாலபாடமும் கூட.....
பராசக்தி, மனோகரா போன்ற அனல் தெறிக்கும் வசனங்களை இன்றும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் சினிமாவில்.
இப்படிப்பட்ட கலைஞர் சில அற்ப அரசியல் காரணங்களுக்காக, புறக்கணிக்கப்பட்டு, ஜெயலலிதா முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கி
அதற்காக, ஜெயலலிதாவின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவில்லை. அவரும் முன்னாள் நடிகை என்ற ரீதியில் பொருத்தமானவர்தான். ஆனாலும், கலைஞரா ஜெயலலிதாவா என்று வரும்போது கலைஞருக்கே கூடுதல் தகுதி உள்ளது என்பது என் கருத்து.
ஒருவேளை ஜெயலலிதா முதல்வராக இல்லாமல் ஒரு வைகோவோ, அல்லது ராமதாசோ இருந்திருந்தால் கூட, அவர்களே பிரதானப்படுத்தப்பட்டிருப்பார்கள். கலைஞரோடு சேர்ந்து ஜெயலலிதாவும் புறக்கணிக்கப்பட்டிருப்பார். காரணம், சினிமாக்காரர்களின் புத்தி அப்படி. அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள். அவர்களைப்பொறுத்தவரையில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர்கள் பக்கமே சாய்வார்கள். கடந்த ஆட்சியில் இவர்களெல்லாம் சேர்ந்து கலைஞருக்கு நடத்தாத பாராட்டுவிழாவா?, அப்படிப்பட்டவர்கள் மாறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம், ஆட்சியாளர்களை அனுசரித்துப்போக வேண்டும் என்ற எண்ணம்தான்.
மொத்தத்தில் கலைஞரை புறக்கணித்துவிட்டு இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடினால், அது வெறும் அரசியல் விழாவாகத்தான் இருக்குமே தவிர, சினிமா விழாவாக இருக்காது.
Tweet |
வேசிகள் வேசிதனத்தை காட்டி தானே ஆக வேன்டும் இதில் என்ன ஆச்சர்யம்?????
பதிலளிநீக்குதிமுக ஆதரவு திரைப் பிரமுகர்களே வாய் மூடி மௌனம் காப்பது வேதனையளிக்கிறது.
பதிலளிநீக்குசமீபத்தில், பராசக்தி படத்தைப் பற்றி ஒருவர் விஜய் தொலைக்காட்சியில் பேசினார். படத்தில் இடம்பெற்ற நடிகர் திலகம், SSR முதல் எல்லோரைப் பற்றியும் பேசினார். மறந்தும் கலைஞரைப் பற்றி கடைசி வரைப் பேசவே இல்லை. ஆச்சர்யமாக இருந்தது. நல்லவேளை நடுவராக இருந்த எஸ்ரா, இந்தப் படத்தின் உண்மையானக் கதாநாயகன் கலைஞர்தான். இன்று வரை இந்தப் படத்தின் வசனங்களை போல் எந்தப் படமும் வந்ததில்லை என்று சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
எங்க வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு நாதஸ்வர கலைஞர் இருந்தார். அவர் 50 ஆண்டுகளாக சினிமாவில் நாதஸ்வரம் ஊதுகின்றார். அவருக்குக் கூட அழைப்பு இல்லையாம்.
பதிலளிநீக்குமற்ற மாநிலங்களில் ஆளும் கட்சித்தலைவரும் எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்களும் அரசியலில் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தாலும் தனிப்பட்ட முறையில் நட்பாகவே இருக்கிறார்கள். அது நம் மாநிலத்தில் இல்லை என்பது தான் சாபக்கேடு. வருத்தமும் கூட.
பதிலளிநீக்குசலாம்,
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
அந்த அளவு பெருந்தன்மையை திமுகாவிடமோ, அதிமுகா விடமோ எதிர்பார்த்தால் ஏமாளி நாம் தான். அவர் முதல்வராக இருந்தபோது நடந்த விழாவில் இவர்களை இருட்டடிப்பு செய்தார். இப்போது இவர் செய்கிறார். அவ்வளவுதான்!
பதிலளிநீக்குஅன்பின் கஸாலி - சிந்தனை நன்று - பதிவின் ஆதங்கம் புரிகிறது.
பதிலளிநீக்குஎன்ன செய்வது - இதெல்லாம் இயல்பாக நடப்பது தான் - ஒன்றும் செய்ய இயலாது
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அது வெறும் அரசியல் விழாவாகத்தான் இருக்குமே தவிர, சினிமா விழாவாக இருக்காது.
பதிலளிநீக்குகலைஞர் முதல்வராய் இருந்த போது கொண்டாடிய கூத்தாடி கூட்டம் தானே! பச்சோந்திகள் இவர்கள்!
பதிலளிநீக்குkalanyar pudinggiyutu pothum
பதிலளிநீக்குவேணும் னா அந்தப் 'பேனா' வ அனுப்பி வைங்க,கலந்துக்கட்டும்!
பதிலளிநீக்குஇது அம்மா விழா...
பதிலளிநீக்குபாசத்தலைவனைப் பாராட்டியவர்கள் அம்மா மடியில்...
30000.00மதிப்புக் கூட மதிப்பில்லாத கதைக்கு 300000.00 வாங்கிய கதாசிரியரை கண்டிப்பாக அழைத்து இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
deva dass unga athha etha katunathukuda latcham latchama vanguna??
பதிலளிநீக்கு