என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

4 தி ஹிந்து தமிழ் நாளிதழ் சாதிக்குமா?



சம்பள தேதியான முதல் தேதி சம்பளக்காரனின் பர்ஸ் நல்ல வீக்கமாக காணப்படும். அதுவே மாசக்கடைசியானால் அந்த பர்ஸ் இளைத்து போய் விடும். அதேப்போல்தான் THE HINDU ஆங்கில பத்திரிகையின் குழுமத்திலிருந்து தமிழில் வெளியாகும் தி இந்து தமிழ் பதிப்பும் ஆகிவிட்டது. நேற்று வெளியான முதல்நாளில், 4 ரூபாய்க்கு 40 பக்கமாக இருந்த நாளிதழ், இன்று ஒரே நாளில் இளைத்து வெறும் 16 பக்கமாக சுருங்கிவிட்டது. செய்திகளிலும் பெரிதாக, சுவாரஸ்யம் இல்லை. தமிழில் மற்ற பத்திரிகைக்கு மாற்றாக இந்து இருக்கும் என்று நினைத்த என்னைப்போன்றவர்களுக்கு ஏமாற்றாகத்தான் இருந்தது. ஒரு சில கட்டுரைகள் நன்றாக இருந்தாலும் மொத்தமாக பார்க்கும்போது பெரிதாய் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இனைய தளம், வலைப்பதிவில் இடம்பெற்ற செய்திகள் கூட தி இந்துவில் இடம்பிடித்திருக்கிறது. வழக்கமான செய்திகளை கொடுப்பதற்கு இன்று நிறைய பத்திரிகைகள் இருக்கிறது. வித்தியாசமான கோணத்தில், பார்வையில் கொடுக்கத்தான் பத்திரிகைகள் இல்லை. போகப்போக தன்னை மெருகேற்றிக்கொண்டு செய்திகளை கொடுத்தால்தான் பத்திரிகை உலகில் நிற்கலாம். இல்லாவிட்டால், வந்த சுவடே தெரியாமல் காணாமல் போக வேண்டியதுதான்.


செய்திகளில்தான் பெரிய சுவாரஸ்யமில்லை என்றாலும் பேரையாவது ஓரளவு நல்ல தமிழில் வைத்திருக்கலாம். காரணம், ஏற்கனவே இதே பேரில், இதே குழுமத்திலிருந்து THE HINDU என்று ஆங்கில நாளிதழ் வந்துகொண்டிருக்கும் வேளையில், அதே பேரில் தமிழில் ஒரு நாளிதழ் என்பது குழப்பத்துக்கே வழி வகுக்கும். ஏனென்றால், இன்று காலையில் ஒரு கடையில் இந்து பேப்பர் கொடுங்க என்றதும் கடைக்காரர் ஆங்கில THE HINDU-வை எடுத்து கொடுத்தார். பின்னர் அவரிடம் தமிழ் இந்து பேப்பர் என்று சொல்ல வேண்டியதாகிவிட்டது.

பார்க்கலாம்......இனி வரும் நாட்களில் தி ஹிந்து எப்படியென்று.....
இதன் இணையதள முகவரி......தி இந்து தமிழ்



Post Comment

இதையும் படிக்கலாமே:


4 கருத்துகள்:

  1. அது......................'அவங்க' ளுக்காக பிரிண்ட்,ஆவுது!

    பதிலளிநீக்கு
  2. வெகு விரைவில் புதிய சட்டம் அமுல்படுத்தப்படும்
    (தமிழில் பெயர் வைக்கும் பத்திரிக்கைக்கே தமிழக அரசின் விளம்பரங்கள்)

    பதிலளிநீக்கு
  3. தி இந்து தமிழ் - நாளிதழ் என்பது புதிய செய்தி!
    ஆனால், சுவாரஸ்யமில்லை என்பதை நீங்கள்
    சொல்லிவிட்டபின் எனக்கும் சுவாரஸ்யமில்லை.
    எதிர்காலத்தில் எப்படி என்று பொறுத்திருந்து
    பார்ப்போம்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.