ஓடும் பேருந்தில் டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி இரவு துணை மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் மற்றும் மைனர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். மைனர் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து டெல்லி சிறுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் ஆகிய 4 பேர் மீதான வழக்கை விசாரித்த டெல்லி விரைவு நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக்கூறி, அவர்கள் குற்றவாளிகள் என கடந்த 10-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. 11-ந்தேதி தண்டனை குறித்த இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றன. இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அவர்கள் செய்த மிகக்கொடிய குற்றத்துக்கு கருணை காட்ட வழியே இல்லை என்பது போலீஸ் தரப்பு வாதம். இருப்பினும் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவாளிகள் மனம் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று தண்டனை விவரம் வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சபாஷ்.....இதுதாண்டா தீர்ப்பு என்று சொல்லுமளவுக்கு இந்த தீர்ப்பு இருந்தாலும், இந்த தீர்ப்பும் மேல் முறையீடு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், டெல்லியில் கொடுக்கப்பட்டிருந்தாலும் இது விரைவு நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டுள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படலாம்.
இந்த தீர்ப்பு வரவேற்கப்படவேண்டிய தீர்ப்பு என்றாலும், எதிர்ப்பும் கிளம்புகிறது. இனி நாட்டில் குற்றமே நடக்காதா என்றும் சிலர் கேட்க ஆரம்பித்துள்ளார்கள். சரி.....இவர்களை மன்னித்து விட்டுவிட்டால், நாட்டில் பாலியல் குற்றங்கள் இன்னும் பெருகிவிடாதா? என்னதான் செய்தாலும் கடைசியில் நம்மை விடுதலைதான் செய்யப்போகிறது நீதிமன்றங்கள் என்ற எண்ணம் காமுகர்களுக்கு தோன்றி குற்றங்கள் அதிகரித்து விட்டால்........
சட்டங்கள் கடுமையானால், குற்றங்கள் தடுக்கப்படுதோ இல்லையோ ஆனால் குறையும் அல்லவா? நமது நாட்டில் குறையும் என்பதே ஆறுதல்தானே?
மற்ற நாடுகளில் சட்டங்கள் போட்டு, தண்டனைகளை அதிகப்படுத்துவது என்பது குற்றங்களை தடுக்க.....ஆனால், இந்தியாவில் சட்டங்கள் போட்டு தண்டனைகளை அதிகப்படுத்துவதென்பது குற்றங்களை குறைக்க....
இன்று நாட்டில் எங்கு பார்த்தாலும் திருட்டு அதிகரித்து விட்டது. என்னதான் வலிமையான பூட்டைப்போடு பூட்டியிருந்தாலும் அதை தகர்த்து விட்டு திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள். எப்படித்தான் வீட்டை பூட்டினாலும் திருடத்தானே செய்கிறார்கள் என்பதற்காக யாரும் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்குவதில்லை, வீட்டைவிட்டு வெளியேறுவதில்லை. அதைப்போல்தான் சட்டம் போட்டாலும் குற்றங்கள் குறையவா போகிறது என்பதும்....
Tweet |
//சட்டங்கள் கடுமையானால், குற்றங்கள் தடுக்கப்படுதோ இல்லையோ ஆனால் குறையும் அல்லவா?//
பதிலளிநீக்குகுறைகிறதோ இல்லையோ என்பதல்ல .. குற்றங்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். தண்டனை குற்றங்களுக்கு ஏற்றது போல் வலுவானதாக இருக்க வேண்டும்.
ஆனாலும் இதுவும் ஒரு கண் துடைப்பு போலவும் விரைவில் தெரியும். ஏனெனில் தருமபுரிக் கொலைகாரர்களுக்கு தூக்குத் தண்டனை அளித்து ஒரு மாமாங்கம் ஆகிறது. எதுவும் நடக்கவில்லை இன்னும்!
பதிலளிநீக்கு//எப்படித்தான் வீட்டை பூட்டினாலும் திருடத்தானே செய்கிறார்கள் என்பதற்காக யாரும் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்குவதில்லை.
பதிலளிநீக்குCant agree more.
இந்த நாட்டில் (இல்லே நாற்றத்தில் ) பண பலமும் அரசியல் பலமும் மட்டுமே குற்றம் சாட்டபட்டவன் குற்றவாளியா இல்லையா என்பது தீர்மானிக்கபடுகிறது .இதில் கொண்டாட என்ன இருக்கிறது ? ஓடுவது சாக்கடை அதில் ஒருவன் குளித்துவிட்டு நான் சுத்தமாக இருக்கிறேன் என்று மற்றவனை பார்த்து நகைப்பது??கேவலம் இல்லையா நண்பரின் பதிவுக்கு(கருத்துக்கு) என் மனதில் எழுந்த சினம்.உங்கள் உழைப்பை,எண்ணத்தைப் கொச்சை படுத்தவில்லை .
பதிலளிநீக்குஒரு மயிரை (உயிரை அல்ல) கூட படைக்க வக்கில்லாத சில காகித புலிகள் நான்கு உயிரை எடுக்க அதிகாரம் பெற்றவர்கள்.இந்த அதிகாரம் எப்படி கிடைத்தது என்று முழுதாக புலனாய்வு செய்தால் ,கருமம் அந்த சாக்கடையை விட நாற்றம் அடிக்கும் .நேரம் கிடைத்தால் ஒரு மாதம் கோர்ட் நடவடிக்கையை பார்த்து அறியவும்.நான் குற்றத்தை நியாயப்படுத்தவில்லை
சபாஷ்,சரியான தீர்ப்பு.குற்றங்கள் குறைய வேண்டுமெனில் சட்டங்கள் வலுவாக்கப்பட வேண்டும்.////அந்தப் பையனுக்கு அளித்த தண்டனை போதாது.
பதிலளிநீக்குyes I agree with you
பதிலளிநீக்குஅருமையான தீர்ப்பு....
பதிலளிநீக்குஇப்படி நாலு பேரைப் போட்டால்தான் குற்றங்கள் குறையும்.