என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், செப்டம்பர் 19, 2013

7 நவீன திருடர்கள்.




தான் நடத்தும் மளிகை கடையை திறக்க தன் மகனுடன் வந்த  மாரிமுத்து ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டான். காரணம், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. பதட்டத்துடன் உள்ளே நுழைய  முயன்றவனை அவனது மகன் தடுத்தான். 

"அப்பா...இப்ப உள்ளே போக வேணாம். திருடங்க ஏதாவது தடயத்த விட்டுட்டு போனாலும் போயிருப்பாங்க...எதுக்கும் போலீசுக்கு போன் பண்ணலாம்". 

சரியென்று தலையாட்டினார் மாரிமுத்து. சிறிது நேரத்தில் போலீஸ் வந்தார்கள்.

" என்ன திருட்டு போயிருக்குன்னு பாத்தீங்களா?"

"நீங்க வந்த  உடனே போகலான்னு பையன் சொன்னான்"

"நல்லது. சரி வாங்க போகலாம்"

உள்ளே போய் பார்த்தார்கள். எல்லாம் அப்படியே இருந்தது. திருட்டு போன அடையாளமே இல்லை. 

"என்னங்க...எல்லாம் அப்படியே இருக்கு. திருடு போனது போல தெரியலியே?"

"அதான் சார் எனக்கும் புரியல"

"எதுக்கும் கல்லாவப்பாருங்க"

"கல்லாவுல காசேதும் வைக்கிறது இல்லை சார். அன்னன்னிக்கு வீட்டுக்கு எடுத்துட்டு போயிருவேன்"

"என்னங்க இது....மர்மமா இருக்கு...பூட்டை உடைச்சு கதவ திறந்திருக்காணுக...ஆனா, உள்ளே இருக்க சாமான்லாம் பத்திரமா இருக்கு. அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வந்திருப்பாங்க?"

"சார் ஒரு நிமிஷம் இருங்க" என்ற மாரிமுத்து, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கத்தினார்.

"சார் ரெண்டு மூட்டை வெங்காயத்தை காணோம். அதத்தான் திருடிட்டு போயிருக்கானுங்க".

மீள் பதிவு சிறுகதை 



Post Comment

இதையும் படிக்கலாமே:


7 கருத்துகள்:

  1. சமயத்துக்கு ஏற்ற கதை! இது மீள்பதிவா? நம்ப முடியவில்லை!

    பதிலளிநீக்கு
  2. திருடன் அகப்பட்டாலும், கடைக்காரருக்கு ஒரு மூட்டை வெங்காயம்தான் கிடைக்கும். இன்னொரு மூட்டையைப் போலீசுக்கு அன்பளிப்பா கொடுக்கணுமில்ல?!

    பதிலளிநீக்கு
  3. ஹா... ஹா... இப்ப உள்ள நிலமைக்கு ஏத்த கதைதான்...
    அருமை.

    பதிலளிநீக்கு
  4. கெட்டிக்கார திருடனாய் இருப்பான் போலிருக்கிறதே
    யதார்த்த நிலை ல்லும் கதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.