நான் முகநூலில் போட்ட சில ஸ்டேட்டஸ்
சவுதி அரேபியாவிலிருந்து ஒரு நண்பன் பேஸ்புக் சாட்டில் வந்தான்.
மாப்ளே ஊருக்கு வாரேன். ஏதும் வாங்கிட்டு வரவா என்று கேட்டான்.
ஆமாடா மாப்ளே... இங்கே விலையெல்லாம் கடுமையா ஏறிப்போச்சு. அதனால.. என்று இழுத்தேன்.
அதனால என்ன அதனால? நீ சொல்லு வாங்கிட்டு வாறேன் என்றான்.
வரும்போது அஞ்சு லிட்டர் பெட்ரோல் வாங்கிட்டு வந்துடுடா. அங்கே விலை ரொம்ப கம்மியாமே என்றேன்.
போடா வெண்ணைன்னு லாக் அவுட் பண்ணிட்டான். கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ? அநேகமா அன்ஃப்ரண்ட் பண்ணிடுவான்னு நினைக்கிறேன்.
==========
முகம் கழுவிய பின், முகத்தில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் ஒரே ஒரு டிஸ்யூவை கொண்டு துடைப்பது எப்படின்னு சலூன் கடைக்காரரிடம்தான் கற்றுக்கொள்ளனும் போல.
என்ன ஒரு நேர்த்தி, என்ன ஒரு சிக்கனம்!!
============
என்றோ படித்த
பாட புத்தகத்தை
இன்று எடுத்து
பார்த்தபோது
குட்டி போடும்
என்று நம்பி
எப்போதோ
வைக்கப்பட்ட
மயிலிறகு ஒன்று
புத்தகத்தின்
நடுவில்அப்படியே
இருந்தது.....
ஆனால், அது குட்டி
போடும் என்ற
நம்பிக்கை மட்டும்
தகர்ந்து போயிருந்தது
எனக்கு......
============
தலைவர் ஏன் பணத்துக்கெல்லாம் அயோடெக்ஸ் பூசறாரு?
பண வீக்கத்தை குறைக்கிறாராம்.
==============
மலேசியாவில் இருக்கும் நண்பன் ஒருவன் போன் செஞ்சான்.
மலேசியா ரிங்கிட் இப்ப 20 ரூபாய் ஆச்சு....இன்னும் ஏறினா நல்லாருக்கும்ல என்றான்.
இன்னும் ஏறினா இந்திய பொருளாதாரம் தெருவுக்கு வந்திடுமேடா என்றேன்.
பிரச்சினை இல்ல........முன்னாடி 700, 800 வெள்ளி அனுப்பினாத்தான் பத்தாயிரம் கிடைக்கும் இப்ப 500 வெள்ளி அனுப்பினாலே 10 ஆயிரம் ரூபாய் வந்திடுதுல்லஎன்றான்.
அதெல்லாம் சரிதான். விக்கற விலைவாசில முன்னாடி பத்தாயிர ரூபாய்க்கு வாங்கிய பொருள் இப்ப 15000 ரூபாய் ஆகிடுச்சு. 15000 ரூபாய் மலேசியா வெள்ளிக்கு எவ்வளவு வருது என்று கேட்டேன்.
ஒரு 750 வெள்ளி வரும் என்றான்.
சரி....முன்னாடி 700 வெள்ளிக்கு பத்தாயிரம் இருக்கும்போதும், இப்ப 500 வெள்ளிக்கு பத்தாயிரம் இருக்கும் போதும் வாங்குற பொருள் ஒண்ணுதான். கூட்டிக்கழிச்சுப்பாரு கணக்கு சரியா வரும்னேன்.
================
பறவையை வீசி காயை அடித்தால் அது ஆங்க்ரி பேர்ட்.
பாத்திரத்தை வீசி மண்டையை உடைத்தால் அவள் ஆங்க்ரி வைய்ஃப்.
==============
இதுவரை காற்று, மழையின் தயவால் தலைகாட்டாமல் இருந்த திருவாளர் மின்தடை, கடந்த சில நாட்களாக ஆங்காங்கே தலை காட்டுவதாக அதிகாரப்பூர்வமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆகவே, அனைவரும் பெட்ரோமாக்ஸ், இன்வெர்ட்டர், ஜெனரேட்டர், மெழுகுவர்த்தி என்று அவரவர் வசதிக்கு தகுந்த மாதிரி மேற்கண்ட பொருட்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாங்கி வைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Tweet |
கவிதையும் நகைச்சுவையும் நன்றாக இருந்ததுங்க...மின்தடைக்கு திருவாளர் பெயரிட்டதும் அழகு.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்குஅனைத்தையும் முகநூலிலேயே வாசித்துவிட்டேன்! மீண்டும் ஒருமுறை இங்கு! நல்லா இருக்கு எல்லாமே! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமுக நூலிலும், வலைப்பூவிலும் தொடர்ந்து ஆதரவு கொடுப்பதற்கு நன்றி.
நீக்குAll are Well Kazali! Superb!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்குanaithum..
பதிலளிநீக்குpidiththathu..
வருகைக்கு நன்றி
நீக்குசூப்பரு!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அய்யா
நீக்குஅருமையான சுவாரஸ்யமான
பதிலளிநீக்குபயனுள்ள கதம்பப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இனி தொடர்ந்திடுவோம் அய்யா
நீக்குappidiye 5litre diesel, 10litre manennai, 2cylinder gasum ketturukkalame..nalla pagirvu sagothara
பதிலளிநீக்குஅஞ்சு லிட்டர் பெட்ரோலுக்கே கோபப்பட்டுட்டான். இதில் நீங்க வேற.....
நீக்குநன்றாக இருந்தது.முன்னெச்சரிக்கையும் நன்று.////சரி,ஐந்து லீட்டர் பெற்றோல் விலை எவ்வளவு?
பதிலளிநீக்குஅதான் தெரியல...இப்ப ஒரு விலையை சொன்னா, நள்ளிரவுக்கு மேல வேறு விலையா இருக்கு
நீக்குஇங்கே சவுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இரண்டு விலைகளில் கிடைக்கிறது 91 - விலை ருபாய் .7.933 & 95 premium ருபாய் 10.577. டீஸல் விலை ருபாய் 4.406 லிட்டருக்கு .
நீக்குகாஸ் சிலின்டர் ருபாய் 264.53 யார் எப்போதும், எத்தனை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் .
Ha..ha..Superya!
பதிலளிநீக்குநன்றிய்யா
நீக்குவாக்கிற்கு நன்றி
பதிலளிநீக்குபதிமூணு லட்சம் ஹிட்ஸ் விரைவில்..................!
பதிலளிநீக்குnice
பதிலளிநீக்குsivaparkavi