என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், மே 15, 2012

11 ஜெயலலிதாவின் ஓராண்டு ஆட்சி சாதனையா? வேதனையா?- ஒரு அலசல்.....




தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது ஜெயலலிதாவிற்கு......
மாற்றம் வேண்டி வாக்களித்த மக்கள் உண்மையில் மாற்றத்தை அனுபவிக்கிறார்களா? அல்லது ஏமாற்றத்தையா என்று பார்த்தால் எமாற்றம் என்ற மாற்றத்தைத்தான் மக்கள் அனுபவிக்கிறார்கள் என்றுதான் நிச்சயம் சொல்லமுடியும்

கடந்த தி.மு.க.,ஆட்சியில் முக்கியமான குற்றச்சாட்டாக ஜெயலலிதாவால் வைக்கப்பட்ட மின்வெட்டு, விலைவாசி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை போன்றவைகள் இந்த ஓராண்டில் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் நிச்சயம் மாற்றமில்லாமல் முன்பைவிட அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.



ஜெ ஆட்சிக்கு வந்ததும் முதலில் கை வைக்கப்பட்டது புதிய தலைமை செயலகம்தான். அடுத்ததாக சமச்சீர் கல்வி, அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்றவைகள். இதில் சில விஷயங்களில் கோர்ட்ட தலையிட்டு குட்டு வைத்து குட்டு வைத்து மாற்றியது. ஜெயாவின் முதல் மூன்று மாத ஆட்சியை கோர்ட்தான் நடத்தியது என்றால் அது மிகையில்லை.



அடுத்ததாக பால்விலை, பஸ்கட்டணம் உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு என்று மக்களின் அன்றாட பயன்பாட்டில் கைவைத்து வயிற்றெரிச்சலை வாங்கி கட்டியது. அதைப்போல மின்வெட்டு கடந்த தி.மு.க.,ஆட்சியில் சென்னையில் (அதுகூட பொதுத்தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்துதான்) 1 மணி நேரமும், மற்ற ஊர்களில் இரண்டு மணி நேரமுமாக இருந்த மின்வெட்டை மிகப்பெரிய பிரச்சினையாக்கி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் சென்னைக்கு இரண்டு மணி நேரமும், மற்ற ஊர்களுக்கு ஏறக்குறைய பத்து நேரமுமாக மாற்றியதுதான் சாதனை. இந்த ஆட்சிக்கு தி.மு.க.,வே மேல் நினைக்கவைத்தது இவைகள்.


அடுத்ததாக சட்டம் ஒழுங்கு..... ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் திருடர்களும் ரவுடிகளும் வாலைச்சுருட்டிக்கொள்வார்கள் என்ற நினைப்பிற்கு ஆப்படிப்பதுபோல் நடந்தது சில சம்பவங்கள். தொடர்ந்து கொள்ளை. முத்தாய்ப்பாய் அண்ணா.தி.மு.க.,வின் எம்.எல்.ஏ., பழ.கருப்பையாவின் வீட்டிலேயே கொள்ளை போனது. கொலைகளும் சர்வ சாதரணமாக நிகழ்ந்தது. சாமானியர்கள் துவங்கி ராமஜெயம் வரை.....
அதைப்போல் பரமக்குடி கலவரம்.

அடுத்ததாக..... பலமுறை மந்திரிசபை மாற்றம் நிகழ்ந்தது. சிலர் பதவி இழந்தார்கள். சிலர் பதவி பெற்றார்கள். இழந்தவர்களே மீண்டும் பதவிபெற்ற கூத்தும் நடந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக...சசிகலா நீக்கம் நடந்தது. சசி கணவர் நடராஜன் உட்பட சசியின் சொந்தங்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு(?) பின்னர் சசிக்கு மட்டும் பொது மன்னிப்பு கொடுத்து மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்ட நாடகமும் நடந்தது.


தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட மூவருக்கு தற்காலிகமாக அந்த தண்டனையை நிறுத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் போன்ற சில நல்லதும் நடந்தது. ஆனால், அது மட்டும் போதாதே ஒருவருட நல்லாட்சிக்கு?.......

மொத்தத்தில் இந்த ஒரு வருட ஆட்சி மக்கள் விரோத ஆட்சிதான் என்பதில் சந்தகமில்லை. இனி வரும் காலங்களில் பார்க்கலாம்.... ஜெ ஆட்சி எப்படி என்று?....

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்கள். அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.... மாற்றம் ஒன்று மட்டுமல்ல மாறாதது....ஜெயலலிதாவும்தான்.


தி.மு.க.ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச பொருட்களையெல்லாம் விலையில்லா பொருட்கள் என்று பெயர் மாற்றியது மட்டும்தான் ஜெ ஆட்சியின் ஓராண்டு சாதனை


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. நீங்கள் சொன்னதற்கு மாற்றுக் கருத்து இல்லையென்றே தோன்றுகிறது.இந்த ஆட்சிக்கு சென்ற ஆட்சியே பரவாயில்லை என்றுதான் ஒவ்வொரு தமிழனும் நினைக்கிறான்..

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்தில் நான் மாருபடுகின்றேன் .. சிறப்பான ஆட்சி என்று சொல்ல முடியாதுதான் ஆனால் ரொம்ப மோசம எனவும் சொல்ல முடியாது . இன்னும் ஒரு வருடம் போகட்டும் அப்பொழுதுதான் சரியாக சொல்ல முடியும் . கடந்த ஆட்சியில் மோசமான நிதிநிலையை சரி செய்யவே ஒரு வருடம் ஆகும் .

    பதிலளிநீக்கு
  3. இப்பொழுது மாணவர்களுக்கு கல்விக்காக வழங்க படும் சலுகைகளை பாருங்கள் .. முதலில் மருந்து கசபாகதான் இருக்கும் பின்புதான் அதன் பெருமை தெரியும் . முந்தய ஆட்சியில் இருந்த அரசியல் வாதிகளின் தொல்லை இப்போது உள்ளதா ?

    பதிலளிநீக்கு
  4. தலைப்பே தவறாக இருக்கு .வேதனையின் உச்சம் என்று தலைப்பு வைத்து இருக்கவேண்டும் .

    பதிலளிநீக்கு
  5. //மாற்றம் ஒன்று மட்டுமல்ல மாறாதது....ஜெயலலிதாவும்தான்//
    சூப்பர் ஃபினிஷிங்!

    முதலில் 100 நாட்களில் எதனையும் கணிக்க முடியாது, ஒரு ஆண்டாவது ஆகணும் என்றனர். இப்போது இரண்டு ஆண்டாவது ஆகணும் என்கின்றனர். பிறகு அதுக்குள்ளே ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. போன ஆட்சி செய்த தவறுகளை அறிந்துகொள்ளவே இந்தக் காலம் பத்தவில்லை என்றும் கூறிவிட்டு மீண்டும் வோட்டு கேட்க கிளம்பிவிடுவார்கள் வெட்கங்கெட்டவர்கள்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு.
    இவர்கள் ஒரு ஐந்து வருடம். அவ்வளவு தான்.
    பழி வாங்குவதிலேயே இவர்கள் பொழுது கழிந்து விடுகிறேன். இது இருவருக்கும் பொறுந்தும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஒருத்தனுக்கு ஒருத்தன் விடாக்கண்ணன் கொடாக்கண்ணன் இருக்கான்....

    அம்மாவும் விதிவிலக்கல்ல...

    பதிலளிநீக்கு
  8. /* மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்கள். அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.... மாற்றம் ஒன்று மட்டுமல்ல மாறாதது....ஜெயலலிதாவும்தான். */

    சத்தியமான உண்மை....

    பதிலளிநீக்கு
  9. கலைஞருக்கும்,ஜெயலலிதாவுக்கும் அப்பாலான புது சிந்தனைகளை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அடி ஆத்தி அரசியல் ...நமக்கு எதுக்கு வம்பு.... எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  11. என்னை பொறுத்த வரை சாதனையே

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.