என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், மே 17, 2012

7 எதிரி கட்சிகளுக்கு ஜெயலலிதா மறைமுக எச்சரிக்கை........




எதிர்கட்சிகள் சோற்றை பதம்பார்க்கும் அகப்பையாக இருக்கவேண்டும். சோற்றை பதம் பார்க்கிரேன் என்று கூறி பானையை உடைக்கும் பணியில் அகப்பை(எதிர்கட்சிகள்) ஈடுபடுமானால், அந்த அகப்பையை பதம் பார்க்க வேண்டிய நிலைதான் ஏற்படும் என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சட்டசபையில் ஓராண்டு கொண்டாட்டத்தின்போது பேசியுள்ளார் ஜெயலலிதா......அதாவது எதிர்கட்சிகள் என்னிடம் இணக்கமாக நடக்காமல் ஓவராக நடந்துகொண்டால் அவர்களை நான் பொய்வழக்கு நிலஅபகரிப்பு வழக்கு போன்றவற்றில் சிக்கவைத்து பதம் பார்த்துவிடுவேன் என்று மறைமுகமாக எதிர்கட்சிகளை பணிவன்புடன் எச்சரித்துள்ளார் ஜெ.....

==================

மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்தவர் ஜெயலலிதா என்று நேற்று சட்டசபையில் எதிர்கட்சியினர் பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளனர் ஜெயலலிதாவை....ஆம்...ஆட்சி மாற்றம் தந்த மக்களுக்கு பால் விலை, பஸ் கட்டணம், மின்சாரக்கட்டணம் போன்றவற்றில் (விலை)ஏ(மா)ற்றம் தந்தவர் ஜெயாதான். எதிர்கட்சியினர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் வஞ்சப்புகழ்ச்சியில்....ஆனால், ஜெயாவை வைத்துக்கொண்டே இப்படி பேசிய இந்திய குடியரசு கட்சி எம்.எல்.ஏ., செ.கு.தமிழரசனின் தைரியத்திற்கு பாராட்டுக்கள்.

================

நேற்று சட்டசபையில் அதிகமாகவே ஜெ துதி இருந்தது. நான் உத்தரவிட்டேன், நான் ஆணையிட்டேன், எனது ஆட்சி, எனது அரசு என்றே சொன்னார் ஜெ.,மருந்துக்கு கூட எங்கள் ஆட்சி, எங்கள் அரசு, அல்லது எம்.ஜி.ஆர். ஆட்சி, எம்.ஜி.ஆர். அரசு என்று சொல்லவில்லை. அதுவும் சரிதான். எம்.ஜி.ஆர்., எப்போது இப்படிப்பட்ட ஆட்சியை நடத்தினார். அதனால், எம்.ஜி.ஆர்.,ஆட்சி என்று சொல்லி எம்.ஜி.ஆரை கேவலப்படுத்துவதைவிட ஜெயா என் அரசு என்றே சொல்வதுதான் உத்தமம்.



Post Comment

இதையும் படிக்கலாமே:


7 கருத்துகள்:

  1. உண்மையில் நேற்றுதான் அன்னையர் தினம் போல இருந்தது. அம்மா அம்மா என்று ஆயிரம் தடவையாவது சொல்லி இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  2. மனசுல பட்டதை பட்னு போட்டு உடைக்கிறீங்க...!

    பதிலளிநீக்கு
  3. /* ஆட்சி மாற்றம் தந்த மக்களுக்கு பால் விலை, பஸ் கட்டணம், மின்சாரக்கட்டணம் போன்றவற்றில் (விலை)ஏற்றம் தந்தவர் ஜெயாதான். எதிர்கட்சியினர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் வஞ்சப்புகழ்ச்சியில்.... */

    இங்க தான் நீ நிக்கிற கசாலி....

    பதிலளிநீக்கு
  4. எதிர்கட்சிகள் சோற்றை பதம்பார்க்கும் அகப்பையாக இருக்கவேண்டும். சோற்றை பதம் பார்க்கிரேன் என்று கூறி பானையை உடைக்கும் பணியில் அகப்பை(எதிர்கட்சிகள்) ஈடுபடுமானால், அந்த அகப்பையை பதம் பார்க்க வேண்டிய நிலைதான் ஏற்படும் என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சட்டசபையில் ஓராண்டு கொண்டாட்டத்தின்போது பேசியுள்ளார்

    இப்போது அது தானே நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. ஹா..ஹா..ஹா...அம்மாவின் ஆட்டம் இனி ஆரம்பம்.:-(

    பதிலளிநீக்கு
  6. //அதாவது எதிர்கட்சிகள் என்னிடம் இணக்கமாக நடக்காமல் ஓவராக நடந்துகொண்டால் அவர்களை நான் பொய்வழக்கு நிலஅபகரிப்பு வழக்கு போன்றவற்றில் சிக்கவைத்து பதம் பார்த்துவிடுவேன் என்று மறைமுகமாக எதிர்கட்சிகளை பணிவன்புடன் எச்சரித்துள்ளார் ஜெ....
    //

    இதுதான் அம்மா ஸ்டைல்

    பதிலளிநீக்கு
  7. வஞ்சபுகழ்ச்சி ரசிக்கும்படியாக இருந்தது.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.