என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், மே 03, 2012

9 புஸ்ஸான புதுக்கோட்டை இடைத்தேர்தல்.....




கம்யூணிஸ்டை தொடர்ந்து தி.மு.க.,வும் இடைத்தேர்தலை புறக்கணித்ததால் ஏறக்குறைய ஆளே இல்லாத ரேசில் தனி ஆளாக ஒடுகிறது அண்ணா.தி.மு.க., இனி புறக்கணிக்க வேண்டியதில் ம.தி.மு.க.,வும், தே.மு.தி.க.வும்தான் பாக்கி.

ஜன நாயக முறையில் தேர்தல் நடக்காது. ஆகவே புறக்கணிக்கிறோம் என்று கலைஞர் சொல்லியிருக்கிறார். இவர்கள் ஆளுங்கட்சியாக இருந்தபோது கம்பம், இளையாங்குடி, தொண்டமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் போன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அண்ணா.தி.மு.க.,வும் இதே காரணத்தை சொல்லித்தான் தேர்தலை புறக்கணித்தது நினைவிருக்கலாம். இப்போது இது தி.மு.க.,வின் முறை போல....

ஆளுங்கட்சியாக இருந்தால்தான் தேர்தலில் போட்டியிடுவோம், சட்டசபைக்கு செல்வோம் என்று சொல்வதெல்லாம் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல....
வெற்றியோ தோல்வியோ களத்தில் இறங்கி போராடுவதுதான் அழகு...அப்படிப்பட்டவர்களைத்தான் இந்த வரலாறு நினைவில் வைத்திருக்கும்.

சரி......இனி நடக்கவேண்டியதை பார்ப்போம்.
ஏற்கனவே ஆளுங்கட்சியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருந்தாலும் வெற்றி வித்தியாசத்தை அதிகப்படுத்த ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதுக்கோட்டைக்கு இடம்பெயர்ந்தது தலைமை செயலகம். அனைத்து அமைச்சர்களையும் குவித்து களப்பணி ஆற்ற தேர்தல் பணிக்குழுவையும் நியமித்தார் ஜெயா. இனி அத்தனைக்கும் வேலை இல்லாமல் போய்விட்ட்து. அய்யா அமைச்சர் பெருந்தகைகளே தி.மு.க. புறக்கணித்த்தால் உங்களுக்கு நேரமும், பணமும் மிச்சமாகிவிட்டது. இந்த அக்னி வெயிலில் கிடந்து வேகாமல் 
போயி ஏ/சி அறையில் உட்கார்ந்துக்கொண்டு தேங்கியிருக்கிற ஃபைலை பாருங்க.....



Post Comment

இதையும் படிக்கலாமே:


9 கருத்துகள்:

  1. //வெற்றியோ தோல்வியோ களத்தில் இறங்கி போராடுவதுதான் அழகு...//

    ஏங்க இப்படி கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் பேசுறீங்க!

    //உட்கார்ந்துக்கொண்டு தேங்கியிருக்கிற ஃபைலை பாருங்க.....//

    ஒரு மனுசனுக்கு இவ்வளவு பேராசையெல்லாம் இருக்கக் கூடாது!.

    :)))))

    பதிலளிநீக்கு
  2. அடப்பாவீங்களா..என்பா புறக்கணிப்பு செய்தீர்கள்??? கஸாலி..அப்ப நம்ம மாவட்ட தலைநகருக்கு புது ரோடு கிடைக்காதா??????
    பாவம் புதுக்கோட்டை காரனுக...இடைத்தேர்தல் என்ற வுடன் கற்பனை கோட்டை கட்டி இருப்பானுவ... இப்ப எல்லாம் போச்சு..

    பதிலளிநீக்கு
  3. நான் என்ன சொல்றன்னா... தமிழகத்தை பொறுத்தவரை இடைதேர்தலே தேவை இல்லை.. ஆளும் கட்சி கிட்ட அந்த இடத்த கொடுத்துட்டு, நீங்களே MLA வ முடிவு பண்ணிக்கங்கன்னு சொல்லிடலாம்... இத நான் பல வருசமா சொல்லிக்கிட்டு வர்றேன்.. ஒரு பய புள்ள கேட்க மாட்டேங்குது...

    பதிலளிநீக்கு
  4. அவசரமா போடும் ரோடு ,நடு இரவில் கொடுக்க வைத்து இருந்த சேலை ,வேட்டி,பணம் எல்லாம் அதிமுக வினருக்கு மிச்சம் நு சொல்றேதானே .ஒரு மாதம் நல்ல இன்பஜாலிதான் என நினைத்து இருந்த குடி'மகன்களின்' கதிதான் ரொம்ப பாவம் .தவிச்சு போயிடுவாங்க

    பதிலளிநீக்கு
  5. கசாலி..

    உனக்கு மட்டும் ஏன் மைனஸ் ஒட்டு போட மாட்டேங்கிறாங்க???? அந்த ரகசியம் என்னவோ???
    எனக்கும் போடல...ஏன் தெரியுமா???

    பதிலளிநீக்கு
  6. சகோ. சிராஜ் சொல்வதுதான் சரி. அதோடு வீணான செலவும் கூட

    பதிலளிநீக்கு
  7. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.