என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், மே 08, 2012

5 புதுக்கோட்டை TO ஜார்ஜ் கோட்டை வழி இடைத்தேர்தல்.....(பாலிடிக்ஸ் பொடிமாஸ்-08-05-2012)




புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க.,இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டாலும்  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும்போல் தெரிகிறது. ம.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வின் நிலை இன்னும் தெரியவில்லை. அப்படி தே.மு.தி.க., போட்டியிடும் பட்சத்தில் அந்தக்கட்சியின் மாவட்ட செயளாலர் ஜாகீர் நிற்கலாம்.
இதற்கிடையில் விஜய டி.ராஜேந்தரின் லட்சிய தி.மு.க.,வும் போட்டியிடும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.

ஆளுங்கட்சியின் சாம, தான, பேத, தண்டத்தை மீறி ஜெயிக்கமுடியாது என்று தெரிந்தாலும், ஒரு கட்சியின் இருப்பைக்காட்ட வேண்டுமானால் அந்தக்கட்சி போட்டியிடுவதுதான் முறை. அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது.

புதுக்கோட்டை  எப்போதுமே ஒரு கட்சியின் கோட்டையாக விளங்கியதில்லை. காங்கிரஸ், தி.மு.க., அண்ணா.தி.மு.க.,என்று மாறிமாறியே ஜெயித்துவந்திருக்கிறது. புதுக்கோட்டை இடைத்தேர்தலை சந்திப்பது இது முதன்முறையல்ல...இதற்கு முன்பும் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலை சந்தித்திருக்கிறது. 1997-ஆம் ஆண்டில் அப்போதைய புதுக்கோட்டை ச.ம.உ. பெரியண்ணன்(சட்டசபையில் அப்போது கொறடாவாக இருந்தவர்....இப்போதைய தி.மு.க., மாவட்ட செயலாளர் அரசுவின் அப்பா) மரணமடைந்ததை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க.,வின் வேட்பாளர் மாரியய்யா வெற்றிபெற்றிருந்தார்.

அதைப்போலவே இப்போது ஆளுங்கட்சி வேட்பாளரே வெற்றிபெறுவார் என்பது சந்தேகமில்லை.ஓட்டு வித்தியாசத்திற்காகத்தான் ஆளுங்கட்சி போராடுகிறது.எப்படியோ இது  அண்ணா.தி.மு.க.,வினர் நகர்மன்றத்திலிருந்து சட்டமன்றத்திற்கு போகும் சீசன் போல...

=====================

இடைத்தேர்தல் என்பதே தேவையில்லை. பேசாமல் அந்த இடத்தை ஆளுங்கட்சிக்கே கொடுத்துவிட்டால் நேரமும், பண விரையமும் கணிசமாக தவிர்க்கப்படும் என்பது சிலரின் கூற்று.
அப்படியெல்லாம் சட்டத்தை திருத்தமுடியாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் மட்டும்தான் ஆளுங்கட்சி தன் சர்வ பலத்தையும் பிரயோகித்து இடைத்தேர்தல்களில் ஜெயிக்கிறது. மற்ற மாநிலங்களிலெல்லாம் ஆளுங்கட்சியை மீறி எதிர்கட்சிகள் இடைத்தேர்தலில் ஜெயிப்பது வாடிக்கையான ஒன்றுதான். அப்படி இருக்கும்போது தேர்தல் கமிஷன் மாநிலத்திற்கு ஒரு சட்டம் போடுவது முடியாது. தனியாக தமிழ் நாட்டிற்கென்றெல்லாம் சட்டம் போடுவது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று.

போட்டியிட ஆளே இல்லாவிட்டால் அன்-ஆப்போசிட்டாக ஒரு கட்சி வேட்பாளர் ஜெயிக்கலாம். ஆனால் யாரவது ஒருவர் போட்டியிட்டுவிட்டால் அவர் சுயேட்சையாக இருந்தாலும் கூட....தேர்தலை சந்தித்தே ஆகவேண்டும் என்பதுதான் நடைமுறை.

====================

வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்று ஒரு ரிசிப்ட் வரவேண்டும் என சுப்ரமணியம் சாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் கமிஷனுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டிஸ் அனுப்பியுள்ளதாம் கோர்ட்....அதுசரி....இதில் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கேப்பா.... நல்லதுன்னு பார்த்தா நம்ம ஒரு குறிப்பிட்ட கட்சிக்குத்தான் வாக்களித்தோமா என்ற சந்தேகம் இதன் மூலம் தெளிவாகும். ஜெயலலிதா போன்றவர்கள் தோற்கும்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என்றெல்லாம் குற்றம் சொல்ல முடியாது. அதைப்போல் எங்கள் கட்சிக்குத்தான் ஓட்டுப்போட்டீர்கள் என்று சான்று கொண்டுவந்து காட்டிவிட்டு உங்களுக்கான சலுகைகளை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் கட்சிகளுக்கு தேவையில்லாத பண விரையம் தவிர்க்கப்படும். தமக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் பணம் பட்டுவாடா செய்யலாம்.

கெட்டதுன்னு பார்த்தா.....
ஒரு கட்சி ஆளுங்கட்சியாக வந்துவிட்டால் தமக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் சலுகை காட்டிவிட்டு மற்றவர்களை தவிக்க விட்டுவிடலாம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


5 கருத்துகள்:

  1. //ஒரு கட்சி ஆளுங்கட்சியாக வந்துவிட்டால் தமக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் சலுகை காட்டிவிட்டு மற்றவர்களை தவிக்க விட்டுவிடலாம்.

    இப்போ செய்யிற மாதிரி எல்லோரையும் தவிக்க விட வேண்டியதில்லை சரிதானே?

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு.
    ஓட்டுப் போட்டதற்கு ரசீது கொடுத்தால் பிரச்னைகள் கூடும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ரிசிப்ட் கொடுப்பதெல்லாம் வெட்டி வேலை...இதனால் சண்டை தான் அதிகம் நடக்கும்....
    120 கோடி மக்கள் இருக்கிற நாட்டில் ரெசிப்ட் லாம் கடுப்ப கெளப்புற வேல...
    இந்த சுப்பரமணிய சாமி இனி கேஸ் போடக்கூடாதுன்னு சொல்லி கேஸ் ஒன்னும் போடணும் மொதல்ல...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.