என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், மே 30, 2012

13 பவர்ஸ்டாரை அவமானப்படுத்திய கோபிநாத்திற்கு நன்றி.........






நேற்று தமிழ்மணத்திலும் சரி, திரைமணத்திலும் சரி சூடான இடுகைகளில் பவர்ஸ்டார் கலந்துகொண்ட நீயா நானா நிகழ்சி பற்றிய பதிவுகளே அதிகம் இருந்தது. சரி அப்படி என்னதான் பேசிட்டாரு கோபிநாத்ன்னு பார்த்தா....பவர்ஸ்டாரை கூப்பிட்டு உட்கார வச்சு அசிங்கப்படுத்தியிருக்காருன்னு மட்டும் நல்லா விளங்குது. (அதுபற்றி நிறைய பதிவர்கள் கிழிகிழியென்று கிழித்து விட்டார்கள். நம்ம வேறு எதை எழுதுவது? அதான் சுருக்கமாக பார்ப்போம்).

அப்படி அசிஙகப்படுத்தப்படும் நேரத்தில் கூட பவர்ஸ்டாரின் பொறுமையும், அமைதியும் ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு ஒரு நல்ல மனிதரா என்று......(பீசு பீசா கிழிக்கும்போது ஏசு போல பொறுமை பாரு-ங்கற பாட்ஷா படத்தின் பாடலை இவருக்காகவே எழுதியிருப்பார் போல வைரமுத்து)

அன்று அவர்காட்டிய அசாத்திய பொறுமைதான் நேற்றுவரை அவரை காமெடி பீசாக பார்த்துக்கொண்டிருந்த பதிவர்கள் இன்று கரிசனத்துடன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்அதற்காகவே கோபிநாத்திற்கு நன்றி சொல்லவேண்டும், இவ்வளவு ஒரு நல்ல மனிதரை தன் அபத்தமான கேள்விகள் மூலம் அடையாளம் காட்டியதற்காக..........


========================



ஒரு ஆர்வத்தில BSNL மானிய விலையில் கொடுத்த penta T-Pad IS701R  என்ற மாடல் டேப்ளட்டை ஆன்லைன் மூலம் பனம் கட்டி வாங்கி தொலைத்தேன். அவர்களும் அனுப்பி  இரண்டு வாரம் ஆச்சு. இன்னைக்கு வரையில் அதை ஓப்பான் செய்யவே முடியல.... நானும் நொய்டாவிற்கு ஈமெயில் அடித்தும் கேட்டுவிட்டேன். பதில் இல்லை. கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றாலும் மணிக்கணக்கில் காத்திருக்க வைத்துவிட்டு கட் செய்து விடுகிறார்கள். மீண்டும் கடுப்புடன் தயவு செய்து என் டேப்ளட்டை மாற்றி தார்ங்கள். அல்லது என் பணத்தை ரீ-ஃபண்ட் செய்துவிடுங்கள் என்று கூட மெயில் அனுப்பி பார்த்துவிட்டேன். ம்...ஹூம்... அசைந்து கொடுப்பது போல் தெரியவில்லை. ஏண்டா இந்த சனியனை வாங்கினோம் என்று நினைக்கும் அளவிற்கு வந்துவிட்டது. இந்த penta  T-Pad  சர்வீஸ் செண்டர் ஏதாவது சென்னையில் இருக்கான்னு தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். அல்லது வேறு ஏதாவது மாற்று வழி இருந்தாலும் சொல்லுங்கள் நண்பர்களே.....

==========================

பதிவர் அறிமுகம்.....

பதிவர் ராஜா முகம்மது. புதியவர்தான். முன்று நாட்கள்தான் ஆகிறது பிளாக் துவங்கி....இணைய(யா)க்காதல்ன்னு ஒரு அருமையான கவிதையை எழுதியிருக்கார்.படித்துப்பாருங்கள் அவர் ரசனையை....

===================

ஒரு ஜோக்....

பெட்ரோல் விலை உயர்வையும், தட்டுப்பாட்டையும் கண்டித்து தீக்குளிக்கப்போறேன்னு என்ன தைரியத்துல நம்ம தலைவர் சொல்றாரு?

தீக்குளிக்க பெட்ரோல் கிடைக்காமல் தட்டுப்பாடா இருக்க தைரியத்தில்தான்.

==================




ஆயிரம் சன்னியாசிகளை பலிகொடுத்தாவது ஆதீனம் சொத்துக்களை மீட்டெடுப்போம்- நித்தியானந்தா#
 நல்லவேளை சன்னியாசிகளை என்று சொல்லியதால் நித்தி தப்பித்தார்.



Post Comment

இதையும் படிக்கலாமே:


13 கருத்துகள்:

  1. பொது இடத்தில் ஒரு மனிதனை எப்படி நடத்த வேண்டும் என்கின்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத கோபிநாத்துக்கும், புவியரசுக்கும் வன்மையான கண்டணங்கள் ..!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்! கோபிநாத் பவர்ஸ்டாரை அசிங்கப்படுத்த நினைத்து தான் அசிங்கப்பட்டு விட்டார்! நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  3. வாயைக் கொடுத்து, புண்ணாக்கிக்கிட்டாரு கோபிநாத்.

    பதிலளிநீக்கு
  4. T-Pad சர்வீஸ் செண்டர் ஏதாவது சென்னையில் இருக்கான்னு தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
    ////////////////////
    செவ்வாய் கிரகத்தில தேடினாலும் கிடைக்காது! ஹிஹி! BSNL ல்ல மட்டும் எதையும் வாங்கக் கூடாது கஸ்டமர் கேர்க்கு மன்மோகன் கூப்பிட்டாலும் போகாது? இப்படி ஏமாந்துட்டிங்களே!

    பதிலளிநீக்கு
  5. அதி புத்திசாலியும் சிலநேரங்களில் அடிமுட்டாள் ஆவான் .பவர் ஸ்டாரின் உண்மை முகத்தை வெளிவரவைக்கிறேன் என சொல்லி கோபிநாத்தின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது .அவர்தான் சித்தவைத்தியம் செய்கிறார் என்பது தெரிந்தும் அவரிடம் எதை வெளிக்கொண்டுவர முயர்ச்சி செய்தார் என்பது தெரியவில்லை .

    பதிலளிநீக்கு
  6. கஸாலி நானா,

    அருமையான பதிவு... பவர்ஸ்டார வார நினைக்கிற யாரும் கீழ விழாம இருக்க மாட்டாங்க என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி இருக்கு..

    பதிலளிநீக்கு
  7. பொடிமாஸ் நல்லா இருக்கு...

    சக பதிவராக சில ஆலோசனைகள்:
    தலைப்பில் பொடிமாஸ் - தேதி மட்டும் போடுங்கள்... உள்ளே என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று தலைப்பை பார்த்ததும் தெரியக்கூடாது... (வளவளன்னு டைட்டில் வச்சா எப்படி?)

    நீங்கள் அரசியல் ஸ்பெஷலிஸ்ட் என்று அனைவருக்கும் தெரியும்... ஆனால் கலவை இடுகைகளில் எல்லாமும் இருக்க வேண்டும்... அரசியல், சினிமா, ஸ்போர்ட்ஸ், ஜோக்ஸ், கவிதை, உங்கள் சொந்த அனுபவம், உலக நடப்பு இப்படி உங்களுக்கென்று ஒரு ஃபார்முலாவை உருவாக்கி வைத்துக்கொள்ளுங்கள்...

    எந்த விஷயத்தை பற்றி எழுதினாலும் வெறும் செய்தியாக எழுதாதீர்கள்... முதல் வரியில் மட்டுமே செய்தி இருக்க வேண்டும்... அதன் பிறகு அந்த செய்தியின் மீது உங்கள் கருத்து என்ன என்பதை வீரியத்துடன் சொல்லுங்கள்...

    திரட்டிகளில் இணைக்கும் போது உங்கள் இடுகையின் மிகச்சிறந்த நான்கு வரிகள் எது என்பதை கணித்து அதனை பயன்படுத்தவும்...

    முக்கியமாக திங்கட்கிழமை என்றால் வாராவாரம் தவறாமல் திங்களன்று பதிவிடவும்... இல்லையெனில் உங்கள் மீதுள்ள நம்பிக்கை குறைந்துவிடும்...

    இப்படியெல்லாம் தொடர்ந்து செய்தீர்கள் என்றாலும் ஆரம்பத்தில் கூட்டம் குறைவாகவே இருக்கும்... நான்கைந்து வாரங்களில் உங்கள் மீதான நன்மதிப்பு கூடி ரெகுலர் வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிப்பார்கள்...

    நம்புங்கள்...

    பதிலளிநீக்கு
  8. கோபிநாத்திற்கு எல்லாம் தெரியும் என்கிற நினைப்பு !
    பதிவர் அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  9. கேட்ட கேள்விகளே அராஜகமாக இருக்க ,அதற்கு மற்றவர்கள் கேலி கமெண்ட்டுகள் அடிப்பதை காண்பித்தது கொச்சையான செயல்

    பதிலளிநீக்கு
  10. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். பவர் ஸ்ரார் - நான் பனங்காட்டு நரி இந்தச் சலசலப்புக்கஞ்சேன் எனத் திடமாக இருந்தார்.
    கோபிநாத் சுற்றி வளைத்து கேள்விகள் கேட்டபோதும் சளைக்காமல் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
    கடைசியில் கோபிநாத் தான் தன் முதல் எதிரி என நெற்றியில் அடித்ததுபோல் கூறினார்.
    அப்போ கோபி அசடு வழிந்ததைப் பார்க்கமுடிந்தது.

    பதிலளிநீக்கு
  11. sirappu virundhinaraga azhakka pattavaridam irandu tharppu vivadhangalukku vilakkam ketkalame thavira avariye kevalapaduthum nigazhchiyaga than niyaa naana irundhadhu. idhil varutha padakoodiya innoru vishaiyam srinivasanai, puviyarasu thiraipadathil nadikka kuraindha patcha cinema arivu kooda illamal thiraikku vandhirukkirar endru kutram saatiyadhu. KADAISIYIL MOOKKUDAI PATTADHU gopinathum puviyarasume thavira srinivasan alla...!

    பதிலளிநீக்கு
  12. அநாகரிகமான செயல் தான்!

    ஆனா கோபிநாத் கேட்ட கேள்வி பலமுறை நானே கேட்டுக்கொள்வதுண்டு! தன்னை ஏன் அவர் "அப்படியாக" காட்டிக்கொள்ள வேண்டும் என! அவரை கேலி செய்யும் தொணியி பேட்டி கேள்வி கேட்டால் அவரும் ஏன் அதற்கு இணையாக அந்த வட்டத்தை விட்டு வராமல் அதே பாணிய்ல் பதில் சொல்ல வேண்டும் என யோசிப்பதுண்டு. கோபி கேட்டதில் தவறு இல்லை தான்!

    ஆனா சபை நாகரிகம் காக்கப்படவில்லை/கடைபிடிக்கப்ப்படவில்லை :-)

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.