என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், மே 23, 2012

21 ஹாய் மதனுக்கு பாய் சொன்ன விகடனும் என் கேள்விகளும்.....



வழக்கமாக விகடனில் ஹாய் மதன் பகுதியில் நாம் கேள்விகேட்டு மதன் பதில்  சொல்வார். ஆனால், இந்தமுறை கொஞ்சம் உல்டாவாக மதன் கேள்விகேட்டு விகடன் பதில் சொல்லியிருக்கிறது தடாலடியாய்.....அத்துடன் இனி மதனின் கேள்வி பதில் பகுதியும், கார்ட்டூனும் இனி விகடனில் இடம் பெறாது என்ற அறிவிப்புடன்......

கடந்த 30 வருடங்களாக மதன் விகடனில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன் பங்களிப்பை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் செய்துகொண்டே வந்திருக்கிறார் விகடனுக்காக.....அப்படிப்பட்டவரை திடீரென நீக்குமளவிற்கு என்னதான் பிரச்சினை விகடனுக்கும் மதனுக்கும்?....

விகடனில் மதன் வேலைக்கு சேர்ந்தது ஒரு கார்ட்டூனிஸ்டாகத்தான். பின்னர் தன் திறமை மூலம் விகடனில் இணையாசிரியர் அளவிற்கு உயர்ந்தார். 90-களின் ஆரம்பத்தில் ஜூ.வி.,யில் தான் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் தொடர் மூலம் பலரையும் சென்றடைந்தார். அதற்கு பின் ஹாய் மதன் என்ற கேள்வி பதில் பகுதியை ஆரம்பித்து மதனுக்கு களம் அமைத்து கொடுத்தது விகடன்.

அரசியல், சமூகம், சினிமா, வரலாறு என்று வானவியல் தொடங்கி விலங்கியல் வரை அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி தான் ஒரு இண்டெலெக்சுவல் என்று நிரூபித்தார் மதன்.

அப்படி இருக்கும்போது இதற்கு முன்பும் ஒருதடவை விகடனோடு முரண்பட்டு இணையாசிரியர் பொறுப்பிலிருந்தும்,விகடனிலிருந்தும்  வெளியேறினார் மதன். ஆனாலும், ஹாய் மதன் பகுதியும், கார்ட்டூனும் தொடர்ந்து விகடனில் வந்துகொண்டுதான் இருந்தது கடந்த இதழ்வரை. ஆனால், இந்தமுறை நிலைமை கொஞ்சம் இல்லை...இல்லை... அதிகம் சீரியஸாக போய்விட்டது.

மூன்று வாரத்திற்கு முன்பு வெளியான விகடன் ஹாய் மதன் பகுதியில் காலில் விழுதல் சம்பந்தப்ப்ட்ட கேள்விக்கு ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற ஒரு புகைப்படத்தை சேர்த்திருந்தார்கள். அதற்கும் மதனுக்கும் சம்பந்தமில்லாவிட்டால் கூட அது அவருக்கு சங்கடத்தை உண்டாக்கியிருக்கிறது.



இதற்கு முன் எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாமல், சுதந்திரப்பறவையாக விகடனில் சிறகை விரித்த மதன் இப்போது ஜெயா டி.வி.,யில் சினிமா விமர்சனம் செய்யும் பொறுப்பில் இருப்பதுதான் அவரின் சங்கடத்திற்கு காரணம்.

உடனே, விகடனுக்கு தன் நிலைமையை விளக்கி ஒரு கடிதம் எழுதினார் மதன். அந்தக்கடித்தத்தில் மதன் கூறியிருக்கும் காரணங்கள் வேடிக்கையானது. அதாவது....
ஜெயா டி.வி.,யில் நான் சினிமா விமர்சனம் செய்து வருவதால் அந்த புகைப்படம் வெளியாகியதற்கு நான்தான் காரணமென்று நினைத்துக்கொள்ள மாட்டார்களா? ஜெயா டி.வி.தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால் நான் என்ன செய்வது? என்ற ரீதியில் கேட்டுள்ளார். அந்த புகைப்படம் பற்றியெல்லாம் கேள்வியே வராது என்பது என் அனுமானம்.
அந்தப்புகைப்படம் வெளியானதற்கு ஆசிரியர் குழுவில் இல்லாத மதன் காரணமல்ல....ஹாய் மதன் பகுதியில் இடம்பெற்றுள்ள பதிலுக்கு மட்டுமே மதன் பொறுப்பு....அதில் இடம்பெற்றுள்ள படத்திற்கு அல்ல என்று விளங்கிக்கொள்ளமுடியாத அளவிற்கு ஜெயா டி.வி.யினர் தற்குறிகள் அல்ல.....

ஜெயா டி.வி.,யில் எத்தனையோ திரை விமர்சனத்தை மதன் செய்திருக்கிறார். அப்படி செய்யும்போது அந்தந்த திரைப்படத்தின் கிளிப்பிங்சையும் எடுத்து போடுவார்கள். அப்படி போடும்போது சில கவர்ச்சி காட்சிகளும் அதில் இடம் பிடித்து விடும். அப்படி இடம்பெறும் கவர்ச்சி காட்சிகளுக்காக மதன் பொறுப்பேற்க முடியாது. ஏன் இப்படிப்பட்ட கவர்ச்சி காட்சிகளை சேர்த்தீர்கள் என்று அதற்காக, ஜெயா டி.வி., நிர்வாகிகளிடம் மதன் இப்படித்தான் கேள்வி கேட்பாரா?

அடுத்து முக்கியமான பிரச்சினைகள் எத்தனையோ சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் அப்பாயிமெண்ட் கேட்டு நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்தியிருப்பது முறையா? என்றும் மதன் கேட்டிருக்கிறார். அந்தக்கேள்வியை படித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது.... பின்னே...வராதா என்ன? எந்த உலகத்தில் இருக்கிறார் மதன்?

ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயிமெண்ட் கேட்டு மாதக்கணக்கில் காத்திருக்கும் கூட்டணிக்கட்சியினரை கேட்டுப்பாருங்கள் மதன்....ஜெயாவை சந்திப்பது எவ்வளவு சிரமமென்று? அப்படி இருக்கும்போது இந்தப்புகைப்பட பிரச்சினைக்காக ஜெயலலிதா இவரை அழைத்து பேசுவார் என்பது மதனின் அதீத கற்பனை.

ஜெயலலிதா யாரையாவது நீக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால் ஷோகாஸ் நோட்டீசெல்லாம் அனுப்பிக்கொண்டிருக்க மாட்டார். ஸ்ட்ரைட்டா நீக்கம்தான் என்று அவரைப்பற்றி அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்....அவராவது மதனிடம் விளக்கம் கேட்பதாவது?

காலில் விழுவது என்றாலே பட்டென்று நம் நினைவிற்கு வருவது ஜெயலலிதா கட்சியினர்தான்.
அடுத்ததாக, காலில் விழுதல் என்று கூகுள் சர்ச்சில் டைப் செய்து தேடிப்பார்த்தால் ஜெயலலிதா காலில் அண்ணா.தி.மு.க.,வினர் விழும் புகைப்படம்தான் அதிகம் கிடைக்கும்.(ஆனாலும் அந்த புகைப்படத்தை தவிர்த்திருக்கலாம் விகடன்).

மதன் விஷயத்தில் விகடனின் செய்கை சரிதான் என்பது என் கருத்து. காலில் விழும் படத்தை சேர்த்ததற்கே இத்தனை கேள்வி எழுப்பிய மதனால், எப்படி அண்ணா.தி.மு.க.,வின் ஆட்சியை, அவலத்தை கார்ட்டூனாக போட முடியும்?....பதிலாக சொல்லமுடியும்?...

எந்த ஒரு சமயத்திலும் எந்த ஆட்சியாளருக்கும் பணியாமல், நாட்டில் நடக்கும் அவலங்களை கார்ட்டூனாக வரைந்த மதனுக்கு இது போதாத காலம்தான். சே....எப்படி இருந்த மதன் இப்படி ஆகிட்டாரே?.....

பின் குறிப்பு: நானும் மதனின் ரசிகர்தான். ஜுனியர் விகடனில் அவர் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் தொடரை சிலாகித்து படித்த லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். என் கேள்வியும் 1998-ஆம் ஆண்டுவாக்கில் ஹாய் மதனில் இடம் பெற்றிருக்கிறது. 2000-ஆம் ஆண்டில் சில மாதங்களே வெளியான மாதமிருமுறை பத்திரிகையான வின் நாயகன் பத்திரிகையை மதன் எழுதிய காதல் வாழ்க தொடருக்காவே வாங்கி படித்திருக்கிறேன். அந்தப்பத்திரிகையின் பிரதிகள் இன்னும் என்னிடம் உண்டு.

இந்த பதிவை தவிர்க்கவே நினைத்தேன். இந்த பிரச்சினையை பற்றி அறந்தாங்கியை சேர்ந்த என் பள்ளி நண்பன் ராஜா ஃபேஸ்புக்கில் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்த பதிவை எழுதினேன்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


21 கருத்துகள்:

  1. ரைட்.. நீங்க பர்பெக்ட்டா இருக்கீங்க... ஆனால் மதன்..!!!???

    அவரும் தன்னோட நிலைமையில சரியாதான் இருக்கார்னு நான் நினைக்கிறேன்.

    தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதானே தெரியும்ங்கிறது அனுபவ மொழி வாத்யாரே.. அவனவனக்கு ஆயிரம் பிரச்னை.. !

    'மதன்'ங்கிற இலக்கியவாதியை, கார்ட்டூனிஸ்டை, பத்திரிகை ஆசிரியரை எனக்குத் தெரியும். ஜெயா டி.வி.யில் சினிமா விமர்சனம் செய்பவராக எனக்குத் தெரியாது. பதிவைப் படித்துதான் தெரிந்துகொண்டேன்.

    ரஹீமோட பண்பே இதுதான். மனசுல என்ன தோணுதோ அப்படியே போட்டு உடைச்சிட வேண்டியது.. உடைச்சிட்டீங்க.. தல...!

    பதிலளிநீக்கு
  2. இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

    ****என்ன சொல்ல வர்றீங்க ரஹீம்கஸாலி சார்..****

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆபாசமில்லாமல் நல்ல வார்த்தைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள் என்று சொல்ல் வர்றேன் நண்பா....

      நீக்கு
  3. மதன் தரப்பில் தவறுகள் இருக்கின்றன என்பது சரியே. ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் சில விளக்கங்கள் கேட்டு ஆசிரியருக்கு அனுப்பிய கடிதத்தைப் பத்த்திரிகையில் ஏன் போட வேண்டும்? அதற்கு அவர் அனுமதி பெறப்பட்டதா? இதற்குமுன் எத்தனையோ பேரை நீக்கும்போதெல்லாம் காரணம் சொல்லிவிட்டா நீக்கினார்கள்?

    இப்போ மட்டும் மதன் மீது சேறு வாரியிறைபப்தைப் போல ‘சார்புநிலை எடுப்பார்’ என்று குற்றம்சாட்டி நீக்குவது ஏன்? விகடன் எந்தச் சார்புநிலையும் எடுத்தததே இல்லையா?

    மதனின் கேள்வி-பதில்களில் (முன்பு) அறிவியல் பதில்கள் சுஜாதாவின் பதிலகளுக்கு ஒப்பான அளவில் இருந்தது. அவரின் தொடர்கள் மிகச் சுவாரஸ்யமானவை. விகடனின் வளர்ச்சியில் அவருக்கும் கணிசமானப் பங்கு உண்டு. அத்தகைய ஒருவர் இன்னொரு இடத்திலும் வேலை பார்க்கிறார் என்றால், அந்த வேலைக்குத் தன்னால் பங்கம் வராமல் பார்த்து, வளர்த்து விடுவதே ஒரு நல்ல முதலாளியின் தகுதி. விகடனில் அதர்கு இப்போது தட்டுப்பாடு போல!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்குமுன் எத்தனையோ பேரை நீக்கும்போதெல்லாம் காரணம் சொல்லிவிட்டா நீக்கினார்கள்? ///
      நியாயமான கேள்வி...விகடனிலிருந்து மற்றவர்கள் நீக்கப்படுவதற்கும் மதன் நீக்கப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளது. மதன் மற்றவர்களை போல் அல்ல....கார்ட்டூனும், ஹாய் மதன் பகுதியும் தொடர்ந்து விகடனில் வந்துகொண்டிருந்தது. திடீரென்று அந்தப்பகுதிகள் விகடனில் வராவிட்டால் வாசகர் மத்தியில் மதனுக்கு என்னாச்சு என்ற கேள்வி எழும். அப்படி கேள்வி எழும் பட்சத்தில் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டியது விகடனின் கடமை. அந்த விளக்கத்தை தாமதமாக சொல்வதற்கு பதில் இப்போதே சொல்லிவிட்டது விகடன்.அவ்வளவுதான்

      நீக்கு
    2. ஊடகங்களின் நடு நிலை எப்போதும் கேள்விக்குரியதாகவும், கேலிக்குரியதாகவும் இருந்துகொண்டேதான் இருக்கிரது. இதற்கு விகடன் மட்டும் விதிவிலக்கல்ல...அதேநேரம் தலையங்கம் மூலம் யாரையும் குட்டத்தவறியதில்லை விகடன் என்பது என் தனிப்பட்ட கருத்து

      நீக்கு
  4. அதே விகடனில், கருணாநிதி காலில் டி.ஆர்.பாலு விழும் காட்சியும் இடம்பெற்றிருப்பது ‘தற்செயல்’தானோ!! :-)))))

    இதைக் குறித்து இன்னும் விளக்கமாகப் பேசும் இரு பதிவுகள்:

    http://oosssai.blogspot.com/2012/05/blog-post_21.html
    http://www.savukku.net/home1/1561-2012-05-18-18-20-48.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பிரச்சினையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை, ஒரு கோணம் இருக்கிறது. சவுக்கும், ஓசையும் இந்த பிரச்சினையை அவரவர் கோணத்தில் பார்வையில் அலசியிருக்கலாம். நான் என் கோணத்தில் பார்வையில் அலசியிருக்கிறேன். அவர்களின் பார்வையையே நானும் பிரதிபலிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

      நீக்கு
    2. //அவர்களின் பார்வையையே நானும் பிரதிபலிக்க வேண்டும்//

      நான் அப்படிச் சொல்லலையே? இதுசம்பந்தப்பட்ட நான் படிச்ச வேறு இரு பதிவுகளை இங்கே பகிர்ந்தேன் அவ்வளவுதான். எதையும் நான் சிறப்பிக்கவும் இல்லையே. :-))))))))

      நன்றிங்க.

      நீக்கு
    3. வருகைக்கு நன்றி சகோ.... நானும் தவறாக சொல்லவில்லை. என் கருத்தை சொன்னேன்.

      நீக்கு
  5. என்னை பொருத்தவரை விகடன் நடுநிலை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது செய்த மதனின் நீக்கம் பல நாட்களாக இருந்த விரிசலின் முடிவு.
    விகடனை திறந்தவுடன் மதனை தேடும் என்னை போன்றவர்களுக்கு இது பெரிய இழப்பு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விகடன் மட்டுமல்ல.... இன்று பத்திரிகைகள் பலவும் நடுநிலை தவறிவிட்டது என்பது உண்மை. ஊடகங்களில் நடுநிலை என்பது வைக்கோல் போரில் ஊசியை தேடுவது போல கடினமானது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பல நாட்களாக மதனுக்கும் விகடனுக்கும் இருந்த விரிசலின் முடிவு இது என்பதாகவும் இருக்கலாம். விரிசலுக்கு பல காரணம் இருக்கலாம். ஆனால், விலக்கலுக்கு விகடன் சொல்லியிருக்கும் விளக்கம் சரியானது

      நீக்கு
  6. நான் எனது 100-ஆவது பதிவிற்கான தயாரிப்பில் இருந்ததால், இந்த
    விகடன் + மதன் விஷயம் பற்றி பிளாக்கில் போடவில்லை.பதிலாக
    17.05.2012 அன்று ஃபேஸ்புக்கில் நான் போட்ட ஸ்டேட்டஸ் இங்கே உங்கள் பார்வைக்கு:



    "க.தியாகராசன் ஒரு கேள்வி கேட்டாலும் கேட்டார்; இவ்வளவு பிரச்சினையாயிடுச்சி. அவர் கேள்வி
    கேட்குறதுக்கு முன்னயே ஜெ...வை மனதில் வைத்துதான் கேட்டிருப்பார் (என்று நினைக்கிறேன்).
    அந்தக் கேள்வியப் படிக்கும்போதே மதனுக்கும், ஜெ...வை ஞாபகம் வராமல் இருந்திருக்காது.
    அப்படியும் அந்த(!)ப் படத்தைப் போட்டதிலும் தப்பில்லை. ஏனென்றால், அதே மாதிரியான
    படங்கள் எல்லாப் பத்திரிகைகளிலும் ஏகப்பட்ட தடவைகள் பிரசுமாகியுள்ளனவே!
    ... மேலும், அந்தப் படம் தப்பு என்றே ஜெ... எடுத்துக் கொண்டாலும் அவர் (ஜெ...)
    இவ்வாறு நடக்காமல், அதாவது காலில் விழாமல் தடுத்துக் கொள்ள வேண்டியது
    அவருடைய பொறுப்புதான். அதேசமயம் இதற்கு மாறாக அதை ஊக்குவிப்பதே ஜெ...தான்.

    "ஜெயா ட்டீவி.யி.யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால் இதன் பின்னனியை
    விவரமாக விளக்க வேண்டி வராதா?" என்று மதன் கேட்கிறார். மதன் அவர்கள்
    விகடன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இல்லை. அவர் ஃப்ரீலான்சர் தான்.
    கேள்விக்கு பதில் மட்டும் எழுதும் எழுத்தாளர்தான். எழுதிக் கொடுப்பதோடு
    அவர் பணி முடிந்தது. படங்கள் சேர்ப்பது, லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டும்
    அதற்கு ஒப்புதல் கொடுப்பதோ, யோசனை கொடுப்பதோ ஆசிரியர் குழுவும்தான்.
    இது ஜெயா ட்டீ.வி.யின் தலைமைக்குத் தெரியாதா? அல்லது அந்தத் தலைமை(!)
    கூப்பிட்டுக் கேட்டால் மதனுக்குச் சொல்லத் தெரியாதா?

    "தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்மென்ட் கேட்டு" என்று சொல்லும் மதன் அவர்களே...
    ஏன் அப்பாயின்மென்ட் கேளுங்களேன்; கேட்டு உங்கள் வாதத்தை சொல்லுங்களேன். விகடனுக்காக
    எத்தனையோ தடவைகள் சந்தித்துள்ளீர்களே, இப்போதும் சந்தியுங்கள். ஆனால் 1 (ஒன்று).
    இந்த சேதி ஜெ.. காதுக்குப் போனால்.... அப்பாயின்மென்ட்டோ, கூப்பிடவோ மாட்டாங்க.
    மறுநாள் டாக்டர் எம்ஜியாரில் கட்டம் கட்டி நியூஸ்லாம் வராது. உடனடியாக
    ஜெயா ட்டீ.வி.( சினிமா விமர்சனம் நிகழ்ச்சி)யிலிருந்து டிஸ்மிஸ்தான். இது உங்களுக்குத்
    தெரியாதா? முன்னே விகடன்லருந்தும் அப்புறம் குமுதத்திலிருந்தும் வெளியே
    வந்தீங்களே, அது மாதிரி வந்துடுங்க. இந்தச் சேனல் வேலை இல்லாட்டி என்ன?
    வேற சேனல் போங்க!

    சார்புத் தன்மையுள்ள மதனிடமிருந்து கார்ட்டூன் பொறுப்பையும் பதில்கள் பொறுப்பையும்
    திரும்பப் பெற்றுக் கொண்டது விகடனின் சரியான, நியாயமான செயல்தான் என்பதில்
    சந்தேகம் ஏதுமில்லை.

    கடைசியாக, தியாகராசன் இப்ப வி.ஐ.பி. ஆயிட்டாரு!!! (முன்னமயே வி.ஐ.பி.யோ?)See More
    LikeUnlike · · Share · May 17 at 10:07pm ·"

    பதிலளிநீக்கு
  7. எனது இரு கமெண்ட்-கள் பப்ளிஷ் ஆகிவிட்டு மீண்டும் மறைந்து விட்டன.
    என்ன நடக்கின்றது கஸ்ஸாலி பாய்?

    பதிலளிநீக்கு
  8. மதனுக்கே விமர்சனம் பின்னீட்டிங்க போங்க

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    பதிலளிநீக்கு
  9. NIZAMUDEEN23-May-2012 1:09:00 PM
    சரியான கருத்து!
    -----------------------------------
    சொல்லவந்ததை நாகரீகமா..........................

    திருவாளப்புத்தூர் முஸ்லீம்23-May-2012 8:02:00 PM
    மதனுக்கே விமர்சனம் பின்னீட்டிங்க போங்க

    ==================================================

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.