என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, மே 25, 2012

17 ஜெயலலிதாவின் சாபமும்...சகாயத்தின் மாற்றமும் (பொடிமாஸ்-25-05-2012)



ஜெயலலிதா எதிர்கட்சியாக இருக்கும்போது விடவேண்டிய அறிக்கையையெல்லாம் இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது விடுவதாகவே தோன்றுகிறது. பெட்ரோல் விலையேற்றம் பற்றிய தன் அறிக்கையில் ஏழை,எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த பெட்ரோல் விலை உயர்வை உடனே மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் மக்கள் விடும் கண்ணீர் மத்தியில் ஆளும் மக்கள் விரோத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விரைவில் வீழ்த்திவிடும் என்று சாபம் கொடுத்துள்ளார். என் கேள்வியெல்லாம் தமிழ்நாட்டில், இவர் எந்த விலையையும் ஏற்றாதது போலவும், மக்கள் என்னவோ ஜெயா ஆட்சியில் ஆனந்த கண்ணீரில் மிதப்பது போலவும் ஒரு நினைப்பில் இருக்கிறாரோ என்னவோ....மற்றவர்களை குறை கூறும் முன்பு தன் முதுகை ஒருதடவை திரும்பிப் பார்த்துக்கொள்ளுங்கள் மேடம்..... நீங்கள் மத்திய அரசுக்கு விடும் சாபம் பூமராங்காய் உங்களுக்கே திரும்பி விடப்போகிறது.  நான் பெட்ரோல் விலையேற்றத்தை நியாயப்படுத்தவில்லை. ஆனால், இப்படி அறிக்கை விடும் தகுதி ஜெயாவிற்கு இல்லை என்றே சொல்கிறேன்.

--------------------

எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலையை மிகக்கடுமையாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.....இப்படி தவனை முறையில் விலையேற்றுவதை விட்டுவிட்டு மொத்தமாக நூறு ரூபாய்க்கு கொண்டு வந்து விடலாம்... எப்படியோ மத்திய அரசு இன்னும் இரு ஆண்டுகளில் பதவியிலிருந்து விலகும்போது இந்த விலைக்குத்தான் பெட்ரோல் வரப்போகிறது. அதிகமாக பெட்ரோல் விலையை உயர்த்திய ஒரு அரசாக மன்னின் அரசு இருக்கப்போகிறது. சரி விடுங்க...இதிலாவது சாதனை செய்த அரசாக இது விளங்கட்டும்.

-------------------
இந்த பெட்ரோல் விலை உயர்வு நன்மைக்கே......
இனிமேல் யாரும் காரில் பைக்கில் பயணம் செய்யவேண்டாம்.
ஆளாளுக்கு ஒரு சைக்கிளில் போங்க......சிலவும் மிச்சம். உடற்பயிற்சி செய்தது போலவும் இருக்கும். வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் காற்றும் மாசு படாது. வளி மண்டலம் சுத்தமாக இருக்கும்.அப்புறம் என்ன நல்லா மழை பொழியும், நாடு சுபிட்சமாக இருக்கும்.

--------------------

இந்த பெட்ரோல் விலை உயர்வை எல்லாக்கட்சிகளும் எதிர்க்க ஆரம்பித்து விட்டது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் பங்காளிகள் தி.மு.க.,வும், திரிணாமுல் காங்கிரசும் கூட இதை எதிர்த்துள்ளனர். அட....பெட்ரோல் விலையேற்றத்தை இல்லீங்க.....எங்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக விலையை உயர்த்திவிட்டது மத்திய அரசு என்று குற்றப்பத்திரிக்கை வாசித்திருக்கின்றனர் மம்தாவும், கலைஞரும். சரி இவர்களை கலந்து ஆலோசித்திருந்தால் மட்டும் என செய்திருப்பார்கள்? சரி என்று தலையாட்டிவிட்டு கம்முன்னு இருந்திருப்பார்களே தவிர கூட்டணியை விட்டா வெளியேறியிருப்பார்கள்?.... என்னவோ போங்க....

---------------------

என்ன ஒரே பெட்ரோல் நியுசாகவே இருக்கான்னு சலிப்பா இருக்கா?....சரி வேற மேட்டருக்கு வர்றேன்....



மிகவும் துணிச்சலான நேர்மையான கலெக்டர் என்று பேரெடுத்த சகாயம் அவர்களை மதுரையிலிருந்து கடாசி, கோ-ஆப்டெக்ஸ் இயக்குனராக்கியுள்ளது தமிழக அரசு. இதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். என்னை பொறுத்தவரை இந்த மாற்றம் அவசியம்தான். இருங்க...அவசரப்படாதீங்க... நான் என்ன சொல்ல் வர்ரேன்னா...... அதாவது கடந்த தி.மு.க.,ஆட்சியில் இவர் மதுரையில் காட்டிய கெடுபிடிகள் அதிகம். அழகிரிக்கே தண்ணி காட்டியவர் சகாயம். அதைப்போல் தேர்தலின்போதும் மிக கடுமையாக நடந்து கொண்டார். இதையெல்லாம் வைத்து தி.மு.க.,வினர் மத்தியில் சகாயம் ஒரு அண்ணா.தி.மு.க.,அபிமானி என்று அவப்பெயர் இருந்தது அல்லது இருந்திருக்கும். அது இந்த மாற்றத்தினால் மாறியிருக்கிறது என்பது என் அபிப்ராயம்.அவரை தவறாக நினைத்தவர்களுக்கு இனி புரியும், சகாயம் எந்தக்கட்சியின் அனுதாபியோ அபிமானியோ இல்லை. மிக நேர்மையான அதிகாரி என்று.......

--------------------


முன்பெல்லாம் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினால் தான் எரியும்...இப்போது பெட்ரோல் விலையை கேட்டாலே எரிகிறது....# வாழ்க மத்திய அரசு.


Post Comment

இதையும் படிக்கலாமே:


17 கருத்துகள்:

  1. என்ன இப்படி சொல்லிட்டீங்க! அ.தி.மு.க வினர் எல்லாம் ஆனந்தகண்ணீர்லதானே தினமும் குளிக்கிறாங்ய்கே.....

    பதிலளிநீக்கு
  2. முன்பெல்லாம் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினால் தான் எரியும்...இப்போது பெட்ரோல் விலையை கேட்டாலே எரிகிறது....# வாழ்க மத்திய அரசு...//

    நல்லா சொல்லுரீங்க போங்க...

    பதிலளிநீக்கு
  3. நாங்களும் ட்வீட்டர் யூஸ் பன்னுரோமுங்கோ...imran_moosa

    பதிலளிநீக்கு
  4. /* சகாயம் எந்தக்கட்சியின் அனுதாபியோ அபிமானியோ இல்லை. மிக நேர்மையான அதிகாரி என்று அவரை தவறாக நினைத்தவர்களுக்கு இனி புரியும். */

    முற்றிலும் உண்மை..... சகாயம் முன்னாடி நேர்மயா இருக்கைல பிடிச்சு இருக்கும்...இப்ப கசக்கும்..

    பதிலளிநீக்கு
  5. அலசல் அற்புதம் கஸாலி

    பதிலளிநீக்கு
  6. தவறை யார் தட்டிகேட்டாலும் அவர்களை ஆதரிக்கவேண்டும் . இந்த நாட்டில் நீ யோக்கியமா என்னசொல்றதுக்குனு கேட்டே தன் தப்பை நியாயபடுதுகிறார்கள். எனக்கென்னவோ இந்த விஷயத்தில் ஜெயலலிதா எதிர்ப்பதை நாமும் ஆதரிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. ''மிக நேர்மையான அதிகாரி என்று அவரை தவறாக நினைத்தவர்களுக்கு இனி புரியும்''
    இங்குள்ள தமிழ் வழுவால் கருத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றிவிட்டேன் நண்பரே.....சுட்டிக்காட்டிய உங்களுக்கும் ஏனைய நண்பர்கலுக்கும் நன்றி

      நீக்கு
  8. அலசல் நன்று! ட்வீட் அதைவிட நன்று!!!

    பதிலளிநீக்கு
  9. சும்மா விட்ருவாங்களா.... நேர்மையுடன் இருக்கும் ஒன்று இரண்டு பேரையும் இல்லாமல் ஆக்குவதுதான் இந்த அரசியல்வாதிகளின் குறிக்கோள்.

    பதிலளிநீக்கு
  10. பணவீக்கமாம்.. நல்ல தைலம் இருந்த தேய்ச்சு விடனும்..

    பதிலளிநீக்கு
  11. Salaam bro.Kazali,
    Transfer order is ready...
    if you work sincerely for your Govt. and refuse to work for politicians..!
    It is really a pathetic situation for Honest Govt. servants..!
    Thanks.

    பதிலளிநீக்கு
  12. நிறைய காரம் ஆக இருக்கிறது, இந்த பொடியில்.

    பதிலளிநீக்கு
  13. நிறைய காரம் ஆக இருக்கிறது, இந்த பொடியில்.

    பதிலளிநீக்கு
  14. நிறைய காரம் ஆக இருக்கிறது, இந்த பொடியில்.

    பதிலளிநீக்கு
  15. நிறைய காரம் ஆக இருக்கிறது, இந்த பொடியில்.

    பதிலளிநீக்கு
  16. நிறைய காரம் ஆக இருக்கிறது, இந்த பொடியில்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.