என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஜூலை 17, 2012

11 பில்லா-2 இதுவும் விமர்சனம்தான்...கொஞ்சம் லேட்டானாலும் லேட்டஸ்ட்டா.....




“ஏப்பா....சொல்ல சொல்ல கேக்காம பில்லா-2 படத்துக்கு போனியே....படம் எப்படி இருந்துச்சு மொக்கையா?”

“சே...சே...அப்படிலாம் இல்லேப்பா. பார்க்கறமாதிரிதான் இருந்துச்சு”

”அப்புறம் ஏன் பிளாக்லையும், ஃபேஸ்புக்லையும் படம் நல்லால்லேன்னு கிழிகிழின்னு கிழிச்சாங்க?”

“அதிகமா எதிர்பார்ப்போட போனவங்களுக்கு வேணும்னா படத்திலே ஏதோ ஒண்ணு குறைஞ்சிருக்கும்.....அதான் அவங்க கடுப்பை அப்படி காட்டிட்டாங்க. ஆனா, நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போனேன்....அதான் ஓரளவு பிடிச்சது”

“படத்திலே...எல்லோரையும் கொலை செஞ்சுக்கே திரியறாராமே அஜீத்....அதிக கொலைகள் இந்தப்படத்தில் இருக்குன்னு சொல்றாங்களே....”

“ஏப்பா.. நான் தெரியாமத்தான் கேக்குறேன்...ஒரு டான் படம்னா இப்படித்தானேப்பா இருக்கும், இருக்கனும். ஒரு சாதாரண அகதி எப்படி டான் ஆனான்னு காட்டற படத்துல கொலை, கொள்ளைன்னு தான் இருக்கும்....வேறென்ன ஹீரோ கிராமத்துல விவசாயமா செஞ்சுக்கு இருக்கமுடியும்? இல்லே வயக்காட்டுல ஆடு மேச்சிக்கு இருக்கமுடியுமா?

“அதுக்காக இத்தனை கொலையா?”

“அட...என்ன நீ புரியாத ஆளா இருக்கே?.....ஒரு லோக்கல் தாதாவே ஒரு டஜன் கொலை பண்ணும்போது அஜீத் இண்டர்நேஷனல் லெவெல்ல இருக்க ஒரு டான்.... அவர் எத்தனை கொலை செய்வாரு? நல்லவேளையா சென்சார்டுல கொஞ்சம் வெட்டிட்டாங்க...இல்லாட்டி அஜீத் செய்யற கொலைகளோட எண்ணிக்கை இன்னும் கூடிருக்கும்”

“ஹா...ஹா...அஜீத் நடிப்பு எப்படி?”

“நடிப்பு சுமார்தான். கோட்டையும், கண்ணாடியையும் மாட்டி விட்டுட்டு, கையில ஒரு துப்பாக்கியையும் கொடுத்து நடிக்க வச்சிருக்காங்க”


“அப்படின்னா நடிக்க வைக்காம நடக்க வச்சிருக்காங்கன்னு சொல்லு”



“ஆமா....ரெண்டுமே ஒண்ணுதான். ஆனா, க்ளைமேக்ஸ்ல ஒரு ஹெலிகாப்டர் ஃபைட் இருக்குப்பா....சான்சே இல்லை. டூப் போடாம அஜீத்தே ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கார்.....ரொம்ப நல்லா வந்திருக்கு அந்த ஃபைட்”



“அவருக்குத்தான் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி ஆச்சே?...சரி.....இந்த படத்தில ரெண்டு பேரு ஹீரோயினாமே?”

“ஆமாப்பா...பார்வதி ஓமனக்குட்டன், புருனோ அப்துல்லான்னு ரெண்டு பெண்ணுங்க...வழக்கமா டான் படத்துல ஹீரோவை சுத்தியே படம் நகரும். ஹீரோயினுக்கு பெரிய ஸ்கோப் இருக்காது. இந்தப்படத்திலேயும் அப்படித்தான். அவங்க ரெண்டுபேரும் அப்பப்ப தலைய காட்டிட்டு...இல்லே...இல்லே,,உடம்பை காட்டிட்டு செத்துப்போயிடுறாங்க?”

“என்னது உடம்பை காட்டிட்டா?

“ஆமாப்பா....அஜீத் கோட் போட்டு உடம்பை மறைச்சுக்கு திரியறாருன்னா...இந்த பொண்ணுங்க ரெண்டுபேரும், ஏதும் போடாம உடம்பை திறந்துக்கு திரியுதுங்க”

“ஆடித்தள்ளுபடில ட்ரெஸ் வாங்கிருப்பாங்க போல...


"ஒரு சின்னத்திருத்தம்....ஆடித்தள்ளுபடியில்லை....ஆடைத்தள்ளுபடி”

”அய்யோ..அய்யோ...அப்படின்னா...இந்தப்படத்துக்கு ஹீரோயினே தேவையே இல்லேன்னு சொல்லு”

“அப்படி சொல்ல முடியாது. பார்க்கற எல்லோரையும் பட்பட்டுன்னு குருவி சுடற மாதிரி சுட்டுக்கே திரியும் பில்லா மனசிலேயும் ஈரமிருக்கு, பாசமிருக்குன்னு காட்டறதுக்காகவே பார்வதி ஓமனக்குட்டன நடிக்க வச்சிருக்காங்க..அவங்க அஜீத்தின் அக்கா மகளா அதாவது முறைப்பொண்ணா வர்றாங்க”

“அப்ப காதல்,டூயட் எல்லாம் இருக்குமே?”

”எங்கே? பில்லாவுக்கு சுடவே நேரம் போதல....இந்த லட்சணத்தில காதலாவது, கத்தரிக்காயாவது? கற்பனை சீன்ல கூட அதெல்லாம் கிடையாது. ஆனா, ஓமனக்குட்டன் மேல அன்பாத்தான் இருக்காரு அஜீத்”

“அதுசரி....வசனமெல்லாம் ரொம்ப ஷார்ப்பா இருக்காமே?”

“ஆமா....மணிரத்ணம் படம்போல ரொம்ப கம்மியான வசனம்தான். ஆனா, ஒளிப்பதிவு பக்காவா இருக்கு....கோவாவை நம் கண் முன்பு பார்ப்பதுபோல் அவ்வளவு அழகு...ஆர்.டி.ராஜசேகர் கலக்கிருக்காரு”

“யுவன் சங்கர் ராஜா மியூசிக் எப்படி?”


“ஒண்ணும் சொல்றதுக்கில்லை.... முந்தைய பில்லா படத்தோடு ஒப்பிடுகையில் இது சுமார்தான்.”

“குறையே இல்லையா?”

“ஏன் இல்லே.... நிறைய இருக்கு....”

”என்ன?”

 “ஒரு அகதி முகாமிலிருந்து அஜீத் தன் கூட்டாளி மூணு பேரோட வெளியே வந்துடுறாரு...ஆனால், அதைப்பத்தி அந்த முகாம் கண்டுகொள்ளவே இல்லியே?...அடுத்து ஒரு மாநில சி.எம். எந்த ஒரு பாதுகாப்பு இல்லாமல் வந்து கொல்லப்படறாரு...பாதுகாப்பே இல்லாம இப்படியா தனியா போவாரு?”

“அட....அவரு தமிழ்நாட்டு சி.எம். மாதிரி இருந்தா பல கார்கள் பின்னாடி போகும்....இவரு பாண்டிச்சேரி சி.எம்.ரங்கசாமி மாதிரி இருப்பாரோ என்னவோ?... அப்படின்னா படம் பார்க்கலாம்ன்னு சொல்லு”



“தாராளமா பார்க்கலாம்...ஆனா,அதிகம் எதிர்பார்ப்போட போகாதே?”


“சரிதான்...எனக்கொரு சந்தேகம்?... நீ அஜீத் ரசிகரா....படம் நல்லாருக்குனு சொல்றே?”

“அப்படின்னா நல்லால்லேன்னு சொல்ற மத்தவங்க எல்லாம் யார் ரசிகரு?....ஒரு படம் நல்லாருக்கு, நல்லாயில்லேன்னு சொல்ல அஜீத் ரசிகரா இருக்கனும்ன்னு அவசியம் இல்லே....சினிமா ரசிகரா இருந்தாலே போதும்.... நான் யார் ரசிகனும் இல்லே...எந்த நடிகருக்கும் கோஷம் போட்டதில்லை. அதே நேரம் அஜீத்தை எனக்கு பிடிக்கும்”

“ஓ....”

“ஆமா...அஜீத்தின் அப்பா இயக்குனரோ...தயாரிப்பாளரோ இல்லை. அப்பாவோ அண்ணனோ நடிகரில்லை, அண்ணனோ மற்ற யாரோ இயக்குனராகவுமில்லை.....எந்த பின்ணணியும் இல்லை...தனியொரு ஆளா போராடி இந்த இடத்துக்கு வந்திருக்கும் அஜீத்தின் உழைப்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரே இந்தப்படத்தில் பேசியது மாதிரி அஜீத்தோட வாழ்வில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு வினாடியும் அஜீத்தா செதுக்கியதுதான் அதில் சந்தேகமில்லை.”





Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. படத்தின் கதை எண்பதுகளின் இறுதியில் நடப்ப்து போலத்தானே காட்டுகிறார்கள் அப்போது முதலமைச்சர்களுக்கு பாதுகாப்பு கம்மிதானே?

    பதிலளிநீக்கு
  2. ஒரு டைப்பான விமர்சனமாக இருந்தாலும் நன்றாக இருக்கு

    பதிலளிநீக்கு
  3. உரையாடல் பாணி விமர்சனம் நல்லாவே இருந்திச்சு. அஜித்துக்காக பேசிய கடைசி பாரா வரிகள் மிகவும் உண்மை.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அருமையான விமர்சனம் .... மற்றவரை இகழாமல் நடுநிலையான விமர்சனம் ...
    சூப்பர் கசாலி அண்ணன் ....

    பதிலளிநீக்கு
  6. இதுவரை வந்த விமர்சனங்களில் இதுவே மிக அருமையானதும் நடுநிலையானதும் கூட .எப்படி கஸாலி இவ்வளவு தெளிவாக யாரும் அலசாத கோணத்தில் விமர்சனம் செய்யமுடிந்தது

    பதிலளிநீக்கு
  7. முடிவில் அருமையாச் சொல்லிட்டீங்க சார் !
    பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...
    வாழ்த்துக்கள்...(த.ம. 7)

    பதிலளிநீக்கு
  8. dei, rasi saali kusaali,, nee sathiyamaa ajth fan-ah dhaan irukka mudiyum, konjam kooda naakku koosaama, indha padam paakkalaam-nu, soldra,, sari un family-oda poi paarkka vendi dhaane, entertainment-na ennannu unakku theriyuma, theriyalanaa, vimarsanam eludhaadha,, idhula ennayaa irukku.....

    பதிலளிநீக்கு
  9. நல்ல விமர்சனம் நல்லாயிருக்கு

    கடைசியில் அஜித்துக்கான வசனம் நல்ல பொருத்தம்

    பதிலளிநீக்கு
  10. I agreed, good one dear friend!
    Dilshard, from Sri Lanka.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.