என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஜூலை 03, 2012

10 நீங்களும் சிறை செல்வீர்களா கலைஞர்ஜீ?...





 தி.மு.க.தலைவர் கலைஞரிடம் எடுத்த கற்பனை பேட்டி....


கேள்வி: திடீர் சிறை நிரப்பும் போராட்டம் ஏன்?

கலைஞர்: பல்வேறு வழக்குகளில் ஜெயலலிதா அரசு எங்களை பிடித்து உள்ளே தள்ளிவருகிறது. அப்படி எல்லோரையும் பிடித்து போடுவதற்குள் நாங்களே கவுரமாக உள்ளே போய்விட்டால் என்ன என்று தீவிரமாக சிந்தித்ததன் விளைவு இந்த சிறை நிரப்பும் போராட்டம்.



கேள்வி: பதவியையும், பணத்தையும் அனுபவித்தவர்கள் வேண்டுமானால் சிறைக்கு செல்லட்டும், நாங்கள் ஏன் சிறை செல்லவேண்டும் என்ற முணுமுணுபு தி.மு.க.,வில் கிளம்பியுள்ளதாக சொல்கிறார்களே?

கலைஞர்:அப்படியெல்லாம் இல்லை. அது உங்களைப்போல பத்திரிகையாளர்கள் கிளப்பும் வதந்தி. சரி...கேட்டுட்டீங்க சொல்றேன்..... தி.மு.க.,வில் பதவியும் பணமும் அனுபவித்த ராசா,கனிமொழி, வீரபாண்டியார் போன்ற முன்னாள் அமைச்சர்கள் பலரும்   சிறையை அனுபவித்ததை அனுபவித்து கொண்டிருப்பதை ஏன் மறந்துவிட்டீர்கள்?



கேள்வி: சிறை செல்பவர்களுக்குத்தான் இனி கட்சிப்பதவியாமே?

அப்படின்னா....இப்போது சிறையில் இருப்பவர்களெல்லாம்  யாராம்? அனைவரும் பதவியில் இருந்தவர்கள்தானே?



கேள்வி: ஆ.ராசா, கனிமொழி போன்றோரும் இதில் கலந்துகொள்வார்களா?


கலைஞர்: மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தோம்......மத்திய அரசே ராசா,கனிமொழியை கைது செய்துவிட்டதால் தனியாக ஏன் இன்னொருதடவை கைதாக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.



கேள்வி: நீங்களும் சிறை செல்வீர்களா?

கலைஞர்: லட்சோப லட்சம் உடன்பிறப்புக்கள் சிறை செல்ல தயாராக இருக்கும்போது நான் ஏன் செல்லவேண்டும். அவர்கள்தானே நான்.... நான்தானே அவர்கள்(சிரிக்கிறார்)






Post Comment

இதையும் படிக்கலாமே:


10 கருத்துகள்:

  1. //அவர்கள்தானே நான்.... நான்தானே அவர்கள்(சிரிக்கிறார்///

    :-)

    பதிலளிநீக்கு
  2. தலைவர்கள் சொல்வது தொண்டர்களுக்கு மட்டும்.

    பதிலளிநீக்கு
  3. be it serious rain or shine, i will continue to do my SERVICE just by sitting in Air conditioned room.........

    பதிலளிநீக்கு
  4. பாவம்பா கலைஞர்..வயசான காலத்துல சிறைக்கு போ அங்க போ, இங்க போன்னு தொல்ல பண்ணாதீங்க..அவர் தான் நிறைய பேர சிறைக்கு அனுப்பி வைக்கிறார்ள..அது பத்தாதா????

    பதிலளிநீக்கு
  5. அப்படி எல்லோரையும் பிடித்து போடுவதற்குள் நாங்களே கவுரமாக உள்ளே போய்விட்டால் என்ன என்று தீவிரமாக சிந்தித்ததன் விளைவு இந்த சிறை நிரப்பும் போராட்டம். //// ஹஹஹ்ஹா :)) ROFL..

    பதிலளிநீக்கு
  6. ஏன்? ஏன்? ஏனிந்த கொலைவெறி ? ;)))

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.