ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் பெரிய அதிசயம் நிகழும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்.... இப்போது அவர் எதிர்பார்த்த அதிசயம் நடந்தே விட்டது. ஆனால், அவருக்கு எதிராக....
காங்கிரசை பகைத்துக்கொண்டு எப்படியும் தனக்கு ஆதரவளித்துவிடுவார் என்று மம்தாவை மலைபோல் நம்பிக்கொண்டிருந்தார் சங்மா. ஆனால், தீதியோ அடிச்சார் பாருங்க பல்டி....ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்பை ஆதரிக்கிறோம் என்று அறிவித்துவிட்டார். மம்தாவிற்கு வேறு வழியில்லை, நம்மைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று முன்பே காங்கிரஸ் உணர்ந்திருந்ததாலோ என்னவோ அவரின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது... இப்போது மம்தாவே பணிந்துபோயுள்ளார். இதில் பாவம் சங்மாதான். அதிகம் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளார். இதற்கிடையில் யாருக்கும் ஆதரவில்லை என்று சொன்ன விஜயகாந்தும் இப்போது தன் முடிவை மாற்றி காங்கிரசையே ஆதரிக்கலாம் என்ற மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியோ பிரணாப்தான் அடுத்த ஜனாதிபதி என்று முடிவாகிவிட்டது. இனிமேலும் என்ன அதிசயத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் சங்மா என்று அவருக்குத்தான் வெளிச்சம்.
=====================
இதுவரை இலங்கை கடற்படையினர்தான் தமிழக மீனவர்களை சுட்டு விளையாடினர்...இப்போது அந்த வேலையை அமெரிக்க கடற்படையினரும் கையில் எடுத்துள்ளானர். துபாய் கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது அமெரிக்க நாய்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த நால்வரில் ஒருவர் மரணமடைந்திருக்கிறார்.உலகமெங்கும் தன் சர்வாதிகார போக்கை கான்பித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க வல்லூறுகள் இப்போது கடலையும் விட்டுவைக்கவில்லை. அமெரிக்கா எது செய்தாலும் தலையாட்டும் மத்திய அரசு இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
===================
என் ட்வீட்கள்.......
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி # ஸ் யப்பா...இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா? .....
Tweet |
நான் இப்பவே ஜெயலலிதாவிடம் அமைச்சர் போல்தான் இருக்கிறேன்- சரத்குமார் # அடடா...அடிமைபோல் இருக்கேன்னு சொல்றதை இப்படியும் சொல்லலாமோ? டவுட்டு
பதிலளிநீக்குNICE BRO
நீக்குதமிழ் மனம் 2
பதிலளிநீக்குஎல்லாமே அதிர்வேட்டு...
பதிலளிநீக்குஅதிகாரமும், பொருளாதார பலமும் கையிலிருந்தால் ஆடத்தானே செய்வாங்க.. சாதாரண மனிதனே இப்படி என்றால் அமெரிக்க அரசுக்கு சொல்லியா தரவ வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
இலங்கைத் தமிழ்களை கொத்துகொத்தாக துப்பாக்கிகளாலும், குண்டுகளாலும் சதையைப் பிய்த்து சாகடித்த இலங்கை அரசுக்கு எதிராக ஏதும் செய்ய முடியாத மத்திய அரசு, ஒருவருக்காக அமெரிக்க அரசை என்ன செய்யும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ரஹீம் சார்....????
துணை ஜனாதிபதியை ஆத்ரிக்கமாட்டாங்களாமே...?
பதிலளிநீக்குநீ ஒரு அரசியல் ஞானி கஸாலி
பதிலளிநீக்குபசித்தவர்களுக்கு இரவு 12 மணிக்கு மேல் உணவில்லை சென்னை ஹோட்டலில், ஆனால், குடிப்பவர்களுக்கு மட்டும் பாரில் 24 மணி நேரமும் சப்ளை. வாழ்க அரசு//
பதிலளிநீக்குஹா..ஹா..ஹா...
நாடு வெளங்கிடும்!
எல்லாமே அதிரடி தான்...
பதிலளிநீக்குஎன் ட்வீட்கள்... - சூப்பர் !
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம.6)
"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”
அந்த இரண்டாவது ட்வீட்... வயிற்றெரிச்சல் கலந்த சிரிப்போடு ஆமோதிக்கிறேன். இறந்த மீனவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். எப்பத்தான் நிக்குமோ இந்தக் கொடுமைகள்...?
பதிலளிநீக்கு/* அமெரிக்கா எது செய்தாலும் தலையாட்டும் மத்திய அரசு இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் */
பதிலளிநீக்கு"கடும் நடவடிக்கை????????????????" ஹி..ஹி..ஹி....
TM-8
பதிலளிநீக்குpottu thaakkideenga...
பதிலளிநீக்கு