என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஜூலை 19, 2012

15 பதவியிழந்த செங்கோட்டையனும், தடுமாறிய முலாயமும்...



1980-ஆம் ஆண்டிலிருந்து கோபி தொகுதியில் போட்டியிட்ட அத்தனை தேர்தலிலும் (1996-ஆம் ஆண்டு தவிர்த்து)வெற்றிபெற்றவர் கே.ஏ.செங்கோட்டையன். 1989 ஆம் ஆண்டிலிருந்து  ஜெயலலிதாவின் அதிதீவிர விசுவாசியாக இருந்து வந்தவருக்கு திடீரென பதவி பறிபோயிருக்கிறது.... அண்ணா.தி.மு.க.,விலும் சரி, ஜெயலலிதா ஆட்சியிலும் சரி ஜெயலலிதா தவிர யாருக்கு எப்போது பதவி போகும், வரும் என்று யாருக்கும் தெரியாத ரகசியம். ஜெயலலிதாவிடம் ஏறுமுகத்தில் இருப்பவர்கள் இறங்குமுகத்தில் இருப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால், அது செங்கோட்டையனுக்கு நிகழும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், ஜெயலலிதாவிடம் செங்கோட்டையனுக்கு இருந்த செல்வாக்கு அப்படி....
அப்படிப்பட்டவரின் கட்சிப்பதவியையும், அரசுப்பதவியையும் ஒரு சேர பறித்திருக்கிறார் ஜெயா....

இதற்கு முன் ஒருதடவை செங்கோட்டையனின் உதவியாளரை பிடித்து உள்ளே தள்ளினார். இப்போது செங்கோட்டையன் பதவியை பறித்திருக்கிறார். தன்னை தவிர யாருக்கும் ஏதும் நிரந்தரமில்லை என்று இதன் மூலம் மற்றவர்களுக்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்.கொடநாட்டிலிருந்து திரும்பிய கையோடு இவருக்கு பதவியை பறித்துவிட்டு, சங்மாவிற்கு வாக்களித்துவிட்டு மீண்டும் கொடநாடு கிளம்பிவிட்டார். என்ன ஒரு கடமை உணர்ச்சி?

================





ஜனாதிபதி தேர்தலில் பெரிய பெரிய கூத்தெல்லாம் நடந்திருக்கிறது.முலாயம் வாக்களிக்கும்போது தவறுதலாக சங்மாவிற்கு வாக்களித்துவிட்டு பின்னர் சுதாரித்தவராய் இன்னொரு வாக்கு சீட்டு வாங்கி பிரணாப்ஜிக்கு வாக்களித்துள்ளார். அதேபோல், குஜராத் மாநில பா.ஜ.க.,எம்.எல்.ஏ.,ஒருவர் சங்மாவிற்கு வாக்களிக்காமல், பிரணாப்பிற்கு வாக்களித்துள்ளார். அதுசரி....இதெல்லாம் எப்படி வெளியில் தெரிந்தது என்று தெரியவில்லை... யாருக்கு வாக்களித்தோம் என்ற ரகசியத்தை வெளியில் சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால், அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டிருக்கிறார்கள். 

===============


  
ஜனாதிபதி தேர்தலில் தவறுதலாக சங்மாவுக்கு ஓட்டுப்போட்ட முலாயம்# ஜனாதிபதி தேர்தலில் அதிசயம் நிகழும்ன்னு இதைத்தான்சொல்லிருப்பாரோ சங்மா.

***************


ஜெயலலிதா பிரதமர் ஆவார்- ஆதினம் # அய்யய்யோ கொடநாடை தனி நாடா பிரிக்கப்போறாங்களா?

***************

ஜெயலலிதா மீண்டும் கொடநாடு சென்றார். # செங்கோட்டையனுக்காகவே சென்னை வந்திருப்பார் போல....

***************


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 கருத்துகள்:

  1. ஜனாதிபதி தேர்தலில் தவறுதலாக சங்மாவுக்கு ஓட்டுப்போட்ட முலாயம்# ஜனாதிபதி தேர்தலில் அதிசயம் நிகழும்ன்னு இதைத்தான்சொல்லிருப்பாரோ சங்மா.
    நல்ல பஞ்ச்

    பதிலளிநீக்கு
  2. ///மீண்டும் கொடநாடு கிளம்பிவிட்டார். என்ன ஒரு கடமை உணர்ச்சி?///

    LOL

    பதிலளிநீக்கு
  3. உனக்கு போஸ்ட் போட தினமும் ஒரு அமைச்சர் இல்லாட்டி MLA கிடைச்சிட்றாங்கப்பா...
    வாழ்க்கை ஓடிடும்...

    பதிலளிநீக்கு
  4. ‘அம்மா’ பத்தி நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல... ட்வீட்டுகளை மிகவும் ரசித்துப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. ஹா..ஹா.. வழக்கமான தூள் கிளப்பல்... சும்மாச்சொல்லக்கூடாது ரஹீம்.. நீங்கதான் அரசியல் பதிவுலக சூப்பர்ஸ்டார்.. சூட்டோடு சூடா பதிவையும் போட்டு பரபரப்பு உண்டாக்குறீங்க...!

    தொடர்ந்து கலக்குங்க..!

    பதிலளிநீக்கு
  6. பட்டைய கிளப்புறீங்க பாஸ்!

    பதிலளிநீக்கு
  7. அரசியல் பதிவு வழக்கம்போல் கலக்கல். டிவிட்ஸ் அதைவிட செம கலக்கல் பாஸ்... ஹி...ஹி.. ஹி... தொடர்ந்து அசத்துங்க பாஸ்...!!

    பதிலளிநீக்கு
  8. //செங்கோட்டையன்
    கராத்தே தியாகராஜன் நினைவுக்கு வருகிறார்.

    சரியா ஓட்டு போட தெரியாதவர்கள் தான் இங்கே தலைவர்கள். #கொடுமை

    பதிலளிநீக்கு
  9. முதன்முறையாக 1977-இல் சத்தியமங்கலம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பதிலளிநீக்கு
  10. சிறந்த கலக்கல் பதிவு! அம்மாவின் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. if jaya becomes PM, criminal activities in India will come down drastically,Its very simple. Amma will announce that all criminals have fled to Pakistan and bangladesh.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா20 ஜூலை, 2012, 7:15:00 PM

    ஒரு வேள செங்கோட்டையன் பிராணாப்க்கு வாக்களித்து இருப்பாரோ? அதுதான் தூக்கிடாங்களோ?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.