என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஜூலை 31, 2012

19 பறிபோகுமா தே.மு.தி.க.,வின் எதிர்கட்சி அந்தஸ்து?-ஒரு அலசல்.....




”கடந்த திமுக ஆட்சியில், விஜயகாந்த் திமுகவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த், விமர்சனம் செய்ய பயப்படுகிறார். சட்டமன்றத்திற்குப் போகவே பயப்படுகிறார். ஏதாவது எதிர்த்துப் பேசினால் 10 எம்எல்ஏக்கள் கட்சி மாறி, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து போய்விடும் என பயந்து பேசாமல் இருக்கிறார்” என்று தன் திருவாய் மலர்ந்திருக்கிறார் கே.என்.நேரு.

கடந்த தி.மு.க.,ஆட்சியில் கலைஞரை விஜயகாந்த் போட்டுத்தாக்கியபோது நிறைய எம்.எல்.ஏ.க்களை அவர் வைத்திருக்கவில்லை. அவர் ஒருவரே எம்.எல்.ஏ.,

ஒருவேளை விஜயகாந்தும் அந்த நேரத்தில் அதிக எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்தால் தி.மு.க.,வும் இந்த உடைப்பு வேலையைத்தான் கையாண்டிருக்கும்.
அண்ணா.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளையே உடைத்து எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் இழுத்த தி.மு.க.,விற்கு விஜயகாந்த் கட்சியை உடைப்பது சாதரணமான விஷயம்.

அடுத்து மெயின் மேட்டருக்கு வருவோம்.... தனக்குரிய எதிர்கட்சி அந்தஸ்து பறிபோய்விடும் என்று பயந்துதான் விஜயகாந்த் ஜெயலலிதாவை விமர்சிக்காமல் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரும் அவ்வப்போது அண்ணா.தி.மு.க.,ஆட்சிக்கு எதிராக பேசிக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால், தி.மு.க.,வை தாக்கிய வேகம் இப்போது இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அதேநேரம் தன் எதிர்கட்சி அந்தஸ்து பறிபோய்விடும் என்றெல்லாம் விஜயகாந்த் பயப்பட தேவையில்லை என்பது என் கருத்து. ஏற்கனவே அண்ணா.தி.மு.க.,விற்கு 147 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அதாவது மெஜாரிட்டிக்கு அதிகமாகவே.... இதில் விஜயகாந்த் கட்சியில் இருக்கும் 10 எம்.எல்.ஏ.க்களை தன்பக்கம் ஜெயலலிதா இழுத்தார் என்று வைத்துக்கொண்டால் அண்ணா.தி.மு.க.விற்கு பலம் கூடும். ஆனால், ஆட்சிக்கோ, கட்சிக்கோ பலமுமில்லை. பயனுமில்லை.அதே நேரம், அப்படி இழுத்தால் அதனால் பலன் பெறப்போவது தி.மு.க.,தான் எப்படியென்றால்.....

தே.மு.தி.க.,விற்கு தற்போது இருக்கும் 29 எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் அண்ணா.தி.மு.கவின் பக்கம் போய்விட்டால் மீதி 19 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே விஜயகாந்திற்கு மிஞ்சுவார்கள். அதனால் எதிர்கட்சி அந்தஸ்து அவரிடமிருந்து பறிபோய்விடும். அப்படி பறிபோகும் எதிர்கட்சி அந்தஸ்து யாருக்கு போகும் என்றால் 23 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் தி.மு.க.,விற்குத்தான் போகும். இதை ஜெயலலிதா நன்றாகவே உணர்ந்திருப்பார். அதனாலேயே தே.மு.தி.க.,வை உடைக்கும் சாத்தியம் குறைவு.....

அடுத்ததாக இன்னொரு ஆதாயமும் ஜெயலலிதாவிற்கு உள்ளது. அதாவது.....இப்போதைய தே.மு.தி.க.,வின் எம்.எல்.ஏ.க்களில் விஜயகாந்த், பண்ரூட்டியார் தவிர மற்ற எல்லோரும் புதுமுகங்களே....அவர்களை சட்டசபையில் சமாளிப்பது சுலபம். ஆனால், தி.மு.க. நிலையோ அப்படியல்ல... அவர்களுக்கு எதிர்கட்சி அந்தஸ்து வந்துவிட்டால் சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு குடைச்சல் அதிகமாகி விடும்.

 தி,மு.க.,வை பொறுத்தவரையில் அதன் செயல்பாடுகள் ஆளுங்கட்சியாக இருந்த நேரத்தை விட எதிர்கட்சியாக இருக்கும் போதுதான் முன்பை விட வீரியத்துடன் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே... இதனால்தான் ஜெயா அமைதியாக இருக்கிறார் என்பது என் எண்ணம். எப்படியோ விஜயகாந்தின் எதிர்கட்சி அந்தஸ்து தி.மு.க.,வால்தான் தப்பித்திருக்கிறது.


Post Comment

இதையும் படிக்கலாமே:


19 கருத்துகள்:

  1. ராஜதந்திரி நீங்கதான் தலை

    பதிலளிநீக்கு
  2. அண்ணே எம் எல் ஏக்கள் கட்சி மாற முடியாது அல்லவா?அவர்கள் கட்சி மாறி அதிமுகவில் சேர முடியாது...அவர்கள் வேணும் என்றால் தனியாக அதிமுகவிற்கு ஆதரவு அளித்து செயல்படலாம் ....எப்படி பார்த்தாலும் விஜயகாந்துக்கு வீக்குதான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேநேரம் ஒரு 10 பேர் தனித்து செயல்பட்டால் பலம் குறைந்து தே.மு.தி.க.,வின் எதிர்கட்சி அந்தஸ்து பறிபோய்விடும்.

      நீக்கு
  3. ஆம்....கட்சி மாற முடியாது. அதனால்தான் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.க்களில் சிலரை ஜெயா தன் பக்கம் இழுத்தால், அண்ணா.தி.மு.க.,வின் பக்கம் போய்விட்டால் என்றுதான் எழுதிருக்கேன். சேர்ந்தால் என்று எழுதவில்லை.

    பதிலளிநீக்கு
  4. salaam

    அன்பான வேண்டுக்கோள்:இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்,அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக.
    Read more: http://tvpmuslim.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. யாருப்பா அது கெப்டன் டீ வில எம் ஜி ஆர் நிக்கிறமாதிரி...........
    தேர்தல்னா எவ்வளவ பண்ணுறாங்க

    பதிலளிநீக்கு
  6. வெள்ளை வேட்டிகளைப் பற்றி ஒரு நல்ல அலசல்

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா1 ஆக., 2012, 12:14:00 PM

    வரவர மக்கள் மத்தியில் அரசியல்வாதிகளின் மதிப்பும் மரியாதையும் வெகுவாகவே குறைந்துவிட்டது...

    பதிலளிநீக்கு
  8. செம அலசல் கஸாலி!சும்மா பின்னுறீங்க.

    கட்சி சார்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நல்லதோ கெட்டதோ கட்சி சார்ந்தே இயங்குவதே நல்ல ஜனநாயக முறையாக இருக்க முடியும்.கட்சியை உடைப்பதும் எம்.எல்.ஏக்களை தனது பக்கம் இழுப்பதும்....

    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
    திருட்டு அரசியலடா என்ற புது படப்பாடலாக கறுப்பு எம்.ஜி.ஆர் பாடலாம்.

    பதிலளிநீக்கு
  9. முந்தைய பின்னூட்டம் விட்டுவிட்டுத்தான் மேலே விஜய்காந்தின் தொப்பியை பார்த்தேன்:)

    பதிலளிநீக்கு
  10. நல்லாத்தான் யோசிக்கிறீங்க! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.