என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, நவம்பர் 20, 2010

38 ரஜினி நடிப்பில் எனக்கு பிடித்த 10 படங்கள்

  நான் ரசித்த ரஜினி படம் தொடர் பதிவிற்கு என்னையும் ஒரு பதிவராக மதித்து அளித்த நண்பர் சோழ பரம்பரை எம்.எல்.ஏ., நாகராஜ சோழன் அவர்களுக்கும், அழைக்க நினைத்த பிலாசபி பிரபாகரனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ரஜினிகாந்த் நடித்த படங்களை பற்றி பதிவர்கள் தொடர்ந்து போதும் போதுமென்ற அளவிற்கு விமர்சனம் செய்து விட்டதால், எனக்கு பிடித்த படங்களிலிருந்து காட்சிகளை வரிசை படுத்தியுள்ளேன்.

அவர்கள்  
கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையத்த இந்தப்படம் வெளியான ஆண்டு   1977.
இந்த  படத்தின்  படப்பிடிப்பின்  போது நடந்த ஒரு சுவாரஷ்யமான சம்பவம்: “உனக்கு நடிப்பு வராது, உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும். இன்ஸ்டிட்யூட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ! ‘மூன்று முடிச்சு’படத்துல வசனம் கம்மி. சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் போடறதுன்னு ஸ்டைலா போயிருச்சு. ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டர். ‘இவனுக்காக நான் கேரக்டரை மாத்த முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க’ன்னு ரஜினியை திட்டிவிட்டு கோபத்துடன்  சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு கிளம்பிட்டாராம் இயக்குனர் பாலச்சந்தர். பின்னர் ரஜினி அவரை சமாதானப்படுத்திதொடர்ந்து  நடித்தாராம்.  


இளமை ஊஞ்சலாடுகிறது  
ஸ்ரீதர் இயக்கிய இந்தப்படத்திற்கு இசை இளையராஜா வெளியான ஆண்டு 1978


16 - வயதினிலே
பாரதிராஜாஜா இயக்கிய முதல் படம். இசை: இளையராஜா வெளியான ஆண்டு  1977


மூன்றுமுகம்
ஜகன்னாதன் இயக்கிய இந்த படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்கள். வெளியான ஆண்டு 1982



மன்னன்
பி.வாசு இயக்கிய இந்த படத்திற்கு இசை இளையராஜா, ரஜினிகாந்த் சொந்தக்குரலில் பாடி மன்னிக்கவும் பேசியிருப்பார். படம் வெளியான ஆண்டு 1992


தளபதி
மணிரத்னம் இயக்கத்தில் மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்த படம். இளையராஜாவின் இசையால் இந்தப்படம் வெற்றி பெற்றதாக சொல்பவர்களும் உண்டு. படம் வெளியான ஆண்டு 1991


சந்தரமுகி
பி.வாசுவின் இயக்கத்தில் வித்யாசாகரின் இசையில் வெளிவந்து ஒருவருடத்தை கடந்து ஓடிய படம் -வெளிவந்த ஆண்டு 2005




முரட்டுக்காளை -
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வந்த படம். ரஜினியின் முதல் மசாலா படமென்று கூட சொல்லலாம் இசை இளையராஜா.வெளிவந்த ஆண்டு :1980


பாட்சா 
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ரஜினியின் மாஸ்டர் பீஸ் படம். இசை: தேவா வெளியான ஆண்டு :1995


முள்ளும் மலரும் -
தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தரை விட ரஜினிக்கு பிடித்த இயக்குனரான  மகேந்த்ரன் இயக்கிய படம். ரஜினிகாந்த் நடிப்பு திறமைக்கு  தீனி போட்ட படம்.  -இளையராஜா இசையமைத்திருந்தார். வெளிவந்த ஆண்டு -1978


எனக்கு பிடித்த பாடல்கள்

சந்தனக்காற்றே- தனிக்காட்டு ராஜா
அதோ வாராண்டி- பொல்லாதவன்
பேசக்கூடாது- அடுத்த வாரிசு
மாலை சூடும்- நான் மகான் அல்ல
ராத்திரியில்- தங்கமகன்
என்னைத்தானே- நல்லவனுக்கு நல்லவன்
பெண்மானே சங்கீதம்- நான் சிகப்பு மனிதன்
நதியோரம் -அன்னை ஒரு ஆலயம் 
கண்மணியே- ஆறிலிருந்து அறுபது வரை
ஒரு ஜீவன்தான்- நான் அடிமை இல்லை.


கொசுறு: ரஜினிகாந்த் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை முதன் முதலில் பேனரில் போட்டு விளம்பரப்படுத்தியவர் அப்போதைய விநியோகஸ்தரும் இப்போதைய தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு அவர்கள். விளம்பரப்படுத்தப்பட்ட படம் பாஸ்கர் அவர்கள் இயக்கிய
பைரவி.

இந்த பதிவை தொடர
மதியோடை மதி.சுதா அவர்களையும்
தொப்பி தொப்பி அவர்களையும் அழைக்கிறேன்.
பப்ளி ஹரிஸ் அழைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், வம்பை வேலைக்கு வாங்குவோம்ல...மணிவண்ணன் அவர்கள் முந்திக்கொண்டார். 

Post Comment

இதையும் படிக்கலாமே:


38 கருத்துகள்:

  1. பெயரில்லா20 நவ., 2010, 2:02:00 PM

    தலைவர் படம்,னாலே கலக்கல்தான்..எல்லாமே சூப்பர் விமர்சனம்..நானும் அழைக்கலாம்னு நினைச்சேன்..நீங்க பிரபல பதிவராச்சே..என்ன நினைப்பீங்களோன்னு விட்டுட்டேன்...ஹிஹி

    பதிலளிநீக்கு
  2. டாப் டென்னில் அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
  3. எனக்கு அந்த மூன்றுமுகம் படத்தின் காட்சியும், பாட்ஷா படத்தின் காட்சியும் ரொம்ப பிடிக்கும்.


    தொடர் பதிவு போட்டதற்கு நன்றி ரஹீம் கஸாலி.

    பதிலளிநீக்கு
  4. நீங்க கலக்குங்க தல..நம்ம பதிவும் இன்னைக்கு வரும்..

    பதிலளிநீக்கு
  5. நண்பரே என்னை மதித்து எழுத அழைத்ததற்கு நன்றி. கண்டிப்பா எழுதுகிறேன்

    பதிலளிநீக்கு
  6. அருமையான தொகுப்பு நண்பா .

    பதிலளிநீக்கு
  7. Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....www.ellameytamil.com

    பதிலளிநீக்கு
  8. அருமையான தொகுப்பு..

    பதிலளிநீக்கு
  9. அருமை நண்பரே..! கலக்கலாக தொகுப்பு. வீடியோக்களின் இணைபபுடன் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  10. என்னிடமும் ஏதோ சரக்கிருக்கிறது என எனை மதித்து தொடர்பதிவிற்கு அழைத்த என் ஆருயிர் சகோதரனுக்கு மிக்க நன்றி.... நேரப் பிரச்சனையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.. அதனால் 7 நாள்கள் தவணை கேட்டுக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  11. எல்லோரும் ரஜனி, கமல் என்று ஒரு உலகத்தை கீறி வைத்துக் கொண்டு (அவர்கள் இருவருக்கும் எப்போதும் ஒரே மனமும், ஒரே உலகும் தான்..)வேறுபிரித்துப் பார்க்கும் உலகில் நான் கொஞ்சம் வித்தியாசம் இருவரிலும் உள்ள நல்ல விசயங்களைத் தான் தேடிப் பிடித்துப் பார்ப்பேன்... 7 நாளில் வித்தியாசமான ஒரு பதிவுடன் தங்கள் தொடர் பதிவில் சங்கமிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  12. நல்ல தொகுப்பு நண்பரே! தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  13. நல்ல தொகுப்பு பங்காளி சாரி பார் லேட்

    பதிலளிநீக்கு
  14. [im]http://3.bp.blogspot.com/_oDprMbLG5kg/TKjHMNj8a9I/AAAAAAAAAAg/B67DIjlQpg8/S220-h/images1.jpg[/im][ma]சோழ பரம்பரை எம்.எல்.ஏ.,-வின் வருகைக்கு நன்றி. தொடர் பதிவுக்கு என்னை அளித்த உங்கள் பெயரை காப்பாற்றும் அளவிற்கு பதிவு போட்டிருக்கேனா?[/ma]

    பதிலளிநீக்கு
  15. [im]http://3.bp.blogspot.com/_EHIuJNJRABk/TNBc7jfug4I/AAAAAAAAADs/bZT91Krp5wk/S220-h/Picture 011.jpg[/im] [ma]வருகைக்கு நன்றி ஹரிஸ். நீங்களும் கலக்கிருக்கீங்க போல.வாழ்த்துக்கள்[/ma]

    பதிலளிநீக்கு
  16. [im]http://1.bp.blogspot.com/_-2o52DWtU0M/SuleTf5UDtI/AAAAAAAAABU/8BDmwYcTmBA/S220-h/manibharathi.png[/im][ma]வாங்க மணிபாரதி. சேர்ந்தாச்சு....சேர்ந்தாச்சு...[/ma]

    பதிலளிநீக்கு
  17. [ma]வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரவீன் குமார்[/ma]

    பதிலளிநீக்கு
  18. [ma]வருக்கைக்கு நன்றி மதி.சுதா, கலக்குங்க[/ma]

    பதிலளிநீக்கு
  19. [ma]வருகைக்கு நன்றி அருண் பிரசாத். நீங்க ஆரமிச்சு வச்சீங்க. யாரு முடிக்க போறான்னு தெரியல. ஆனால், இப்போதைக்கு முடிகிறமாதிரி தெரியல.[/ma]

    பதிலளிநீக்கு
  20. [ma]பங்காளி முறைமாமன் கார்த்திகுமாரின் முதல் வருகைக்கு நன்றி....லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கீங்க...[/ma]

    பதிலளிநீக்கு
  21. சுவாரசியமான சம்பவம்னு சொல்லி ஆரம்பித்து கடைசிவரை நல்லா சுவாரசியமா எழுதுனீங்க. இளைய ராஜானால தான் படம் வெற்றியானது என்பது தான் என்னால்ஜீரணிக்க முடியல. அது தான் கொஞ்சமா இடிக்குது. நல்ல கதை! சூப்பரா தொகுத்தீங்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. [ma]சூப்பர்! SUPER!! சூப்பர்!!![/ma]

    பதிலளிநீக்கு
  23. என்ன பாஸ்... ரொம்ப ஸ்பீடா இருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  24. அழைக்க நினைத்த எனக்கும் நன்றியா...?

    பதிலளிநீக்கு
  25. நான் எழுத போற பதிவுல உங்க லிஸ்டுல இருக்குற பாதிப்படங்கள் வந்திடும் போல இருக்கே...

    பதிலளிநீக்கு
  26. கொசுறு தகவல் சூப்பர்...

    பதிலளிநீக்கு
  27. இந்த பின்னூட்ட நிரலி பற்றி கேட்டிருந்தேன்... என்ன ஆச்சு....? அதே போல NEWSLETTER அனுப்புவது எப்படி என்றும் சொல்லுங்கள்...

    பதிலளிநீக்கு
  28. [im]http://www.freeimagehosting.net/uploads/063418ec87.jpg[/im]-கேட்டது
    இந்த பின்னூட்ட நிரலி பற்றி கேட்டிருந்தேன்... என்ன ஆச்சு....? அதே போல NEWSLETTER அனுப்புவது எப்படி என்றும் சொல்லுங்கள்...
    [ma][si="4"][co="yellow"]விபரங்களை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியாச்சு பிரபா[co="red"][/si] [/ma]

    பதிலளிநீக்கு
  29. @ஆமினாஆமினா அவர்களுக்கு,
    இளையராஜாவால் தான் வெற்றியடைந்தது என்ற பேச்சு தளபதி படம் வந்தபோது இருந்தது உண்மையே....இளையராஜவுக்குகூட அந்த எண்ணம் இருந்தது. அதனால்தான் மணிரத்னம் கோபமாகி, இனி என் படத்திற்கு இளையராஜா வேண்டாம் வேறு யாரையாவது சொல்லுங்கள் என்று தனது நண்பர் ராஜீவ் மேனனிடம் கேட்க...அப்போது விளம்பரப்படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்த A.R. ரஹ்மானை சிபாரிசு செய்தார் ராஜீவ்மேனன். அவரை அழைத்துக்கொண்டு ரோஜா படத்தயாரிப்பாளர் கே.பாலச்சந்தரிடம் அறிமுகப்படுத்தினார் மணிரத்னம். அதன் பிறகு நடந்தது வரலாறு....

    பதிலளிநீக்கு
  30. //மன்னன்- ரஜினிகாந்த் சொந்தக்குரலில் பாடி... மன்னிக்கவும் பேசியிருப்பார்.//

    இந்த குறும்பு ச்சே ச்சே அக்குறும்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ்!!

    பதிலளிநீக்கு
  31. //கொசுறு: ரஜினிகாந்த் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை முதன் முதலில் பேனரில் போட்டு விளம்பரப்படுத்தியவர் அப்போதைய விநியோகஸ்தரும் இப்போதைய தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு அவர்கள். விளம்பரப்படுத்தப்பட்ட படம் 'பாஸ்கர்' அவர்கள் இயக்கிய
    பைரவி.//

    பின்னர் அந்த சூப்பர் ஸ்டார் என்ற மாளிகைக்கு தோரணம் கட்டி, விளக்கொளி கொடுத்து அழகு சேர்த்து, அழகு பார்த்தவர்கள்
    'மகேந்திரன்' மற்றும் முன்னணி டைரக்டர்கள். பின்னாளில் அவர்கள் எல்லாம் அந்த மாளிகையை எட்ட நின்று வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர, உள் நுழைய முடியவில்லை என்பது ஒரு சோகமான பின்னணி!! (அவர்களே ஒரு பேட்டியில் சொன்னது..)

    பதிலளிநீக்கு
  32. ((// இந்த பின்னூட்ட நிரலி பற்றி கேட்டிருந்தேன்... என்ன ஆச்சு....? அதே போல NEWSLETTER அனுப்புவது எப்படி என்றும் சொல்லுங்கள்...//))

    இதையும் ஃபாலோவர்ஸ் லிஸ்டை (நீங்கள் போட்டிருப்பது போல்) எப்படி பெரிசா போடுவது பற்றியும் எனக்கு மெயில்ல அனுப்புங்க பாஸ்!!

    பதிலளிநீக்கு
  33. இதையும் ஃபாலோவர்ஸ் லிஸ்டை (நீங்கள் போட்டிருப்பது போல்) எப்படி பெரிசா போடுவது பற்றியும் எனக்கு மெயில்ல அனுப்புங்க பாஸ்!!
    [si="4"][co="yellow"]உங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியாச்சு அப்துல் காதர்.[/CO][/SI]

    பதிலளிநீக்கு
  34. Star Post..


    http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  35. தொகுப்பு அருமை. காட்சிகள் விமர்சனம் செய்தததில் மெல்லிய குறும்புத்தனம் தெரிகிறது. ரசனை.பாடல்களின் தொகுப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
  36. தொகுப்பு அருமை. காட்சிகள் விமர்சனம் செய்தததில் மெல்லிய குறும்புத்தனம் தெரிகிறது. ரசனை.பாடல்களின் தொகுப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
  37. நல்ல தொகுப்பு நண்பரே!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.