என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, நவம்பர் 26, 2010

24 வலைப்பூ நண்பர்களுக்கு நன்றியோ நன்றி.



அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களுக்கு,
கடந்த பதிவோடு நூறு பதிவுகளை தொட்டுவிட்டேன் உங்களின் ஆதரவோடு.....
பதிவுகள்தான் நூறே தவிர அனைத்தும் என் பதிவல்ல....அதில் பாதிதான் என் சொந்தப்பதிவு....மீதி....எனக்கு மின்னஞ்சலில் வந்தது, அந்த நேரத்தில் பரபரப்பாக இருந்த செய்திகள், சில பத்திரிகைகளில் நான் படிக்கும்போது, அட இது நல்லாருக்கே...இந்த செய்தியை இந்த தலைமுறையினர் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்( ஆட்டோ சங்கர், மிசா போன்ற செய்திகள்) பகிர்ந்து கொண்டவை என்று எல்லாம் சேர்த்துதான் நூறு.   நான் இந்த உலகத்தை திருத்தவேண்டும், ஊரை திருத்தவேண்டும் என்றெல்லாம் நினைத்து பதிவுலகிற்கு வரவில்லை. கடந்த ஜூலை மாதம் மத்தியில்  எனக்கு எல்லாமுமாக இருந்த என்தந்தை அப்துல்  ரஹீம் அவர்கள் கேன்சரால் இறந்து போய் விட்டார்கள். அந்த சோகத்திலிருந்து மீள்வதற்கு வழிதெரியாமல் இருந்த போதுதான் எனக்கு பதிவுலகம் அறிமுகமானது. ஒரு பிளாக் ஆரம்பித்தேன். (அதற்க்கு முன்னே ஒரு பிளாக்கை ஆர்வக்கோளாறினால்  ஆரம்பித்து மூடியது வேறு விஷயம். ) என் சோகங்களை மறக்க என் கவனத்தை வலையுலகின் பக்கம் திருப்பினேன். என்ன எழுதுவது என்று தெரியாமல் கடந்த வருடத்தில் நான் எழுதி யூத்புல் விகடனில் வெளிவந்த இருபதுக்கும் மேற்பட்ட பதிவுகளை அப்படியே மீள்பதிவு செய்தேன். அப்போது கூட தமிழ்மணம், இன்ட்லி,  தமிழ் 10  போன்ற திரட்டிகளில் இணைக்க(தெரிய)வில்லை. அப்புறம் ஒரு வழியாக அனைத்திலும் இணைத்தேன். ஆனால் ஆரம்பத்தில் ஓட்டும், பின்னூட்டமும் வரவில்லை. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஒரு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது. அதன்பிறகு தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் எனக்கு பதினெட்டாவது இடம் கொடுத்தும், நம்ம நண்பர்  அஹமது  இர்ஷாத்அவர்கள்   வலைச்சரத்திலும், நண்பர்  பிலாசபி பிரபாகரன் அவரின் வலைப்பூவிலும்   என்னை பற்றியும் எழுதி பிரபலம் ஆக்கினார்கள்.  ஏதோ ஓரளவிற்கு நானும் இப்போது தெரிந்தமுகமாகிவிட்டேன். அதற்காக உங்கள் அத்துணை பேருக்கும் நன்றி. மேலும்  என் பதிவுகளை உங்களிடம் கொண்டுவந்து சேர்த்த திரட்டிகளுக்கும், எனக்கு திரட்டிகளில் வாக்களித்த நண்பர்களுக்கும்  ,தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திவரும் நண்பர்களுக்கும், என்னையும் மதித்து பின்தொடரும் நண்பர்களுக்கும் நன்றி...நன்றியோ நன்றி.

(அதே நேரம் நான் யாருடைய கற்பனையில் உதித்த கதை, கவிதை கட்டுரை,ஜோக்குகள் என்று எதையும் திருடவில்லை. சில பொதுவான செய்திகளை சில பத்திரிகைகளில் படித்து பகிர்ந்துள்ளேன்).

Post Comment

இதையும் படிக்கலாமே:


24 கருத்துகள்:

  1. சகோதரா தங்களுக்கு எல்லாமெ வெற்றி தான் காரணம் தங்களின் நல்ல மனம் தான் காரணம்.... ஒரு சந்தேகம் தங்களுக்கு அதிக கருத்திட்டவன் நானா..??

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுக்கள்.சகோ.தொடர்ந்து பயனுள்ள இடுகைகைகள் படைக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் தல...தொடர்ந்து கலக்குங்க..

    பதிலளிநீக்கு
  4. நூறாவது பதிவிற்கு பூச்செண்டு...

    Faviconல் மாறி மாறி பளிச்சிடுவது தானே உங்கள் தந்தையின் புகைப்படம்... வளரட்டும் அவர் புகழ்...

    தொடர்ந்து பல படிகள் முன்னேற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. நல்ல பல பதிவுகள் தந்தீர்கள்100வது பதுவுக்கு வாழ்த்துக்கள்!!!தொடரட்டும் உங்கள் பணி

    பதிலளிநீக்கு
  6. தொடரட்டும் வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  7. சென்சுரி,டபிள் சென்சுரி,ட்ரிபிள் சென்சுரி .....என்று தொடரட்டும் பதிவு ஆட்டம்!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா26 நவ., 2010, 8:21:00 PM

    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா26 நவ., 2010, 8:21:00 PM

    இன்னும் கலக்குங்க..

    பதிலளிநீக்கு
  10. //கலையன்பன் said...
    //நாம கிழிச்சது :100 //
    100 கிழிச்சிட்டீங்களே, வளர்க!
    24-Nov-2010 9:09:00 PM //

    தங்களின் 100-க்கு வாழ்த்து சொன்ன
    'முதல்வன்' நான் தான். (சென்ற இடுகையிலேயே
    வாழ்த்திவிட்டேன்.)
    மீண்டும் வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  11. நன்றி சொன்னதற்கு நன்றி, சகோதரரே!
    (பன்றி) படம் மாற்றிவிட்டு வேறு படம்
    போடலாமே?

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள்!!!! எங்களைப்போல புதிய பதிவர்களுக்கும் முடிந்தால் நேரம் ஒதுக்குங்கள் !!!!!

    பதிலளிநீக்கு
  13. நான் உங்களை தொடர்வதில்லை.வந்த வரைக்கும் மகுடமாக தெரிவது மிசா என்ற எமர்ஜென்சி பதிவுகள்.

    100க்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்க‌ள்..சின்ன‌ திருத்த‌ம்

    முக‌ம்ம‌து இர்ஷாத் இல்லை அஹ‌ம‌து இர்ஷாத்..

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள் நண்பா

    பதிலளிநீக்கு
  16. கலக்குங்க நண்பரே உலகம் உங்கள் வசம்(அன்பு சாம்ராஜ்யத்த சொன்னேனுங்க)மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. 100 - வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    பாராட்டுக்கள். தொடர்ந்து பயனுள்ள பல பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள் நண்பரே....
    உங்கள் சாதனை பயணம் தொடர்க ..
    http://dilleepworld.blogspot.com/

    பதிலளிநீக்கு
  19. 100 ஆவது பதிவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நண்பரே

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.