என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், நவம்பர் 29, 2010

14 அமீர் VS மம்தா மோகன்தாஸ்

 சமீபத்தில் சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றியை அடுத்து சசிக்குமார் இயக்கிவரும் படம் 'ஈசன்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் அமீர்," சசிக்குமாரும் சமுத்திரக்கனியும் செய்த மிகப்பெரும் விஷயம் அபிநயா என்ற பேசமுடியாத பெண்னை நடிக்க வைத்து இருப்பதுதான். இந்த விஷயம் எனக்கு தோணாமப் போச்சேன்னு நான் ரொம்ப வெட்கப் படுகிறேன்".என்றார்.

 அதே நேரம் கேன்சரால் அவதியுற்றுவரும் நடிகை மம்தா மோகன்தாஸ், “எனக்கு கேன்சர் வந்ததில்கூட கவலையில்லை. ஆனால் அதனை மனிதர்கள் பார்க்கும் விதம்தான் வருத்தமாயிருக்கிறது. ஜெயம் ரவி ஜோடியாக அமீர் இயக்கத்தில் நான் நடிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு கேன்சர் வந்திருப்பதை அறிந்த அமீர் என்னை படத்தில் இருந்து தூக்கிவிட்டார். “உன்னால் நடிக்க முடியாதும்மா” என்றார் அமீர். இப்போது எனக்குப் பதில் நீத்து சந்திரா நடிக்கிறார். கேன்சர் வந்தால் நடிக்க முடியாது என்பதெல்லாம் அபத்தம். டாக்டர்களிடம்கூட அமீரை பேசச் சொன்னேன். அவர் மறுத்துவிட்டார்..” என்று பெரும் வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார்.

. வாய்பேசமுடியாத பெண்ணை நடிக்கவைக்காததற்க்கு வெட்கப்படுவதாக கூறிகொள்ளும் அமீர் பேசுவது மேடைக்காக மட்டும் தான் போல .... கேன்சருடன் போராடுவது என்பது எவ்வளவு  பெரிய வேதனை என்று என் தந்தைக்கு  அருகிலிருந்து பார்த்தவன் நான். அந்த சோகத்தை மறைக்க மம்தா போன்ற நடிகை  தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பதே பெரிய மனதைரியம்தான், தன்னனம்பிக்கைதான்  . அப்படிப்பட்டவரை மனதளவில் காயப்படுத்தியிருக்கிறார் அமீர். நோயைவிட கொடுமை நோயாளி புறக்கணிக்கப்படுவதுதான். அன்வர் என்ற மலையாளப் படத்தில் இப்போது நடித்துவருகிறார்  மம்தா. நல்லவேளை அந்த மலையாள இயக்குனர் ஏதும் சொல்லவில்லை.

Post Comment

இதையும் படிக்கலாமே:


14 கருத்துகள்:

  1. மம்தாவுக்கு ஆதரவு அளிப்பதெல்லாம் சரிதான், ஆனால் அவருடைய வேறு நல்ல புகைப்படத்தை உபயோகப்படுதுயிருக்கலாம், இந்த புகைப்படத்தால் இந்த பதிவின் நோக்கம் சிதற வாய்ப்புள்ளது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!

    பதிலளிநீக்கு
  2. அடடா.,!! வடை போச்சே..!! சரி முழுவதும் படித்து விட்டு கருத்து சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நானும் இந்த இரண்டு நிகழ்வுகளையும் படித்தேன்.. எப்படி நடிக்கறானுங்க பாருங்க. இவனுங்க... என்னத்த சொல்ல..

    பதிலளிநீக்கு
  4. அரசியல் வாதி பேச்சி மேடைக்கு மேடை மாறும்
    சினிமாக்காரன் பேச்சி படத்திற்கு படம் மாறும் ..

    பதிலளிநீக்கு
  5. தான் ஒரு மனிதநேயமற்ற மனிதன் என்பதை வெளிக்காட்டியுள்ளார் அமீர்....

    பதிலளிநீக்கு
  6. //மம்தாவுக்கு ஆதரவு அளிப்பதெல்லாம் சரிதான், ஆனால் அவருடைய வேறு நல்ல புகைப்படத்தை உபயோகப்படுதுயிருக்கலாம், இந்த புகைப்படத்தால் இந்த பதிவின் நோக்கம் சிதற வாய்ப்புள்ளது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!//
    me too

    பதிலளிநீக்கு
  7. என்னத்த சொல்ல! ஊருக்குத்தான் உபதேசம்!!!

    பதிலளிநீக்கு
  8. Thankyou for hearing my comment and change photo! Thanks again!

    பதிலளிநீக்கு
  9. //நோயைவிட கொடுமை நோயாளி புறக்கணிக்கப்படுவதுதான்//

    மிகச்சரியா சொன்னீங்க.

    பதிலளிநீக்கு
  10. அமீர், மிஷ்கின் போன்றவர்களின் குட்டு இதுபோல வெளிப்படுவது நல்ல விஷயமே... இனியாவது மக்கள் உண்மையை புரிந்துக்கொள்ளட்டும்...

    பதிலளிநீக்கு
  11. நோயாளி புறக்கணிக்கப்படுவது வேதனையான விஷயம் தான்...........

    :(

    பதிலளிநீக்கு
  12. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_30.html

    நன்றி

    பதிலளிநீக்கு
  13. ஊருக்குத்தான் உபதேசம்!!!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.