என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், டிசம்பர் 02, 2010

26 இசைப்புயல் A.R.ரஹ்மானுடன் ஒரு சந்திப்பு


 ஆஸ்கார் தமிழன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் நெருக்கமான மலேசியா தொழிலதிபர் ஒருவர் எங்கள் ஊரை சேர்ந்தவர். எனக்கும் நண்பர். அவர் அடிக்கடி ரஹ்மானை சந்திப்பார். நினைத்த நேரத்தில்  ரஹ்மானுடன்  தொலைபேசியில்  பேசுவார் .ரஹ்மான்  மலேசியா வரும்போதெல்லாம் இவரின் காரில்தான் பயணம் செய்வார்.  ரஹ்மானின் குடும்ப நண்பர் என்றுகூட சொல்லலாம். இவரின் குழந்தை காதணி விழா  கடந்த  நான்கு  வருடங்களுக்கு  முன்பு  எங்கள் ஊரில்  நடந்த  போது  ரஹ்மான் தன்  மனைவி குழந்தைகளுடன் எங்கள் சிறிய கிராமத்திற்கு வருகை புரிந்துள்ளார். அப்படியொரு நெருக்கம். இப்படித்தான் பாய்ஸ் படம் வெளியான அன்று நாங்கள் அனைவரும் மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ஒரு திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளிவந்தோம். உடனே இவர் அந்த நேரத்திலும்(நள்ளிரவு இரண்டு மணி. இந்திய நேரம், முன்னிரவு 11 ;30 ). தொலைபேசியை எடுத்து ரஹ்மானுக்கு கால் செய்தார். ரஹ்மானின் மனைவிதான் எடுத்தார். அவர் (ரஹ்மான்) ரெக்கார்டிங் சென்டரில் இருப்பதாகவும். வந்ததும் நான் சொல்கிறேன் என்றார். இவர் அவரிடம் பாடல்கள் சூப்பர், ரீ ரெக்கார்டிங் அருமை என்று ஒரு அரைமணி நேரத்திற்கு ரஹ்மான் புகழ் பாடினார். அடுத்தநாள் நான் அந்த நண்பரை  சந்திக்கும் போது பின்னர் ரஹ்மானே அவரை தொடர்பு கொண்டதாக சொன்னார்.
இசைப்புயல் A.R.ரஹ்மானுடன் எனது  நாள் என்று தலைப்பு  வைத்துவிட்டு நீ என்னப்பா அந்த தொழிலதிபரை பற்றியே சொல்லிக்கு இருக்கே....மேட்டருக்கு வாப்பான்னு நீங்க சொல்றது எனக்கு விளங்குது. என்ன செய்றது பதிவை கொஞ்சம் பெருசா இழுக்கனுமே?......சரி டென்சன் ஆகாதீங்க விசயத்திற்கு வருகிறேன்.


ஏறக்குறைய  ஒரு  பன்னிரண்டு  வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல் வெளிவந்த நேரம் அது. ஒரு நாள் அந்த தொழிலதிபர் ரஹ்மானை  பார்க்கசென்னைக்கு(அப்ப... மெட்ராசை சென்னைன்னு பேரு மாத்தியாச்சு) போறேன். நீயும் வர்றியா?ன்னு கேட்டார். கரும்பு தின்ன கூலியா?ன்னு நினைச்சுக்கு போட்டது போட்டபடி(அட வேலைய இல்லேங்க...அப்ப நான் வெட்டியாதான் சுத்திக்கு இருந்தேன். சும்மா ஒரு பில்டப்புக்கு சொல்றதுதான்) உடனே கிளம்பவேண்டியதுதான் என்று நினைத்து சரியென்றேன்.. பார்த்த, எதிர்படும் நண்பர்களிடமெல்லாம் நான் ரஹ்மானை பார்க்க போறேன்னுஎன்னவோ சந்திர மண்டலத்துக்கு போகப்போறது போல  பெருமையா பீத்திக்கிட்டேன்.

அப்புறம் தான் வெனையே ஆரம்பமாச்சு. முதலில் நான் ஒருவன்தான் போவதாக பிளான். நம்ம பெருமையடிப்பதை  பார்த்துட்டு இன்னும் ரெண்டு பேருநானும் வாரேன்னு  சேர்ந்துக்கிட்டாங்க....அப்புறம் என் நண்பர்கள் அனைவரும் அப்போது வெளிவந்திருந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல் கேசட்டை கொடுத்து ரஹ்மானிடம் ஆட்டோகிராப் வாங்கி வரும்படி சொன்னார்கள். அனைத்தையும் வாங்கிக்கொண்டு ஒரு வழியாக  அடுத்தநாள் காலை நண்பரின்  காரிலேயே  கிளம்பினோம்.

மாலை நேராக நாங்கள் போயி இறங்கியது ரஹ்மானின் வீட்டில்தான். வாசலில் நின்ற செக்யூரிட்டியிடம் நாங்கள் வந்த விஷயத்தை சொல்லி சிறிது நேரம் காத்திருந்தோம். அப்போதெல்லாம் அலைபேசி புழக்கத்தில் இல்லை. இருந்திருந்தால் நேரடியாக ரஹ்மானிடமே பேசி நாங்கள் வந்த விஷயத்தை சொல்லியிருக்கலாம்.சிறிது நேரத்தில்  கதவு திறக்கப்பட்டது. அப்போது ரஹ்மானுக்கு உதவியாளராக இருந்த அப்பாஸ் என்பவர்தான் எங்களை வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றார்.சிறிது நேரம் காத்திருங்கள் அண்ணன்(ரஹ்மான்) போன் பேசிக்கு இருக்கார் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.   சுட சுட தேநீர் வந்து. பருகிக்கொண்டு இருக்கும் போதே புயல் வந்தது தென்றலாய்.

என்னால் நம்பவே முடியவில்லை. இந்தியாவே ஆராதிக்கும் ஒருவரை நாங்கள் நேரில் அதுவும் நெருக்கத்தில் பார்க்கிறோம் என்று. சிறிது நேர நல விசாரிப்புக்கு பிறகு எங்களைரஹ்மானிடம்  அறிமுகம் செய்தார் எங்கள் நண்பர்/ தொழிலதிபர். என்னை பற்றி அறிமுகம் செய்யும்போது இவன் ஒரு தீவிரவாதி என்றார். உடனே ரஹ்மான் அதிர்ச்சியாகி என்ன சொல்றீங்க என்று கேட்டார்.

உடனே நண்பர் 'அதாவது உங்களின் தீவிர ரசிகர் இவன்' என்றார். ஓ...கொஞ்ச நேரம் பயந்துட்டேன் என்று கூறிய ரஹ்மான் என்னிடம்திரும்பி இசையை ரசியுங்கள் ஆனால் அதிலேயே மூழ்கிவிடாதீர்கள் என்று சொன்னார்.சிறிது நேரம் பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் உங்களோடு போட்டோ எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன்.அவரும் மறுப்பின்றி இசைந்தார்.  நாங்கள் தயாராக கொண்டுபோயிருந்த கேமாரவை எடுத்து ஒரு குரூப் போட்டோ, பின்னர் தனித்தனியாக ஒன்று எடுத்துக்கொண்டோம்.

என் நண்பர்கள் கொடுத்த கண்டுகொண்டேன்....கேசட்டில் தயங்கி தயங்கி ஆட்டோகிராப் கேட்டேன். அவரும் சளைக்காமல் எல்லாத்திற்கும் ஆட்டோகிராப் போடு கொடுத்தார். பின்னர் நாங்கள் அவருக்கு நன்றி சொல்லி கிளம்பினோம். அன்றிரவு எக்மோரில் இருக்கும் (எங்கள் ஊரை சேர்ந்தவரின்)  சிங்கப்பூர் லாட்ஜில்(அப்போது அது மெஜஸ்டிக் லாட்ஜ்.) தங்கிவிட்டு காலையிலும் ரஹ்மான் வீட்டிற்கு சென்று அவரிடம் சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினோம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


26 கருத்துகள்:

  1. வாவ் வாழ்த்துகள் நண்பரே.,!
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. முஸ்லீம்2 டிச., 2010, 8:54:00 PM

    அல்லா ஹராம் என்று சொன்ன இசையையே தொழிலாக கொண்டவரும் அதை ரசிப்பவரும் அல்லாவிற்க்கு உகந்தவர்கள் அல்ல , மறுமை உங்களுக்கு பாடம் சொல்லும்

    பதிலளிநீக்கு
  3. நினைவில் நிற்கும் அனுபவம்தான்.அந்த ஃபோட்டோவையும் போட்டிருக்கலாமே!

    பதிலளிநீக்கு
  4. மிகப் பெரிய விஷயம் இது.... கிரேட்!

    பதிலளிநீக்கு
  5. Thats awesome!

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. சென்னை பித்தன் சார், அப்படின்னா மேலே இருக்கது யாரோட போட்டோன்னு நினைச்சீங்க?

    பதிலளிநீக்கு
  7. // இசையை ரசியுங்கள் ஆனால் அதிலேயே மூழ்கிவிடாதீர்கள்//

    ம்ம்ம் இசைப் புயலே அப்படி சொல்லிடுச்சா..!!

    பதிலளிநீக்கு
  8. நீங்க சொன்னதுஎல்லாம் உண்மைன்னே நம்புரோங்க!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  9. Lakshmi said..
    நீங்க சொன்னதுஎல்லாம் உண்மைன்னே நம்புரோங்க!!!!!!!!!
    ஏக்கா.....இப்படி ஒரு சந்தேகம். இவையனைத்தும் கதையல்ல...நிஜம். நூற்றுக்கு நூறு நிஜம்.

    பதிலளிநீக்கு
  10. சில விஷயங்களில் தான் அவரை எனக்கு பிடிக்காது. மற்றபடி நல்ல மனம் படைத்தவர். இச்சந்திப்பு வாழ்நாள் முழுவதும் உங்களால் மறக்க முடியாது இல்லையா. நாங்களும் பெருமையா சொல்லிக்குவோம்ல எங்க சகோ அவரை பாத்துருக்கார்ன்னு :))

    பதிலளிநீக்கு
  11. நண்பர் முஸ்லிம் கருத்தை நான் வரவேற்கிறேன்,எந்த ஒரு முஸ்லிமும் இசையை விரும்பக் கூடாதுதான் அல்லாஹ்வும் திருக் குர்ஆனில் இதையேத்தான் கூறியுள்ளான்.

    என்னுடைய தாழ்மையான கேள்வி ?

    அல்லாஹ் இசையைமட்டுமா ஹராமாக்கிவுள்ளான் ?

    போதையை ஹராமாக்கியுள்ளான்.
    சூதாட்டத்தை ஹராமாக்கியுள்ளான்.
    விபச்சாரம் செய்வதை ஹராமாக்கியுள்ளான்.
    திருட்டை ஹராமாக்கியுள்ளான்.
    வட்டியை ஹராமாக்கியுள்ளான்.
    தீயதை பார்ப்பதை ஹராமாக்கியுள்ளான்.
    தீயதைக் கேட்பதை ஹராமாக்கியுள்ளான்.
    புறம் கூறுவதை ஹராமாக்கியுள்ளான்.
    வரதட்ச்சனை வாங்குவதை ஹராமாக்கியுள்ளான்.
    அநியாயமா பிறரை கொல்வதை ஹராமாக்கியுள்ளான்.
    ஷிர்க் வைப்பதை ஹராமாக்கியுள்ளான்
    இன்னும் எத்தனையோ தீய செயல்களை ஹராமாக்கியிருக்கான்,எதுக்காக ?
    மனிதகுலம் நன்மைக்காக.
    நம்மில் எத்தனை பேரு இஸ்லாமிய நெறிமுறையில் வாழ்கிறோம் ? இஸ்லாமிய பேங்கில் எத்தனை இஸ்லாமியர்களுக்கு கணக்கு இருக்கு ?

    அரபு நாடுகளிலும் இஸ்லாமிய நாடுகளிலும் தேசியக் கீதமாக இசையை ஏன் பயன் படுத்துகிறார்கள் ?
    இது ஹராம் என்று அந்த நாட்டவர்களுக்குத் தெரியாதா ?
    அல்லாஹ் என்னையும் மன்னித்து, இசையை தொழிலாலக கொண்டவர்களையும் மன்னித்து, உலக மக்கள்களிடம் அமைதியை ஏற்படுத்தி தந்தருள்வானாக ஆமின்.
    நான் கேட்ட கேள்விகள் அனைத்தும் தவறுதான்,எத்தனையோ ஹராமான செயல்களை சுட்டிக் காட்டாமல் இசையை மட்டும் சுற்றி காண்பித்ததற்காக இதை எழுதினேன்.இது தவறுதான்.இதை எழுதியக் குற்றத்திற்காக அல்லாஹ் என்னை மன்னித்து அருள்வானாக. ஆமின்.

    பதிலளிநீக்கு
  12. சந்திப்பை விவரித்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  13. பெருமை பட வேண்டிய விஷயம். ARR ஸ்டைல் ஆக இருக்கிறார். சூப்பர் போட்டோ.

    பதிலளிநீக்கு
  14. கொடுத்து வச்சவரு...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  15. [ma]kindly remove "dinamalar" link. in your top menu list. dinamalar is feeding news against islam.. hope you understand..[/ma]

    பதிலளிநீக்கு
  16. அடடே சூப்பர்... எப்பவோ எழுதியிருக்க வேண்டிய பதிவை பதிவுலகிற்கு வந்து இவ்வளவு நாள் கழித்து எழுதியிருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  17. அந்த சமயம் நீங்கள் சினிமாவிற்கு கதை எல்லாம் எழுதி முயற்சி செய்து கொண்டு இருந்தீர்கள் அல்லவா.....

    பதிலளிநீக்கு
  18. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  19. சிறப்பாக இருந்தது உங்கள் எழுத்து நடை. பிடித்திருக்கிறது. ARR ஐ நாங்கள் நேரில் சந்தித்ததை போன்ற பிரம்மை உண்டாக்கி இருந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  20. உங்கள் புகைப்படம் கிடைத்தது. டெரர்ரா இருக்கிங்க

    பதிலளிநீக்கு
  21. தொப்பி தொப்பி சொன்னது....உங்கள் புகைப்படம் கிடைத்தது. டெரர்ரா இருக்கிங்க//

    [ma]நண்பரே....பத்து பன்னிரண்டு வருடத்திற்கு முந்தைய போட்டோ அது. இப்படித்தான் புயலில் அடிபட்டவன் போல இருப்பேன். (இப்ப மட்டும் என்ன வாழுது-இது என் மனசாட்சி...)[/ma]

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.