என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், டிசம்பர் 15, 2010

11 நானும் தமிழ்மணத்தில்.....


தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் 2010- இல் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். பதிவுலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் நம்ம என்னத்த கலந்துக்கு என்று நினைத்து சும்மாதான் இருந்தேன். கடந்த இரு தினங்களுக்கு முன் நம்ம நண்பர் பிலாசபி பிரபாகரன் அவர்கள் தமிழ்மணம் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். அதில் போட்டியில் வெல்வதை விட கலந்துக்கொள்வதே முக்கியமானது என்று எழுதியிருந்தார். அதன் பிறகுதான் சரி நாமும் கல(ந்து)க்குவோம்ன்னு முடிவு பண்ணேன். கலந்துக்கலாம்ன்னு முடிவு பண்ணினேனே தவிர,  எல்லாமே நல்லாருக்கு(காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா). ஜவுளிக்கடை விளம்பரம்போல எதை எடுப்பது...எதை விடுப்பதுன்னு ஒரே குழப்பம். அப்புறம் ஒரு வழியா எனக்கு பிடிச்ச  மூன்றை தேர்வு பண்ணினேன் உங்களுக்கும் பிடிக்கணுமே என்ற வேண்டுதலுடன்.....
 இதோ நான் தேர்வு செய்த முத்துக்கள் மூன்று...(ஹலோ....அது முத்தா...சொத்தையான்னு நாங்க சொல்லனும்ன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான். அப்ப நீங்களே சொல்லுங்களேன்....)


 தமிழ்மொழி, வரலாறு, கலாச்சாரம், தொல்லியல் என்ற பிரிவில்.....
மாறிவிட்ட பழமொழிகள் என்ற கட்டுரையும்

நகைச்சுவை, கார்டூன்  என்ற பிரிவில்..... 

அரசியலில் யாருக்கு என்ன விருது கொடுக்கலாம்-ஒரு பரிந்துரை   என்ற கட்டுரையும்

பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் என்ற பிரிவில்.....


இசைப்புயல் ரஹ்மானுடன் எனது நாள் என்ற கட்டுரையும் சமர்பித்துள்ளேன்.

 நீங்கள் வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த கட்டுரைகளை சமர்பித்துள்ளேன்.. தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, வெற்றிபெற  செய்து  என்னை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள். பங்கு

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் சகோதரம்...

    பதிலளிநீக்கு
  3. எனக்கு ஓட்டு இருந்தா கண்டிப்பா போடரேன் நண்பா

    பதிலளிநீக்கு
  4. //வெற்றிபெற செய்து என்னை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்//நிச்சயமாக நண்பரே வாக்களிக்கிறோம்... வெற்றிப் பெற வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  5. சூப்பர்... உங்களுடைய முதல் மற்றும் மூன்றாவது போட்டி பிரிவுகள் அரிதானது... அதனால் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது... ஆனால் நிச்சயமாக ஓட்டு போடுவேன் என்று உறுதியளிக்க முடியாது... ஏனெனில் எனது நண்பர்கள் நிறைய பேர் கலந்துக்கொள்ளும்போது நான் என்னுடைய ஒரே ஒரு ஓட்டை எந்த நண்பருக்கு போடுவேன்... அதனால் படித்துபார்த்துவிட்டு தான் ஓட்டளிப்பேன்...

    பதிலளிநீக்கு
  6. வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.