என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், டிசம்பர் 14, 2010

32 உங்களுக்கு வடை வாங்க ஆசையா?- வாங்க சொல்லித்தாரேன்.

இப்போது பதிவர்களுக்கிடையே மிகப்பெரும் எழுச்சியே ஏற்பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

எதற்காக  இந்த எழுச்சி?. தமிழ்மணத்தில் சிறந்த பதிவு இருபதில் ஒன்றாக நம் பதிவு வரவேண்டும் என்றா?அல்லது  தமிழ்மணம் விருதுகள் 2010  -இல் நமது பதிவுகளும் விருது பெற வேண்டும் என்ற ஆசையிலா? அதுதான் இல்லை. எல்லாம் வடைக்கும், சுடுசோற்றுக்கும்தான்.



வடை,சுடுசோறு  என்று பதிவுலகம் சரவண பவன் ரேஞ்சுக்கு மாறிவிட்டது.  .

அதென்ன வடையும் சுடுசோறும் என்று கேட்பவர்கள் பதிவுலகத்திற்கு புதியவராக இருக்கவேண்டும். அதை தனியாக விளக்க முடியாது. படிக்க படிக்க உங்களுக்கே விளங்கிடும்.

முன்பெல்லாம் மீ பர்ஸ்டு, மீ செகண்டு என்றுதான் பின்னூட்டம் வரும். ஒரு பதிவை போட்டுட்டு கீழே பார்ப்பதுக்கு இடையில் நான் மேலே சொன்ன மீ பர்ஸ்டு, மீ செகண்டு என்ற  பின்னூட்டங்கள் வந்து விழும். அனால், இப்போது அதுவே கொஞ்சம் மாறி வடை சுடுசோறு என்றாகிவிட்டது.

இன்னும் சில நாளுக்கு பிறகு இதுவே போண்டா எனக்கு, பஜ்ஜி எனக்கு, கஞ்சி எனக்கு, கூழு எனக்குன்னு மாறினாலும் ஆச்சர்யப்படுதற்கில்லை. சரி நம்ம விஷயத்திற்கு வருவோம். நீங்கள் எப்படி வடை சுடுசோறு  வாங்குவது?


முதலில்ஒரு பேப்பர் எடுத்துக்கொள்ளுங்கள்.  தினமும், அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் பதிவு  போடும் பதிவர்களை அந்த  பேப்பரில்  குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வாரந்தோறும் அல்லது நாலு அஞ்சு நாளுக்கு ஒரு தடவை  பதிவிடும் பதிவர்களை விட்டுவிடுங்கள். அவர்களால் வாரத்துக்கு ஒரு வடையோ ஒன்னரை வடையோதான் கிடைக்கும்.



அடுத்து, அவர்கள் எத்தனை மணிக்கு பதிவிடுகிறார்கள் என்று பார்த்து அதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ரெண்டு மூன்று நாள் தொடர்ச்சியாக அவர்களை கவனித்து வாங்க...அந்த ரெண்டு மூணு நாளும் அவர்கள் போடும் பதிவு நீங்கள் ஏற்கனவே குறித்து வைத்த நேரத்துடன் ஒத்துப்போகிறதா என்று சரி பாருங்க....ஒரு அஞ்சு நிமிடம் முன்னே பின்னே இருந்தா பரவாயில்லை.



இனி நீங்கள் உபயோகபடுத்தும்  பிரவுசரை திறந்து கொள்ளவும். மொசிலா, இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர், கூகள் குரோம் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசர்களை பயன்படுத்துபவராக இருந்தால் இன்னும் சிறந்தது.



ஒரே நேரத்தில் அனைத்து பிரவுசர்களையும் திறந்து கொள்ளுங்கள்.  அதில் ஏற்கனவே நீங்கள் குறித்து வைத்திருக்கும் பதிவர்களின் வலைப்பதிவு முகவரியை கொடுத்து ஒரு  பிரவுசருக்கு ஐந்து டேப் என்று திறந்து கொள்ளுங்கள்.



அடுத்து, வடை எனக்கே, போண்டா எனக்கே, பஜ்ஜி எனக்கே, சுடுசோறு எனக்கே என்று உங்களுக்கு பிடித்த வார்த்தையை டைப் செய்து, அதை காப்பி செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். இனி உங்கள் மின்னஞ்சல் முகவரியில்  உள் நுழைந்து அதையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். (ஸ்பேம், அது இது என்று பயப்பட்டால் வடை உங்களுக்கு கிடைக்காது),



இனி ஏற்கனவே நீங்கள் திறந்து வைத்திருக்கும் ஒவ்வொரு டேப்பாக தட்டி பாருங்கள். யாரேனும் புது பதிவு போட்டிருக்கிறார்களா என்று. போட  வில்லையா, ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு டேப்பையும் refresh செய்து கொண்டே இருங்கள்.



இப்போது யாரேனும் ஒருவர் புது பதிவை வெளியிட்டுருப்பார். உடனே அங்கே போய் அவரின் பின்னூட்ட பெட்டியில் நீங்கள் தயாராக காப்பி செய்து  வைத்திருக்கும் வடை எனக்கே போன்ற கமெண்ட்களை பேஸ்ட் செய்து போஸ்ட் செய்து விடுங்கள்.

அப்புறம் பாருங்கள் வெற்றி உங்களுக்கே...அதிலும் வடை  கிடைக்கவில்லை என்றால் கூட மனம் தளராதீர்கள்...

ஒரு சில நல்ல பதிவர்கள் உங்களை போன்றவர்களுக்காகவே வடை கொடுப்பதில் தாராளமயமாக்கல் கொள்கையை கடை பிடிக்கிறார்கள்.

அதாவது, முதலில் வரும் பின்னூட்டத்திற்கு மட்டுமல்லாமல், இருபத்தைந்து அம்பது எழுப்பத்து ஐந்து  நூறு என்று எல்லா கமன்ட்களுக்கும்  வடை கொடுக்கிறார்கள்.அதற்கு முயற்சி செய்யுங்கள்.அப்படியும் வடை கிடைக்கவில்லையா கவலையே வேண்டாம் ஒரு ஐந்து ரூபாய் சில்லறையை எடுத்துக்கு(வடையின் விலை ஊருக்கு ஊர் மாறுபடும்)  நேரா டீக்கடைக்கு போங்க........சுடசுட வடை கிடைக்கும்.
இருங்க எங்க கிளம்பீட்டீங்க வடை வாங்கவா? .....இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருக்கேன். ஓட்டும், பின்னூட்டமும் போடாம போனா எப்படி?


விஸ்கி....வ(அ)டச்சே....மன்னிக்கவும் டிஸ்கி: இங்கு வரும் அனைத்து கமன்ட்களுக்கும் தயிர்  வடை, சாம்பார் வடை, மசால் வடை என்று வழங்கப்படும், எனவே யாரும் அவசரமில்லாமல் கமன்ட் போடலாம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


32 கருத்துகள்:

  1. எனக்கு தான் முதல் வடையா? :))

    பதிலளிநீக்கு
  2. நீங்க சொல்ற மாதிரி எல்லாரும் ஒரே நேரத்துல போஸ்டிங் போடுவாங்களா என்ன?

    பதிலளிநீக்கு
  3. செம்ம கலக்கல்...வடை வாங்குவதற்கு அருமையான யோசனை கூறியுள்ளீர்கள்நன்றிதொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  4. பாரத் பாரதி தளம் பற்றி ஏதாவது தகவல்கள் தெரிந்ததா நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. தயிர் வடை - ஒரு ப்ளேட், ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
  6. பிட்சா, பர்கர் எல்லாம் கிடைக்காதா?
    நல்ல பயனுள்ள பதிவு! :-))

    பதிலளிநீக்கு
  7. எப்ப நேரம் கிடைக்குமோ அப்ப போஸ்ட் செய்வது வழக்கம்,இனிமேல் வடையோட ஒரு நேரம் குறிச்சிட வேண்டியது தான்.ஆக மொத்தத்தில் இன்றைக்கு வடை வியாபாரம் களைகட்டிவிடும்.

    பதிலளிநீக்கு
  8. வடையை பற்றிய உங்கள் புரிதல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலே சொன்ன விஷயங்கள் தான் நான் பின்பற்றி வடைகள் கைபற்றுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. என்னது வடையா இதோ வர்றேன் ஹையோ நமக்கு முன்னாடி சகோ வாங்கிட்டாங்களே

    பதிலளிநீக்கு
  10. எல்லோருக்கும் வடை வழங்கும் வள்ளல் ரஹீம் வாழ்க வாழ்க

    பதிலளிநீக்கு
  11. வடையைப்பற்றியான பதிவு இது யாருக்கு பயன் உள்ளதோ இல்லையோ பதிவுலகிற்கு மிக்க பயன் உள்ள பதிவு..

    பதிலளிநீக்கு
  12. வடை போச்சே......
    இதையும் இவ்வளவு சுவாரஸ்யமா எப்படி எழுதுறிங்க பாஸ்?

    பதிலளிநீக்கு
  13. //அடுத்து, வடை எனக்கே, போண்டா எனக்கே, பஜ்ஜி எனக்கே, சுடுசோறு எனக்கே என்று உங்களுக்கு பிடித்த வார்த்தையை டைப் செய்து, அதை காப்பி செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். //

    அடடா எப்படியெல்லாம் டிப்புசு தராங்க ..!!
    இதெல்லாம் பண்ணுறதுக்கு பேசாம என் ப்ளாக் ல இருக்குற மாதிரி காக்காய் ஒண்ணு வேலைக்கு வச்சிகிலாம் .!! எங்க வடை சுட்டாலும் போய் எடுத்திட்டு வந்திடும் .. ஹா ஹா ஹா .. செம செம ..!! நல்லா இருக்குங்க ..!!

    பதிலளிநீக்கு
  14. அப்படின்னா வடை ஆரம்பம்னு சொல்லுங்க ................

    பதிலளிநீக்கு
  15. மசால் வடை ஆ தந்துருங்கோ

    பதிலளிநீக்கு
  16. எல்லாவற்றிலும் ஒவ்வொரு ப்ளேட்..

    பதிலளிநீக்கு
  17. இருபத்தைந்து அம்பது எழுப்பத்து ஐந்து நூறு என்று எல்லா கமன்ட்களுக்கும் வடை கொடுக்கிறார்கள்.அதற்கு முயற்சி செய்யுங்கள்.

    அப்பாடா நானும் வடை சாப்ட்டுட்டேன்

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா14 டிச., 2010, 6:57:00 PM

    அட கொடுமையே இதுக்கும டியூஷன் ...ஆனா நல்ல டியூஷன் ...

    பதிலளிநீக்கு
  19. வடைக்கு ஒரு போஸ்ட்டா?? ஸ்ஸ்ஸ்ஸ் ... யப்பா தாங்கமுடியலையா.. யா...யா.. யா..!!! அந்த மூன்று 'யா' வையும் ரஜினி ஸ்டைல படிக்கவும் :)))

    பதிலளிநீக்கு
  20. வடை வாங்க கற்று கொடுத்த உங்களுக்கு ..''வடை கொடுத்த வள்ளல்'' என்ற பட்டத்தை அளிக்கிறேன்!!மேலும்..பதிவே போடாத எனது ப்லோகிலும் ஒரு followயறாக இணைந்து உங்களை தியாகம் செய்திருக்கும் உங்களுக்கு எனது நன்றிகள் நண்பா..!!!

    பதிலளிநீக்கு
  21. பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் தனித்தனியே வடை அனுப்பலாம் என்று இருந்தேன். ஆனால்,நான் அனுப்பும் வடை நீங்கள் இருக்கும் இடம்தேடி வருவதற்குள் ஊசிப்போய் விடும் என்பதால்.....அனைவரும் இங்கே வந்து சாப்பிட்டு கொள்ளவும்.
    [im]http://www.freeimagehosting.net/uploads/91ce1f54fc.png[/im][ma][im]http://cdn3.tamilnanbargal.com/sites/all/modules/smileys/packs/GigaSmiley/eat.gif[/im][/ma]

    பதிலளிநீக்கு
  22. நானும் வடைக்கு ட்ரை பன்னிபார்த்தேன்.எங்கேயும் கிடைக்கல.இனி நீங்க சொன்ன மாதிரி ட்ரை பன்னுகிறேன்.ஒரு சேன்சுக்கு நீங்க பிரியானி கொடுக்கலாமே?

    பதிலளிநீக்கு
  23. வடை எனக்கு ரொம்ப பிடிக்கும் இதோ வரேன் வுடனே சாப்பிட

    பதிலளிநீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. அடேங்கப்பா இத்தனை வடைப்பிரியர்களா? எல்லாருக்கும் கொடுத்து கட்டுப்படி ஆகுமா தம்பி?
    பாக்கெட்டு பத்திரம்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.