என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, டிசம்பர் 11, 2010

53 நீங்க ரஜினி ரசிகரா? அப்படின்னா....உங்களுக்குத்தான் இந்த போட்டி


ஜினிகாந்த் பற்றி ஏறக்குறைய தொண்ணூறு சதவீத பதிவர்கள் முக்கியமான தலைப்புக்கள் அனைத்திலும் எழுதி பின்னி பெடலுத்துட்டாங்க. நான்கூட என் பங்கிற்கு ரெண்டு மூணு தலைப்புகளில் எழுதிட்டேன். இருந்தாலும் ரஜினியோட பிறந்தநாள் அன்னைக்கு ரஜினி பற்றி ஒரு பதிவு போடாட்டி பதிவுலகத்திலிருந்து நம்மள தூக்கிருவாங்களோன்னு பயத்துல எதையாவது  வித்தியாசமா எழுதனுமேன்னு கோதாவுல இறங்கிட்டேன்.ரஜினியின்  பாட்டை வச்சு ஒரு போட்டி வைக்கலாம்ன்னு யோசிச்சேன். போட்டின்னதும்சரியான விடை சொன்னா  பரிசு கிரிசுன்னு முடிவு பண்ணீடாதீங்க நண்பர்களே...எல்லா பாட்டுக்கும் சரியா விடை சொல்லிட்டா 'எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டோம்ல...ரஜினி ரசிகனா கொக்கான்னு காலர தூக்கிக்கு திரியமட்டும் அனுமதி. போட்டியோட விதிமுற என்னன்னா...பெரிய டீலா நோ டீலா....ரூல்ஸ் ரெகுலசன்லாம் சொல்லிக்கு நேரா விசயத்துக்கு வாப்பான்னு அங்கே நல்லநேரம் சதீஷ் கத்துராப்ல....சரி விஷயத்துக்கு வருவோம். ரஜினி நடிச்ச படத்தின் டூயட் பாட்டு உங்களுக்கு பிடிச்சிருக்கும். அந்த பாட்டோட நடுவுல இருக்க ரெண்டு வரியா உங்களுக்கு தர்றேன். அந்த பாட்டின் முதல் வரியா கண்டு பிடிக்கிறது உங்க வேலை. படத்தையும் சொல்லிட்டா ரஜினிகாந்த் ஆட்டோகிராப் போட்ட  (நானே அவரு கையெழுத்த போட்டு) ஒரு புகைப்படம் அடுத்த வருட கடைசியில் அனுப்பப்படும். ஓகே. ரெடி....ஸ்டார்ட்....மியூசிக்...(பண்ணிக்குட்டியார் மன்னிக்க....)

1) என் காதல் வானிலே..வெண்மேக ஊர்வலம்
    காணுவேன் தேவியை கண்களின்.....


2) கோடையில் நான் ஓடைதானே
   வாடையில்  நான் போர்வைதானே.....


3) மின்னல் உந்தன் பெண்மை எனை தாக்கும் ஆயுதம்
   மேகம் உந்தன் கூந்தல் மலராடும் ஊஞ்சலாம்......


4) வரையறைகளை மாற்றும்  போது
   தலைமுறைகளும்  மாறுமே....


5) உன்னாலே பசிதூக்கமில்லை
   எப்போதும்  நெஞ்சுக்குள்  தொல்லை இனிமே ஏனிந்த எல்லை....


6) மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே....
   மன்னவனின் பசியாற...மாலையிலே பரிமாற....


7) நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை....
   வாழும் காதல் சின்னமாய் ஆகும்  எங்கள் யாத்திரை....

 
8) மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ...
   சந்திரர்கள் சூரியர்கள் போனதென்ன மாயமோ....


9) கார்கால மேகம் வரும்...கல்யாண ராகம் வரும்
   பாடட்டும் நாதஸ்வரம் பார்க்கட்டும் நாளும் சுகம் 

 
10) தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது
    காதல் உறவே.....

 
சரி...இனிமே நீங்க கண்டுபிடிச்சு எனக்கு பின்னூட்டம் போட வேண்டியதுதான்.

க்ளு கொடுக்க மாட்டேன்...ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் விடைகள் அனுப்பலாம்.எல்லாமே இலவசம்தான் கட்டணமில்லை...(ஆனால் இன்டர்நெட் பில் நீங்கதான் கட்டனும்)
அதேநேரம் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இதில் கலந்து கொள்ளலாம்...தடையில்லை....
விடை தெரியாட்டியும் பரவாயில்லை. வலைப்பதிவின் ஜனநாயக கடமையை ஆற்றிட்டு போயிடுங்க அதாங்க....ஓட்டு போட்டுட்டு போயிடுங்க

Post Comment

இதையும் படிக்கலாமே:


53 கருத்துகள்:

  1. //ரஹீம் கஸாலி said...
    என்னங்க யாரையுமே காணோம்.//

    // அன்பரசன் said...
    தோ வந்துட்டேன்//

    நல்லது எத்தனை பேர் இதுவை வந்து( சென்று)ள்ளார்கள் என்ற ரன்னிங் கமெண்ட்ரி தர்முடியுமா?

    பதிலளிநீக்கு
  2. கூகிள் பண்ணாம ட்ரை பண்ணுறேன் :)3. ப்ரியா ஏய்ப் பாடல் ஒண்ணூ4 புதுக்கவிதை வெள்ளை ப்புறா6 தங்கமகன்.. ராத்திரியில்10 எனெனதான் சுகமோ.. மாப்பிள்ளை

    பதிலளிநீக்கு
  3. சத்தியமா ஒரு விடை கூட தெரியலைங்க...

    பதிலளிநீக்கு
  4. மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அன்பே மட்டும் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  5. அதுவும் பூர்ணிமா ஜெயராம் அவர்கள் தயவில்

    பதிலளிநீக்கு
  6. ராதாவோடு சிப்பிக்குள் இருந்துவந்து பாடும் மீன் பாட்டும் தெரிந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  7. மின்னல் உந்தன் பெண்மை ராகம் மனதிக்குள்ளேயே ஓடுகிறது. ஆனால் வெளியே வரமறுக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. என்னாப்பா இது மூளைக்கு வேலை கொடுத்துட்டீங்களே, ஓட்டு போட்டுவிட்டேன் ஆனால் பாட்டுதான் கண்டுபிடிக்க முடியவில்லை... ரொம்ப சிரமமாயிருக்கு நீங்களே சொல்லிடுங்க.......ஹிஹிஹி.....

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா12 டிச., 2010, 9:50:00 AM

    இதுயெல்லாம் கஷ்டம் .... ஓட்டு போட்டுவிட்டேன் ஆனால் பாட்டுதான் கண்டுபிடிக்க முடியவில்லை... ரொம்ப சிரமமாயிருக்கு நீங்களே சொல்லிடுங்க....... ப்ளீஸ் .....

    பதிலளிநீக்கு
  10. இதெல்லாம் ரஜினி படத்து பாட்டுங்களா.. சொல்லவே இல்ல..

    பதிலளிநீக்கு
  11. //வெறும்பய said... 13
    இதெல்லாம் ரஜினி படத்து பாட்டுங்களா.. சொல்லவே இல்ல..//

    சத்தியமா ஒரு விடை கூட தெரியலை
    :-(

    பதிலளிநீக்கு
  12. ஆஹா!! ஒருபாடல்கூட தெரியலைங்க.. நான் ஒத்துக்க மாட்டேன்.. கொஸ்டின் பேப்பர் ரொம்ப டஃப்பா இருக்கு..

    நான் போட்டிக்கு வரல..

    விடை சொன்னதுக்கு அப்புறம் கூப்பிடுங்க..

    பதிலளிநீக்கு
  13. ௩. ஹீய் பாடல் ஒன்று - ப்ரியா ௪. வெள்ளைப் புறா ஒன்று - புதுக்கவிதை ௬. ராத்திரியில் பஊத்திருக்கும் தாமரைதான் - தங்க மகன்௭. வா வா வா அன்பே வா - ஊர்க்காவலன்

    பதிலளிநீக்கு
  14. 6. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ...

    இன்னும் ரெண்டு மூணு பாட்டு கண்டுபிடிச்சிட்டேன் ஆனா வார்த்ததான் ஞாபகம் வரல...

    பதிலளிநீக்கு
  15. //கார்கால மேகம் வரும்...கல்யாண ராகம் வரும்
    பாடட்டும் நாதஸ்வரம் பார்க்கட்டும் நாளும் சுகம் //
    இரு விழியின் வழியில் நீயா வந்து ..... படம் சிவா...

    பதிலளிநீக்கு
  16. //வரையறைகளை மாற்றும் போது
    தலைமுறைகளும் மாறுமே....//
    வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் ...

    பதிலளிநீக்கு
  17. //நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை.... வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை....//
    வா வா வா கண்ணா வா... வேலைக்காரன்..
    /

    பதிலளிநீக்கு
  18. //உன்னாலே பசிதூக்கமில்லை
    எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை இனிமே ஏனிந்த எல்லை....//
    பேசக்கூடாது, வெறும் பேச்சில் சுகம்..

    பதிலளிநீக்கு
  19. //என் காதல் வானிலே..வெண்மேக ஊர்வலம்
    காணுவேன் தேவியை கண்களின்.....
    //
    பெண்மானே பொன்னூஞ்சல் ஆடி வா...

    பதிலளிநீக்கு
  20. //மின்னல் உந்தன் பெண்மை எனை தாக்கும் ஆயுதம்
    மேகம் உந்தன் கூந்தல் மலராடும் ஊஞ்சலாம்......//

    பாடல் ஒன்று ராகம் ஒன்று
    தேடும் போது அந்த கீதம்

    பதிலளிநீக்கு
  21. சான்சே இல்லை பாரத்....பாரதி....உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. 2 ) மாலை சூடும் வேளை3) ஹே... பாடல் ஒன்று4 ) வெள்ளைப் புறா ஒன்று5 ) பேசக் கூடாது6 )ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான்7 )வா வா வா கண்ணா வா8 )மீனம்மா மீனம்மா10 )என்னதான் சுகமோ1 மற்றும் 9 வது பாடல் என்னதான் மூளைய கசக்கினாலும் தெரிய வில்லை!

    பதிலளிநீக்கு
  23. ஆஹா! அந்த ரெண்டு பாட்டுக்கும் விடை பாரத்...பாரதி சொல்லிட்டாரா! சூப்பர்!

    பதிலளிநீக்கு
  24. இதில முக்கியமான விஷயம்! நான் ரஜினி ரசிகன் இல்லை, ஆனா நல்ல இசைக்கு ரசிகன்!

    பதிலளிநீக்கு
  25. நான் கண்டுபிடித்து சரியா என்று பார்க்க சொல்லி பாரதிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன், அதை இங்கு பதிவுசெய்து விட்டார், அதனால் பாரதியின் விடையே என்னுடையதும்!!!! ஹி! ஹி!!

    பதிலளிநீக்கு
  26. #கார்கால மேகம் வரும்...கல்யாண ராகம் வரும்
    பாடட்டும் நாதஸ்வரம் பார்க்கட்டும் நாளும் சுகம் #

    பாடல்... விழியின் வழியே நீயா வந்து போவது....
    படம் ..சிவா...

    பதிலளிநீக்கு
  27. //இதில முக்கியமான விஷயம்! நான் ரஜினி ரசிகன் இல்லை, ஆனா நல்ல இசைக்கு ரசிகன்!//
    me too

    பதிலளிநீக்கு
  28. பரிசுக்கு நன்றி...
    முதலில் பதில் சொல்ல முயற்சித்தவர் என்ற ஸ்பெக்ட்ரம் முறையிலா பரிசு வழங்கப்பட்டுள்ளது?
    சி.பி.ஐ. ரெய்டு ஏதும் வராதே...

    பதிலளிநீக்கு
  29. [ma][im]http://www.freeimagehosting.net/uploads/fb6d56f368.png[/im][im]http://www.freeimagehosting.net/uploads/428a61517a.png[/im][/ma]

    பதிலளிநீக்கு
  30. 1) என் காதல் வானிலே..வெண்மேக ஊர்வலம்
    _ பெண் மானே,சங்கீதம் பாடி வா!! (நான் சிகப்பு மனிதன்!)
    2) கோடையில் நான் ஓடைதானே
    _மாலை சூடும்வேளை,அந்திமாலை தோறும் லீலை!! (நான் மகான் அல்ல!)
    3) மின்னல் உந்தன் பெண்மை எனை தாக்கும் ஆயுதம்..
    _ஹே பாடல் ஒன்று..ராகம் ஒன்று..! (ப்ரியா!)
    4) வரையறைகளை மாற்றும் போது
    _வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே! (புதுக்கவிதை!)
    5) உன்னாலே பசிதூக்கமில்லை
    _பேச கூடாது,உன் பேச்சில் சுகம்.!!(அடுத்த வாரிசு..!)
    6) மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே....
    _ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையோ பெண்ணோ! (தங்கமகன் !!!)
    7) நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை....
    _வா வா வா வா கண்ணா வா ,தா தா தா தா கவிதை தா..!(வேலைக்காரன்!!)
    8) மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ...
    _மீனம்மா மீனம்மா ..கண்கள் மீனம்மா!! (ராஜாதி ராஜா!!)
    9) கார்கால மேகம் வரும்...கல்யாண ராகம் வரும்.
    _விழியி்ன் வழியே நீயா வந்து போனது.! (சிவா!!)
    10) தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது
    _என்ன தான் சுகமோ நெஞ்சிலே..இது தான் வளரும் அன்பிலே! (மாப்பிள்ளை!!)
    இதனால் அனைவருக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால்...
    நானும் ரஜினி ரசிகன் தான் ..நானும் ரஜினி ரசிகன் தான்...நானும் ரஜினி ரசிகன் தான்..!!(இதை தலைநகரம் வடிவேலு சொல்லும் ''நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் '' ஸ்டைலில் படித்துக்கொள்ளவும்!)
    எப்பூடி?!! தலைவர் ரசிகன்னு ப்ருவ் பண்ணிட்டோம்புல?!!
    ரஜினி ரசிகனா கொக்கா நு காலரை தூக்கி விட்டுடோம்புல!!
    ////படத்தையும் சொல்லிட்டா ரஜினிகாந்த் ஆட்டோகிராப் போட்ட (நானே அவரு கையெழுத்த போட்டு) ஒரு புகைப்படம் அடுத்த வருட கடைசியில் அனுப்பப்படும்.///
    ஒரு புகைபடம்னு சொல்லி இருக்கீங்க ! யாரு புகைபடம்னு சொல்லலியே!
    இதுல உள்நாட்டு சதி ஒன்னும் இல்லையே?!
    என்ன உங்க புகைபடத்துல என் தலைவர் மாதிரி ஆட்டோகிராப் போட்டு அனுப்புவீங்களா நண்பா?!! தெரியாம ஜெயிசுட்டேனே! இப்போவே கண்ணை கட்டுதே! என்ன கொடுமை சரவணன்!

    (இன்று பிறந்தநாள் காணும் எங்கள் அன்புத்தலைவருக்கு எங்கள் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.)

    பதிலளிநீக்கு
  31. 1) என் காதல் வானிலே..வெண்மேக ஊர்வலம்
    _ பெண் மானே,சங்கீதம் பாடி வா!! (நான் சிகப்பு மனிதன்!)
    2) கோடையில் நான் ஓடைதானே
    _மாலை சூடும்வேளை,அந்திமாலை தோறும் லீலை!! (நான் மகான் அல்ல!)
    3) மின்னல் உந்தன் பெண்மை எனை தாக்கும் ஆயுதம்..
    _ஹே பாடல் ஒன்று..ராகம் ஒன்று..! (ப்ரியா!)
    4) வரையறைகளை மாற்றும் போது
    _வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே! (புதுக்கவிதை!)
    5) உன்னாலே பசிதூக்கமில்லை
    _பேச கூடாது,உன் பேச்சில் சுகம்.!!(அடுத்த வாரிசு..!)

    பதிலளிநீக்கு
  32. 6) மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே....
    _ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையோ பெண்ணோ! (தங்கமகன் !!!)
    7) நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை....
    _வா வா வா வா கண்ணா வா ,தா தா தா தா கவிதை தா..!(வேலைக்காரன்!!)
    8) மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ...
    _மீனம்மா மீனம்மா ..கண்கள் மீனம்மா!! (ராஜாதி ராஜா!!)
    9) கார்கால மேகம் வரும்...கல்யாண ராகம் வரும்.
    _விழியி்ன் வழியே நீயா வந்து போனது.! (சிவா!!)
    10) தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது
    _என்ன தான் சுகமோ நெஞ்சிலே..இது தான் வளரும் அன்பிலே! (மாப்பிள்ளை!!)
    இதனால் அனைவருக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால்...
    நானும் ரஜினி ரசிகன் தான் ..நானும் ரஜினி ரசிகன் தான்...நானும் ரஜினி ரசிகன் தான்..!!(இதை தலைநகரம் வடிவேலு சொல்லும் ''நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் '' ஸ்டைலில் படித்துக்கொள்ளவும்!)
    எப்பூடி?!! தலைவர் ரசிகன்னு ப்ருவ் பண்ணிட்டோம்புல?!!
    ரஜினி ரசிகனா கொக்கா நு காலரை தூக்கி விட்டுடோம்புல!!
    ////படத்தையும் சொல்லிட்டா ரஜினிகாந்த் ஆட்டோகிராப் போட்ட (நானே அவரு கையெழுத்த போட்டு) ஒரு புகைப்படம் அடுத்த வருட கடைசியில் அனுப்பப்படும்.///
    ஒரு புகைபடம்னு சொல்லி இருக்கீங்க ! யாரு புகைபடம்னு சொல்லலியே!
    இதுல உள்நாட்டு சதி ஒன்னும் இல்லையே?!
    என்ன உங்க புகைபடத்துல என் தலைவர் மாதிரி ஆட்டோகிராப் போட்டு அனுப்புவீங்களா நண்பா?!! தெரியாம ஜெயிசுட்டேனே! இப்போவே கண்ணை கட்டுதே! என்ன கொடுமை சரவணன்!

    (இன்று பிறந்தநாள் காணும் எங்கள் அன்புத்தலைவருக்கு எங்கள் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.)

    பதிலளிநீக்கு
  33. [ma]ஹி ஹி ..!பின்னூட்டமிடும்போது ma சேர்த்து அதாவது ma உங்கள் கமென்ட் /ma என்று எழுதுங்கள்.ஒரு வித்தியாசத்தை உணர்வீர்கள்.என எழுதி இருந்தீர்கள்..அது என்ன வித்யாசம் என பார்க்க தான் இந்த பின்னூட்டம்! இதுல எதுவும் உள்நாட்டு சதி இருக்கானு பாக்கனுமில்ல![/ma]

    பதிலளிநீக்கு
  34. பத்து பாடல்களுக்கும் சரியான விடை சொன்ன நண்பர் [si="3"][co="yellow"]deen_uk[/co][/si] அவர்களுக்கு ஒரு ஸ்பெசல் போக்கே.உங்களுக்கு வேண்டுமானால் என் புகைப்படம் அனுப்புகிறேன். வைத்துக்கொள்ளவும் ஹி...ஹி.... இனிமேல் வரும் விடைகள் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள பட மாட்டாது.

    பதிலளிநீக்கு
  35. எல்லாம் முடிஞ்சு போச்சே. அய்யய்யோ.

    பதிலளிநீக்கு
  36. பாரத் பாரதிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  37. சரியான விடைகள் அளித்த( அனை)வருக்கும்
    விருதளித்தவருக்கும் வாழ்த்துக்கள்!
    நல்ல சவாலான போட்டிக்கு
    திறமையான சளைக்காமல் பதிலகள்!

    http://kalaiyanban.blogspot.com/

    பதிலளிநீக்கு
  38. ரோம்ப அவசியமான போட்டி வெளங்கிரும்வெயிட் பன்னுங்க இந்த பதிவெ ரஜினி படிச்சருன்னு வச்சுகங்கநெர ஒங்ககிட்ட வந்து ரஹீம் கஸாலி எனக்கு கடவுள் மாதிரின்னு சொன்னாலும் சொல்லுவாரு

    பதிலளிநீக்கு
  39. இங்கே
    "ரஜினி புகழ் பரப்புப் பாடல்!"


    http://kalaiyanban.blogspot.com/2010/12/super-star-rajni.html

    பதிலளிநீக்கு
  40. சூப்பர் போஸ்ட்,ஆனா கண்டுபிடிக்க முடியல.

    பதிலளிநீக்கு
  41. // சி.பி.செந்தில்குமார் said...
    சூப்பர் போஸ்ட்,ஆனா கண்டுபிடிக்க முடியல.
    //

    repeatu

    பதிலளிநீக்கு
  42. அடடா ரொம்ப பிந்திவிட்டேனோ.. மன்னிக்கவம் சகோதரா...

    இம்முறையும் ஓடிவந்த என்னை பாராட்டிப் போனமைக்கு மிக்க நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  43. ரஜனிக்கு என் இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  44. நண்பரே மீ த லாஸ்ட். நாலு நாளா ஊர்ல இல்லை. அதான் இவ்வளவு லேட்.

    பதிலளிநீக்கு
  45. ரஹீம் பாய்....

    இந்தாங்க பிடிங்க.... பத்து விடையும் (வடை அல்ல.....)

    1) நான் சிகப்பு மனிதன் - பெண் மானே சங்கீதம் பாடிவா

    2) நான் மகான் அல்ல - மாலை சூடும் வேளை, அந்தி மாலை தோறும் லீலை

    3) ப்ரியா - ஏய்.... பாடல் ஒன்று.... ராகம் ஒன்று....

    4) புதுக்கவிதை - வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

    5) அடுத்த வாரிசு - பேசக்கூடாது, வெறும் பேச்சில் சுகம்

    6) தங்க மகன் - ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

    7) வேலைக்காரன் - வா...வா...வா.... கண்ணா வா.... தா....தா....தா... கவிதை தா

    8) ராஜாதி ராஜா - மீனம்மா.... மீனம்மா.... கண்கள் மீனம்மா

    9) சிவா - இரு விழியின் வழியே நீயா வந்து போனது

    10௦) மாப்பிள்ளை - என்ன தான் சுகமோ, நெஞ்சிலே

    பதிலளிநீக்கு
  46. @கோபி
    ரஜினி படத்தை மனப்பாடமே செய்திருக்கிறார் போல

    பதிலளிநீக்கு
  47. ஏன்டா வெட்டி புண்ணாக்கு உனக்கு வேற வேலை இல்லையாட புடுங்கி பொன்னம்பலம் உன் புடுங்குற வெளிய மட்டும் பாருடா

    பதிலளிநீக்கு
  48. ஏன்டா வெட்டி புண்ணாக்கு உனக்கு வேற வேலை இல்லையாட புடுங்கி பொன்னம்பலம் உன் புடுங்குற வெளிய மட்டும் பாருடா

    பதிலளிநீக்கு
  49. saran.pmu said...

    ஏன்டா வெட்டி புண்ணாக்கு உனக்கு வேற வேலை இல்லையாட புடுங்கி பொன்னம்பலம் உன் புடுங்குற வெளிய மட்டும் பாருடா
    அருமையான கருத்தை அழகான தமிழில் சொல்லியிருக்கீங்க சார். ரொம்ப நன்றி. அதேநேரம்....நீங்க எழுதிய இந்த பின்னூட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லாததால் இதை நான் வைத்து கொள்ளாமல் உங்களுக்கே திரும்ப தந்து விடுகிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.