என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், அக்டோபர் 06, 2011

19 ஏர்செல் என்னும் உலக மகா திருட்டுப்பசங்க........



ஏர்செல்லை பற்றி மறுபடியும் ஒரு பதிவான்னு என்னை திட்டாதீர்கள். அவங்க செய்த திருட்டுத்தனம் அப்படி....

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எனக்கு ஏர்செல்லிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ரூபாய் 79 க்கு ரேட்கட்டர் போட்டால் 19 ரூபாய் கிடைக்கும் என்றும், மீதி 60 ரூபாய்க்கு சலுகையாக ஏர்செல்லிலிருந்து ஏர்செல்லிற்கு பேச ஆறு வினாடிகளுக்கு ஒரு பைசா (அதாவது ஒரு நிமிடத்திற்கு 10 பைசா, 12 வினாடிகளில் அழைப்பை  கட் செய்துவிட்டால் இரண்டு பைசா மட்டுமே) என்று குறிப்பிடப்பட்டிருந்தது, இந்த சலுகை ரம்ஜானுக்காக என்றும் 60 நாட்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நான் வழக்கமாக ரேட்கட்டர் எல்லாம் பயன்படுத்துவதில்லை. ஒரு வினாடிக்கு ஒரு பைசா கட்டணத்தில் இருப்பவன் நான். சரி இந்த முறை ரேட்கட்டர் போடலாம் என்று முடிவுசெய்து 79 ரூபாய்க்கு போட்டேன். சொன்னது போல் 19 ரூபாய் என் கணக்கில் சேர்ந்திருந்தது. என் ஸ்டேட்டசில் போய் செக் செய்து பார்த்தால் அவர்கள் இரண்டு மாதம் என்று சொன்ன சலுகை ஒரு மாதம் மாட்டுமே என்று காட்டியது. நான் உடனே கஸ்டமர் கேரில் அவர்களை தொடர்புகொண்டு கேட்டேன். அதற்கு அவர்கள் முதலில் ஒரு மாதம் தான் காட்டும். அடுத்த மாதம் இதே தேதி மீண்டும் ஒரு மாதத்திற்கு  நீடிப்பு கிடைக்கும் என்றார்கள். அதன் பிறகு அதை விட்டுவிட்டென்.

ஆனால், சில நாட்களுக்கு முன்பு சரியாக ஒரு மாதம் கழித்து எனக்கான சலுகை மாற்றப்பட்டு பழையபடியே ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்று மாறிவிட்டது. எனக்கு கடுமையான ஆத்திரம்...மீண்டும் கஸ்டமர் கேருக்கு போன் செய்து கேட்டேன். ஒரு பெண் தான் எடுத்தார். அதற்க்கு அவர் அப்படியெல்லாம் சலுகையே இல்லையே என்றார். நான் விபரமாக சொன்னேன். அப்படி இருக்காது என்றே கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னார்.
உடனே எனக்கு கோபம் உச்சிக்கு போனது....
சலுகை என்று சொல்லிவிட்டு ஏமாற்றும் ஏர்செல் முதலாளி பேசாமல் கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம். அல்லது வேறு ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம். இப்படி ஏமாற்றுவது திருட்டுத்தனம் என்று கடுப்புடன் சொன்னேன்.

அதற்கு அவர்கள் சார்...கொஞ்ச நேரம் காத்திருங்கள் செக் பன்னிட்டு சொல்றேன் என்றார்
என்னால் காத்திருக்க முடியாது மேடம்...ஒரு நாளைக்கு எத்தனை தடவை அந்த சலுகை, இந்த சலுகைன்னு மெசேஜ் அனுப்புறீங்க...கால் பன்னுறீங்க...அதே போல இப்பவும் நீங்க செக் பன்னிட்டு கால் பன்னுங்க...திருட்டுப்பசங்க ஏமாத்தறதிற்கே ஒரு கம்பெனி நடத்தறாங்க என்று கடுப்புடன் சொல்லி அழைப்பை கட் பன்னிட்டேன்.
ஆனால், இந்த நிமிடம் வரை எனக்கு அவர்களிடமிருந்து பதிலும் வரவில்லை, சலுகையும் கிடைக்கவில்லை.
 நம்மிடமிருந்து இப்படி திருடியும், பிச்சை எடுத்தும்தான் விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் நடிகர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறார்கள் போல இந்த திருட்டு பசங்க...

என்னைப்போல எத்தனை பேர்களை ஏமாற்றினார்களோ இந்த நாதாரிகள்?
இந்த திருட்டு கவர்ச்சிகரமான விளம்பரங்களினால் ஏமாந்து விடாதீர்கள் நண்பர்களே...குறிப்பாக அவர்களிடமிருந்து எஸ்.எம்.எஸ். வந்தால் படிக்காமல் உடனே டெலிட் செய்துவிடுங்கள்...இல்லாவிட்டால், என் நிலைதான் உங்களுக்கும்.

இவர்கள் மேல் புகார் சொல்லுவதாக இருந்தால் எப்படி செய்வது? ட்ராய் அமைப்பை எப்படி தொடர்பு கொள்வது? கொஞ்சம் தெரிஞ்சவங்க சொல்லுங்க பாஸ்.....


Post Comment

இதையும் படிக்கலாமே:


19 கருத்துகள்:

  1. இது போன்ற நேரங்களில் பொறுமை அவசியம்,

    கஸ்டமர் கேர் அதிகாரியை தொடர்பு பண்ணி பேசின பிறகு அவங்க சரிய பதில் சொல்லலனா பிறகு நோடல் ஆபிசர் க்கு மெயில் அனுப்பலாம்,

    அவங்க கண்டிப்பா பதில் போன் பண்ணி சொல்லுவாங்க

    அதிலும் உங்களுக்கு திருப்தி இல்லனா அப்பீலேட் அத்தாரிட்டிக்கு மெயில் பண்ணலாம், அவங்க பதில் சொல்லனும்,

    இதுக்கு எல்லாம் பதில் வரலான அனைத்து மாவட்டத்திலும் கலக்டர் ஆபீஸ் வளாகத்துல இருக்கிற கன்சூயுமர் கோர்ட்க்கு கடிதம் எழுதலாம்.

    கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்,
    நம்ம வலிக்கு நாம தான் மாத்திரை சாப்பிடனும்

    கோபப் பட்ட தீர்வு அதுவும் இதுபோல திருட்டு பசங்ககிட்ட கிடைக்காது
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. நீங்க சொல்றது சரிதான்,
    ஏர்செல் மாதிரி ஒரு பக்கா தொழில்னுட்ப திருடர்கள் இருக்கமுடியாது,,,நம்ம பேலன்ஸில் ஒரு அம்பது ரூவா இருந்தாகூட அவனுகளுக்கு பொறுக்காது, அவனுகளே ஒரு காலர் டியுன் செட் பண்ணி காச புடுங்குவானுக...

    எஸ்.எம்.எஸ் வழி எத்தனை தேவையில்லாத விளம்பரங்கள், டாடா டோகோமோ இல்லனா ஐடியா மாறிடுங்க பாஸ். ஏர்டெல் கூட ஓக்கே ஏர்டெல்ல சிக்னல் ப்ராப்ளம் இருக்காது..

    பதிலளிநீக்கு
  3. there will be a "nodal officer" for your area. if your not getting proper answer, you can ask the customer care person to connect to "nodal officer". you can explain your problem to him.

    பதிலளிநீக்கு
  4. // நம்மிடமிருந்து இப்படி திருடியும், பிச்சை எடுத்து தான் விளம்பரங்களுக்கு கொடுக்கிறார்கள் //

    உண்மைதான்..

    பதிலளிநீக்கு
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அவசியமான பதிவு. என் சிம் பிரச்சனைக்கு சமீபத்தில் ஏர்செல் ஆபிஸ் போய் இருந்தேன். அங்கு நிறைய கம்ளைன்ட் போட்ட காசை காணவில்லை என்றுதான் அதுவும் கிராமங்களில் இந்த பிரச்சனை அதிகம்.

    பதிலளிநீக்கு
  6. பிராடு நம்பர் ஒன் airtel , next aircel

    பதிலளிநீக்கு
  7. docomo மாறுங்க பாஸ் .. சூப்பர் ஆ இருக்கு

    பதிலளிநீக்கு
  8. //குறிப்பாக அவர்களிடமிருந்து எஸ்.எம்.எஸ். வந்தால் படிக்காமல் உடனே டெலிட் செய்துவிடுங்கள்.//good

    பதிலளிநீக்கு
  9. ரஹீம், நான் ஒருவாரமா செம கடுப்பிலே இருக்கேன். நான் எத்தனை காசு போட்டாலும் "அர்தமுள்ள இந்துமதம்" உங்களுக்கு ரினீவல் செஞ்சாச்சு. அதுக்கு 30 ரூபாய் கொடுத்ததுக்தகு நன்றின்னு மெசேஜ் வருது. படார்ன்னு காசு போய்டுது. என்ன எழவோ அது. அவனுங்களே காசை புடுங்கிகிட்டு நான் கொடுத்ததா சொல்லும் போது ரத்த அழுத்தம் அதிமாகுது. சரின்னு பத்து ரூவா போட்டு போட்டு பேசிகிட்டு இருக்கேன். அப்படியும் நேத்து அதிலயும் மூணு நாள் மட்டுமே அர்த்தமுள்ள இந்துமத்த்துக்காக எடுத்துகிட்டோம். அதுக்கு 3 ரூவா கொடுத்ததுக்கு நன்றின்னு வருது. நான் போன் செஞ்சு செஞ்சு அலுத்துட்டேன்.முடியலை. @உமாபதி கஸ்டமர் கேர் நம்பர் முதல் நோடல் ஆபீச்சர் நம்பர் பின்னர் அப்பீலேட் அத்தாரிட்டி நம்பர் இங்க தரமுடியுமா? ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
  10. பொதுவா கஸ்டமர் கேர் ஆபிசர் நெம்பர் 198

    Nodal Officers and Appellate Authority in Tamil Nadu

    thanks

    பதிலளிநீக்கு
  11. ஏர்செல் வாங்கிய விதமே கேப் மாரி தனம் நு இப்ப சிபிஐ கண்டு பிடித்து வருகிறது

    பதிலளிநீக்கு
  12. எப்படில்லாம் ஏமாதுறாங்க

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் கோபமாக பேசுவதால் நமக்கு தான் டென்சன் அதிகமாகும்,,,

    START 0 என டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்,
    ஏழு நாட்களுக்கு பிறகு உங்களுக்கு எந்த மார்க்கெட்டிங் போன் கால் & SMS வராது,

    ஏதேனும் சேவை ஆக்டிவேஷன் ஆகி இருந்தால் பணம் குறையும் அதற்க்கு 198 க்கு கால் செய்து புகார் செய்யுங்கள் பிரச்னை ஓவர்.

    பதிலளிநீக்கு
  14. BSNL அருமையாக இருக்கிறது.எவ்வித பிரச்சினையும் கிடையாது...நம்மை ஏமாற்றி காசு புடுங்கி அந்த காசை வைத்தே மீண்டும் நம்மை ஏமாற்ற விளம்பரம் செய்யும் tel , cel, போன்ற பிராடு நிறுனங்களுக்கு இடையே BSNL மிகவும் சிறப்பாக இருக்கிறது நான் 10 ஆண்டுகளாக அதுதான் வைத்திருக்கிறேன் எந்த பிரச்சினையும் இல்லை.ஏதாவது தகவல் வேண்டுமென்றாலும் உடனடியாக கிடக்கிறது பிசியாக இருந்தால் சிறிது நேரம் கழித்து அவர்களே கூப்பிடுகிறார்கள்.கே.எஸ்.விஜயன்

    பதிலளிநீக்கு
  15. ஏர்செல் மட்டுமில்லை நண்பர்களே அணைத்து நிறுவனங்களும் அப்படிதான்

    பதிலளிநீக்கு
  16. தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. நல்ல பதிவு !
    ஆனா கஸ்டமர் கேர் அதிகாரியை உடன் தொடர்பு கொள்ள
    நாம் ஏன் மற்ற மேட்டர்களை கேட்க்க வேண்டும் என்று புரியவில்லை !
    ஒரே நம்பர் கால் , உடனே லிங்க் தரவேண்டியது தானே !
    அதற்க்கு பயந்து கொண்டே பல பேர் இழந்த தொகையை கேட்பதே இல்லை !

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.