என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், அக்டோபர் 05, 2011

4 ஓட்டைவாயனும் உளறுவாயனும்......



உளறுவாயன்:  அடடே....வாப்பா ஓட்டை...என்ன திடீர்ன்னு வந்திருக்கே....

ஓட்டைவாயன்: எல்லாம் ஒரு மேட்டராத்தான்...

உளறுவாயன்:  மேட்டரா?...எங்கே?..எங்கே?

ஓட்டைவாயன்: அலையாதே..ஏப்பா... நீ பன்றது உனக்கே நல்லாருக்கா?

உளறுவாயன்:  அப்படி என்னப்பா பன்னிட்டேன்?


ஓட்டைவாயன்: பின்னே என்ன? பத்து நாளா ஒரே ஜெயலலிதா வரலாறு...எம்.ஜி.ஆர்.,வரலாறுன்னு அரசியல் பதிவா போட்டுட்டு இருக்கியே?

உளறுவாயன்:  ஓ.. நீ அத சொல்றியா?  நீ ஒருஆளுதான் பாக்கி நீயும் கேட்டுட்டியா?

ஓட்டைவாயன்: வேற யாரு கேட்டா?

உளறுவாயன்:  ரொம்ப பேரு அதைத்தான் கேக்கறாங்க....அது வேறொன்னும் இல்லைப்பா?  நம்ம பிரபல பதிவர் செங்கோவி இருக்காருல்ல...அவரு எழுத சொன்னாரு....அதான்...

ஓட்டைவாயன்: அதுக்காக இப்படியா தொடர்ச்சியா வரலாறாவே போடுவே? உள்ளாட்சி தேர்தல் சமயத்துல உன்னோட அக்மார்க் அரசியல் பதிவையும் போடலாம்ல....

உளறுவாயன்:  அதைத்தான் நானும் யோசிக்கிறேன்...இனிமே ரெண்டு நாளுக்கு ஒரு முறை அல்லது மூனு நாளைக்கு ஒரு முறை இப்படி வரலாற்று பதிவை போடலாம்ன்னு இருக்கேன்.

ஓட்டைவாயன்: நல்லது....அப்படியே இன்னொரு கேள்வி....செங்கோவி கேட்டா மட்டும் தான் பதில் சொல்லுவியா? வேற யாரு கேட்டாலுமா?

உளறுவாயன்:  அப்படி இல்லை...இப்பக்கூட பின்னூட்டத்துல நிறைய கேள்வி வருது....எல்லாத்துக்கும் பதில் சொல்ல ஆசைதான்...செங்கோவியோட கேள்விக்கு முதல்ல பதில சொல்லிடுவோம்...அப்புறம் அடுத்தவங்க கேள்விகளுக்கும் பதில் சொல்லுவோம்.

ஓட்டைவாயன்: இன்னொன்னுப்பா? கேட்டா கோபப்பட மாட்டியே?

உளறுவாயன்:  சே...சே...இதில என்ன கோபம்? நீ கேளு?

ஓட்டைவாயன்: அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்ற அளவுக்கு நீ என்ன பெரிய ஆளா?

உளறுவாயன்:   நல்லவேளையா இதை கேட்ட....இந்த கேள்வி உனக்கு மட்டுமல்ல...எல்லோருக்கும் மனசுல இருக்கும். சொல்றேன்...பதில் சொல்ற அளவுக்கு  நம்ம பெரிய பொடலங்காய் கிடையாது, அதே நேரம் அந்தளவுக்கு ஞானமும் நமக்கு இல்லை.

ஓட்டைவாயன்: அப்புறம் எப்படி புள்ளிவிபரத்தோட பதில் சொல்றே?

உளறுவாயன்:  எப்பவோ படிச்சது, யாரோ சொன்னதுன்னு கொஞ்சம் என் ஞாபகத்துல இருக்கு....அது மட்டும் பத்தாதே...அதான் சில புத்தகங்கள், இணைய தளங்கள்ன்னு தேடி பிடிச்சு படிச்சு பதில் சொல்றேன்.

ஓட்டைவாயன்: சரி, ஒருதலை பட்சமா பதில் சொல்லிட்டேன்னா?

உளறுவாயன்:  நிச்சயமா அப்படி சொல்லப்போறதில்லை...வரலாற்றை நம்ம திரிக்க முடியாதே....என் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை என் பதிவுல எழுதியிருக்கேன். ஆனா, அப்படி வரலாற்று பதிவுல எழுத முடியாதே....

ஓட்டைவாயன்:  நல்லதுப்பா.... நானும் சில கேள்வியோட உன்னை சந்திக்கிறேன்....

உளறுவாயன்:  கேளு....ஆனால், சினிமா, விளையாட்டுன்னு அது  சம்பந்தமா ஏதும் கேக்காதே...அதிலெல்லாம் நம்ம பூஜ்யம். அரசியல் சம்பந்தமா கேளு சொல்றேன்.



Post Comment

இதையும் படிக்கலாமே:


4 கருத்துகள்:

  1. கலைஞரைக் கைவிட்ட கஸாலி-ன்னு ஒரு பதிவு போடலாம் போலிருக்கே...

    பதிலளிநீக்கு
  2. உங்க பதிவுகளை தொடர்ந்து படிக்கும் பலரில் நானும் ஒருவன் அண்ணே.

    நல்லா எழுதுறீங்க, உங்களுக்கு தெரிஞ்சதை எல்லோருக்கும் தெரிய வைக்கணும்ன்னு நீங்க மெனக்கெடுறீங்க!!

    எனக்குள்ளும் ஒரு கேள்வி இருக்கு
    இன்னும் செத்துப்போனவங்க (பெரியார், அண்ணா, எம்ஜியார்) பெயர் வச்சு அரசியல் பண்ணுறது எப்ப தான் நிக்கும்?

    பதிலளிநீக்கு
  3. (அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்ற அளவுக்கு நீ என்ன பெரிய ஆளா?)...இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது ....இல்லை நீங்க அவளவு பெரிய ஆளா ...?? நீங்க ரொம்ப உஷாரான ஆள்தான் (முதல்ல உங்க பதிவிக்கு ஒட்டு போடனும் பின்பு கருத்து சொல்லணும் )..

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.