என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், அக்டோபர் 10, 2011

18 பதிவுலகிலும் போலி பதிவர்கள்-ஒரு அதிர்ச்சி தகவல்......



காப்பி-பேஸ்ட் பற்றி எத்தனையோ பதிவர்கள் எவ்வளவோ எழுதினாலும் நீ சொல்வதை நான் ஏன் கேட்கவேண்டும் என்று சில தளங்களும் பதிவர்களும்  அடம்பிடித்துக்கொண்டுதான் இருக்கின்றன்/இருக்கிறார்கள். நான் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு எழுதிய இன்னும் போதை தெளியாத கேப்டன் விஜயகாந்த் என்ற பதிவை புத்திசாலித்தனமாக தலைப்பை மட்டும் மாற்றிவிட்டு ஒரு எழுத்து விடாமல் காப்பியடித்திருக்கிறது ஒரு தளம். ஒரு பிரபலமான கம்பெனி ஒரு பொருளை தயாரித்தால் அதைப்போல பொருளை சில போலி கம்பெனிகளும் தயாரித்து உலவ விடும். பெயர் கூட லேசான மாற்றத்துடன் இருக்கும். உற்றுப்பார்த்தால் தவிர வித்தியாசம் தெரியாது.

அதைப்போல இப்போது போலி பதிவர்களும் பெருகிவிட்டார்கள். ஒரு பதிவை போட்ட அடுத்த சில நிமிடங்களில் நம் அது காப்பியடிக்கப்படுகிறது. பலமணி நேரம் யோசித்து எழுதப்படுவதை ரொம்பவும் சுலபமாக ஒரு நிமிடத்தில் திருடிவிடுகிறார்கள் இந்த திருடர்கள். ஆனாலும் போலி கம்பெனிகள் தயாரித்து விற்பனைக்கு விடும்  பொருள் (பெயர்தான் லேசாக மாறியிருக்குமே தவிர)அவர்களின் சொந்த தயாரிப்பாக இருக்கும். ஆனால், இந்த போலி பதிவர்களிடம் எல்லாமே திருட்டுதான். இவர்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால், நான் ஒரு முடிவு செய்திருக்கிறேன்.

இனி என் ஒவ்வொரு பதிவின் கீழும், இந்த பதிவுகள் எல்லாம் காப்பி ரைட் செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி திருடினால்... நன்றி என்று என் பெயரையாவது போட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் என் பதிவுகளை யாரெல்லாம் திருடினார்களோ அவர்களை தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி திருட்டு பதிவர்கள்  என்று அடிக்கடி பதிவுபோட்டு உங்களை நாறடித்துவிடுவேன் ஜாக்கிரதை என்று குறிப்பிட்டுவிடலாம் என்று இருக்கிறேன். என்ன நான் சொல்வது சரிதானே?


---------------


நேற்று திருச்சியில் எழுதிவைத்து படித்த...மன்னிக்கவும் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, கடந்த 4 மாதங்களில் தமிழகம் அமைதிப்பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது என்று ஜோக் ஒன்றை உதிர்த்துவிட்டு போயுள்ளார்.


அடப்பாவமே....அப்படின்னா பரமக்குடி கலவரமும், அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூடும் அவர் நினைவுக்கு வரவில்லை போல...அப்படியானால், பரமக்குடி தமிழ்நாட்டில் இல்லையா? ஒருவேளை பரமக்குடியை பக்கத்து மாநிலத்திற்கு விட்டு கொடுத்துட்டாங்களோ?...என்னவோ போங்க...ஒரு எலவும் புரியல....





Post Comment

இதையும் படிக்கலாமே:


18 கருத்துகள்:

  1. ஸலாம் சகோ.கஸாலி,
    பகிர்வுக்கு நன்றி சகோ.
    //Copyright: For Me (Mohamed Ashik) & You--with a link to this blog.// --இது என் தளத்தில் கடைசியாக எப்போதும் உள்ள ஒரு வரி..!

    பதிலளிநீக்கு
  2. என்னமா பேரு வச்சி இருக்கானுங்க தளத்துக்கு...எழு தமிழா பார்ரா...மாப்ள பஜார்ல நிஜார் உருவுற பசங்க இவனுங்க போல!

    பதிலளிநீக்கு
  3. அப்பு!
    இதெல்லாம் சகஜம் அப்பு....

    இது மாதிரி நெறைய நடந்து இருக்கு...

    இருந்தாலும் சூதானமா இருங்க அப்பு!

    பதிலளிநீக்கு
  4. இதை தடுக்க முடியாது..காப்பி செய்வதை தடுக்கும் ஜாவா ஸ்க்ரிப்ட் பயன்படுத்தி பாருங்கள்..

    பதிலளிநீக்கு
  5. இந்த காப்பி பேஸ்டுக்கு முடிவே இல்லையா?

    பதிலளிநீக்கு
  6. உண்மையில் இது கண்டிக்க தக்கது...

    எப்போது இந்த பிரச்சனை தீருமோ...

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா10 அக்., 2011, 10:22:00 PM

    அப்படின்னா பரமக்குடி கலவரமும், அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூடும் அவர் நினைவுக்கு வரவில்லை போல.// உண்மையில் தமிழ்நாடு இன்னும் முழுமையாக அமைதிப் பூங்காவாக மாறவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் சென்ற ஆட்சியை விட இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வளவோ தேவலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் இதை திமுக வினர் கூட ஒத்துக்கொள்வார்கள்...

    பரமக்குடியில் நடந்த கலவரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான், ஆனால் அதை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு கலவரத்தை தடுத்து நிறுத்துவதற்கு.. துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை சரி செய்து விட்டார்கள் என்பது சட்டம் ஒழுங்கு சீர்செய்யப்பட்டு விட்டது.. இதுவே கலைஞர் முதல்வராக இந்த துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்திருக்கமாட்டார், சாதாரண கலவரம், தமிழ்நாட்டில் இருக்கும் மிகப்பெரிய இரு ஜாதிகளுக்கு இடையே நடக்கும் ஜாதிக்கலவரமாக மாறியிருக்கும்...

    எனவே தமிழகம் அமைதிப்பூங்காவாக மாறிக்கொண்டிருக்கிறது என்று கூறுவதில் தவறில்லை, ஜெயலலிதாவை தாங்கள் எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் குறை சொல்லலாம், ஆனால் சட்டம் ஒழுங்கினை காப்பதில் அவருக்கு இணையானவர் தமிழகத்தில் எவருமில்லை...

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா10 அக்., 2011, 10:25:00 PM

    பதிவுகள் காப்பி அடிப்பதற்கு என்ன செய்தாலும் அவர்களை தடுக்க முடியவில்லை. நீங்கள் இப்போது இந்த முறையை பின்பற்றுங்கள் அவர்கள் காப்பி அடித்து பேஸ்ட் செய்தாலும் உங்கள் தளத்தின் பெயர் தானாக இடம்பெற்றுவிடும்..

    http://vairaisathish.blogspot.com/2011/10/blog-post_06.html

    பதிலளிநீக்கு
  9. பரமக்குடிய மட்டுமில்ல,கூடங்குளத்த கூட பக்கத்து மா நிலத்துக்கு விட்டுக் குடுத்துட்டாங்களாம்!

    பதிலளிநீக்கு
  10. தமிழ்மணம் சீரமத்திருக்கிறார்களாமே?காப்பி பேஸ்ட் பதிவுகளைக் கண்டு பிடிக்க ஸ்பெஷல் மெஷின் எல்லாம் இருப்பதாக சொன்னார்களே?பில்டப்பா?

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா11 அக்., 2011, 6:53:00 AM

    இந்த பதிவு நக்கீரன் லா இருக்கு நீக்கலும் கோப்பி தான

    பதிலளிநீக்கு
  12. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். உங்களின் பதிவைப் பார்த்துவிட்டுத்தான் அந்த ஆதங்கத்தில் நானும் இன்று ஒரு பதிவை இட்டிருக்கிறேன் சகோ.

    பதிலளிநீக்கு
  13. "எழு தமிழா" இணையத் தளத்தினர் முகப்பில் திருட்டுப் பதிவுக் களஞ்சியம் என உப தலைப்பு இடுவது நல்லது, ஊடக விபச்சாரத்துக்கு தமிழனை துணைக்கு அழைத்துள்ளார்கள்.காத்திரமான பதிவு, பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.