என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், அக்டோபர் 27, 2011

3 கலைஞர் சொன்னதும்-சொல்ல நினைத்ததும்......




தி.மு.க. தலைவர் கலைஞர் டெல்லி சென்று திரும்பிய பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்களின் கேள்விக்கான அவரது பதிலுக்கு கீழ் நமது கற்பனை பதில்களும் இருக்கிறது....உங்களின் புரிதலுக்காக,கலைஞர் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட  (நமது கற்பனை) பதில்களை கலைஞருக்கு பிடித்த மஞ்சள் வண்ணம் பூசி ஹைலைட் செய்துள்ளேன்.


உள்ளாட்சி தேர்தல் முடிந்த சூழ்நிலையில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி எப்படி இருக்கிறது?


சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் மற்ற கட்சிகளோடு உடன்பாடு கொள்வதற்கும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடுகிற நோக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை ஏற்கனவே அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சி பெற்ற வாக்குகளை சதவிகித கணக்கில் பார்த்தால் அ.தி.மு.க. - 39.02, தி.மு.க. - 26.09, தே.மு.தி.க. - 10.11, காங்கிரஸ் - 5.71.

2011 மே சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளோடு கூட்டணி வைத்து பெற்ற வாக்குகள் 82,49,991. பதிவான
வாக்குகளில் இது 22.30 சதவீதம். இப்போது உள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட்டு 26.09 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.

அது கனிமொழியின் ஜாமீனைப் பொறுத்தே அமையும்

 --------------------

 ஓட்டு சதவீதம் அதிகரிக்க கூட்டணி இல்லை என்பது தான் காரணமா?


 அதைக் காரணமாக சொல்ல முடியாது.

ஆம்...காங்கிரஸ் எங்ககூட இல்லாததால் வாக்குகள் கொஞ்சம் அதிகமாக எங்களுக்கு கிடைத்துள்ளது.
---------------------

வாக்குகள் அதிகம் கிடைத்ததற்கு காரணம் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான வாக்குகளா?


கடந்த 4, 5 மாத காலத்திற்குள் இந்த காரணங்களை எல்லாம் அறுதியிட்டு உறுதியாக கூற முடியாது.

அப்படி சொல்லமுடியாது.... நாங்களும் ஓரளவிற்கு பணம் கொடுத்திருக்கோம்ல...

-----------------------

காங்கிரஸ் தனித்தே போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கூறியிருக்கிறார். தி.மு.க.வும் அப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்துமா?
இதுபற்றி எல்லாம் காங்கிரஸ் மேல்மட்ட தலைவர்களிடம் கலந்து கொண்டு தான் நான் எதுவும் சொல்ல முடியும். உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாட்டை பொறுத்தவரை செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடு. ஆனால் அத்தகைய ஏற்பாடு மாற்றப்பட வேண்டும் என்று என்னிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பேசவும் இல்லை. அதற்கான அறிவிப்பை செய்யவும் இல்லை.
கனிமொழி மீதான வழக்குகளை நீர்த்துப்போக செய்தால் காங்கிரசோடு கூட்டணி....இல்லையேல் வேறு யாரோடாவது கூட்டணி....ஆனாலும், அதை பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவுசெய்யும்.

---------------------

மத்திய அரசு மாற்றாந்தாய் மனத்தோடு மாநில அரசை பார்ப்பதாக முதல்-அமைச்சர் கூறியிருக்கிறாரே?


 மாநில சுயாட்சியின் மையக் கருத்து மத்திய அரசு மாநில அரசுகளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தக் கூடாது என்பது தான். இதை நாங்கள் சொல்லும்போது இதற்கு ஆயிரம் வியாக்யானங்கள், கிண்டல்கள், கேலிகள் செய்தவர்கள் இப்போது அவர்களே போய் ஒரு அவையிலே சொல்லியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அவர்களை மட்டுமா மாற்றாந்தாய் மனப்பாண்மையில் பார்க்கிறார்கள்?. கூட்டணியில் இருக்கும் எங்களையே அப்படித்தான் பார்க்கிறார்கள்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


3 கருத்துகள்:

  1. ஹா ஹா!
    கலைஞரின் மனசாட்சி எப்பொதும் உண்மையையே பேசுகிறது!

    மைன்ட் வாய்ச காட்ச் பண்ணி பகிர்ந்ததுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்,சகோ!அருமையாக யதார்த்தத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள்!கங்கிராட்ஸ்!

    பதிலளிநீக்கு
  3. //ஓட்டு சதவீதம் அதிகரிக்க கூட்டணி இல்லை என்பது தான் காரணமா?


    அதைக் காரணமாக சொல்ல முடியாது.

    ஆம்...காங்கிரஸ் எங்ககூட இல்லாததால் வாக்குகள் கொஞ்சம் அதிகமாக எங்களுக்கு கிடைத்துள்ளது.//
    இது எனக்கு புரியவில்லை. சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டது குறைந்த இடங்கள். இப்போது மாநிலம் முழுவதும். கிட்ட தட்ட இரு மடங்கு அதிக இடங்கள். அப்படி பார்த்தால், இரு மடங்கு ஒட்டு கிடைத்தால் கூட சதவிகிதம் அதிகரிக்க வில்லை என்றே சொல்ல வேண்டும். அப்படி இருக்கையில், அதிகரித்தது வெறும் ஐந்து சதவிகிதம் (இல்லை, அதற்க்கும் கீழா?) என்றபோது, உண்மையிலேயே குறைந்தது என்று தானே சொல்ல வேண்டும்?

    இது எல்லா கட்சிக்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.