என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், அக்டோபர் 25, 2011

17 காங்கிரசின் வாய்சவடால் வீரர்களும், பதப்படுத்தப்பட்ட மம்மியும்.......



கடந்த சில நாட்களாக சில பணிகள் இருந்ததால் இனையத்தின் பக்கம் வரமுடியவில்லை. உள்ளாட்சித்தேர்தல் முடிவு பற்றி சில கட்டுரைகள் எழுதலாம் என்று நினைத்து முடியாமல் போய்விட்டது. அனைவரும் தேர்தல் முடிவுபற்றி அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்துவிட்டதால் இனிமேல் அதுபற்றி நான் எழுதுவது அவ்வளவு சரியாக இருக்காது...இருந்தாலும் காங்கிரசை பற்றி சில பத்திகளாவது எழுதிவிட வேண்டுமென்ற ஆவலில் இதை எழுதுகிறேன்.

தமிழக காங்கிரஸ் பற்றி எவ்வளவோ எழுதியாகிவிட்டது. ஆனால்,அது எதுவுமே இங்கிருக்கும் வாய்சவடால் வீரர்களான இளங்கோவன், தங்கபாலு, யுவராசா ஆகியோருக்கு போய் சேரவில்லை போல, அப்படி போய் சேர்ந்திருந்தால் இப்படி தனித்துப்போட்டி என்று தற்கொலை முடிவை அவர்கள் எடுத்திருப்பார்களா? 

காங்கிரஸ் என்றாலே தமிழ் நாட்டை பொறுத்தவரை அது ஒரு பிணம். அதாவது பதப்படுத்தப்பட்ட மம்மி. காங்கிரசுக்கும் ஒரு காலத்தில் உயிர் இருந்தது. அது காமராஜரின் காலம். அதன் பிறகு பக்தவத்சலம் காலத்தில் அது கோமாவிற்கு போய்விட்டது. நீ...........ண்ட காலம் அந்த கட்சி உயிர் மட்டும் ஒட்டிக்கொண்டு கோமாவிலேயே கிடந்தது.
இருந்த கொஞ்சம் நஞ்சம் உயிரும் மூப்பனாருடன் போய்விட்டது. அதாவது மூப்பனார் மறைந்ததும் காங்கிரஸ் கட்சியும் மறைந்துவிட்டது. அப்படி காங்கிரஸ் மறைந்ததை ஏற்றுக்கொண்டாலும், வெளிக்காட்ட விரும்பாத  இப்போதைய வாய்சவடால் வீரர்கள் அதை புதைக்காமல் பதப்படுத்தி, அதை தி.மு.க., அண்ணா.தி.மு.க., முதுகில் ஏற்றி சவாரி செய்யவிட்டார்கள். அதன்மூலம் ஜெயித்தும் வந்தார்கள்.

தன் உண்மையான பலம் அறியாமல்...அடிக்கடி எங்களால்தான் திராவிட கட்சிகள், எங்கள் பலத்தால்தான் திராவிட கட்சிகள் என்று சவடாலும் விட்டு வந்தார்கள். நல்ல வேளையாக உள்ளாட்சித்தேர்தல் வந்தது. கலைஞருக்கும் ஞானம் வந்தது. உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்ற குண்டை போட்டார். இதைக்கேட்ட வாய்சவடால் வீரர்களுக்கு உள்ஜுரமே வந்தாலும், அதைக்காட்டிக்கொள்ளாமல் விடுதலை(சோக) கீதம் பாடினார்கள். தனித்துபோட்டியிட்டு இப்போது மண்ணை கவ்விவிட்டார்கள்.

நல்லவேளையாக, தி.மு.க.,கூட்டணியில் காங்கிரஸ் இல்லை. இருந்திருந்தால் தி.மு.க.,வால் தான் தோற்றோம் என்று அவர்கள் மீது பழியை போட்டுவிட்டு தப்பித்திருப்பார்கள். இப்போது இந்த தோல்விக்கு என்ன பதிலை சொல்வது என்று தெரியாமல் ஆப்பசைத்த குரங்காய் விழிபிதுங்கி திரிகிறார்கள்.

இந்த நேரத்தில், எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது.... இரண்டு மாடுகள் ஒரு சாமி சிலையை வண்டியில் வைத்து இழுத்துவரும். மக்கள் எல்லோரும் அந்த சாமி சிலையை வணங்குவார்கள்.இதைப்பார்த்த அந்த மாடுகள் நமக்குத்தான் இந்த மரியாதை கிடைக்கிறது என்று எண்ணி கர்வம் கொள்ளும். சாமி சிலையை இறக்கிவைத்துவிட்டு அடுத்த நாள் அந்த மாடுகள் இரண்டும் நமக்கு மக்கள் என்ன மரியாதை தருகிறார்கள் என்று பார்க்க மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிக்கு போகும்.
அதைப்பார்த்த மக்கள் அனைவரும் அய்யய்யோ...மாடு நம்மை முட்டினாலும் முட்டிவிடும் என்று  பயந்து கையில் கிடைத்ததை கொண்டு அதை அடித்து விரட்டுவார்கள். அப்போதுதான் அந்த மாடுகள் உணருமாம்...நேற்று கிடைத்த மரியாதை  நமக்கு இல்லை. நாம் இழுத்துவந்த சாமி சிலைக்கு என்று...
அந்த மாடுகளைப்போல் தான் இப்போதைய காங்கிரஸ் தலைவர்களும்....இவ்வளவு நாள் திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வந்ததால், போனால் போகட்டும் என்று மக்கள் பரிதாபப்பட்டு வாக்களித்தார்கள். இப்போது தனியாக வந்ததால் மக்கள் விரட்டிவிட்டார்கள்.

உங்கள் இளவரசர் ராகுல் தமிழ் நாட்டுக்கே வந்து வீடுவீடாக போய் தங்கி, கயிற்றுக்கட்டிலில் படுத்து எழுந்தாலும், கஞ்சி குடித்தாலும், மண் சட்டி தூக்கினாலும் காங்கிரசை இனி கறையேற்ற முடியாது.  அந்தவகையில் அவர்களை தனியாக போட்டியிடவைத்து அவர்களின் பலத்தை(?) உணரவைத்த கலைஞருக்கு நன்றி.
இனிமேல், நீங்க கட்சி நடத்த லாயக்கில்லை.போயி காங்கிரசை கலைத்துவிட்டு பிள்ளை குட்டிகளை படிக்கவைக்கிற வழியை பாருங்கப்பா...



Post Comment

இதையும் படிக்கலாமே:


17 கருத்துகள்:

  1. நல்லா சொன்னிங்க போங்க - கருவாட்டு கூடை கீழ இறங்கு.

    புத்தி வருங்கிரிங்க???????????? இருந்தா தானே

    பதிலளிநீக்கு
  2. கடைசியா சொன்னீங்க பாருங்க, அது தான் இவங்களுக்கு சரி.....

    பதிலளிநீக்கு
  3. அருமை!எல்லோர் "பலமும்"தான் தெரிந்து விட்டதே???

    பதிலளிநீக்கு
  4. //இப்படி தனித்துப்போட்டி என்று தற்கொலை முடிவை அவர்கள் எடுத்திருப்பார்களா?
    //
    யாரும் அழைக்கவில்லை என்பதுதான் உண்மை

    பதிலளிநீக்கு
  5. எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் நல்லவர்கள், இந்த காங்கிரஸ்காரர்கள்..

    பதிலளிநீக்கு
  6. சரியாக சொன்னீர்கள். இந்த வாய் சவடால் வீரர்கள் எல்லோரும் சேர்ந்து தமிழகத்தில் காங்கிரசுக்கு சமாதி கட்டி விட்டார்கள்,

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா25 அக்., 2011, 6:33:00 PM

    மானகெட்ட கோங்க்றேச்ச்கரனுக்கு நல்ல ஸூ டு

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா25 அக்., 2011, 6:34:00 PM

    மானகெட்ட கோங்க்றேச்ச்கரனுக்கு நல்ல ஸூ டு

    பதிலளிநீக்கு
  9. . இரண்டு மாடுகள் ஒரு சாமி சிலையை வண்டியில் வைத்து இழுத்துவரும். மக்கள் எல்லோரும் அந்த சாமி சிலையை வணங்குவார்கள்.இதைப்பார்த்த அந்த மாடுகள் நமக்குத்தான் இந்த மரியாதை கிடைக்கிறது என்று எண்ணி கர்வம் கொள்ளும். //evvalavu iyalpaana vaarththaikalai azhaaka pdam pidiththu kaattiyulleer ithu unmaiyileye athukalukku poych ceranume? parattukal

    பதிலளிநீக்கு
  10. //இப்படி தனித்துப்போட்டி என்று தற்கொலை முடிவை அவர்கள் எடுத்திருப்பார்களா? //
    என்னமோ அவர்களாகவே அந்த முடிவை எடுத்த மாதிரி எழுதியிருக்கிறீர்கள்.இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. @சேக்காளி
    பேசிப்பேசியே இப்படிப்பட்ட நிலையை அவர்களே உருவாக்கிக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. அவர்கள்தானே தனித்துப்போட்டியிட்டால் இந்த உலகத்தை பிடித்துவிடுவோம் என்று சவடால் விட்டார்கள். அதான், தனித்து போட்டியிடுங்கள் என்று கலைஞர் விரட்டிவிட்டு விட்டார்.

    பதிலளிநீக்கு
  12. இந்த அவமானம் காங்கிரஸ்காரங்களுக்கு தேவையா?

    பதிலளிநீக்கு
  13. ஈழ்த்தமிழனின் ரத்தம் குடித்த காங்கிரசு ஒழியனும் தமிழ்நாட்டிலாவது.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.