என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், அக்டோபர் 03, 2011

18 எம்.ஜி.ஆர்- கலைஞர்- பிணைப்பும், பிணக்கும்.......


 இதுவரை படிக்காதவர்கள் பாகம்-1 பாகம்-2 படித்துவிட்டு தொடருங்கள்.....

 நான்கு புதிய அமைச்சர்களை நியமித்திருந்தார் கலைஞர். சபாநாயகரும் மாறியிருந்தார். புதிய சபாநாயகராக புலவை கோவிந்தன் நியமிக்கப்பட்டார். அப்படியானால் சபாநாயகராக இருந்த ஆதித்தனார்? ஆம்....ஆதித்தனார் அமைச்சராக்கப்பட்டிருந்தார்.

யாரை அமைச்சராக்க வேண்டாம் என்று அண்ணாவிற்கு எம்.ஜி.ஆர்.,துண்டு சீட்டு அனுப்பியிருந்தாரோ.....அந்த ஆதித்தனார் இரண்டே வருடங்களில் இப்போது கலைஞர் அமைச்சரவையில் போக்குவரத்து, மற்றும் கூட்டுறவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். இது எம்.ஜி.ஆருக்கு வியப்பை தந்தது. இதுதான் கலைஞர் மீது பிணைப்புடன் இருந்த எம்.ஜி.ஆரை பிணக்கு வரும் அளவிற்கு மாற்றியது. ஆனாலும் அதை காட்டிக்கொள்ளவில்லை எம்.ஜி.ஆர்.


சில நாட்களிலேயே நாவலர் நெடுஞ்செழியன் சமாதானம் ஆனார். கட்சியின் புதிய பொதுச்செயளாராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர். அண்ணா இருந்தபோது அவைத்தலைவர் என்றிருந்த பதவி, தலைவர் என்று மாற்றப்பட்டு கலைஞர் தலைவராகியிருந்தார். காலியாக இருந்த பொருளாளர் பதவிக்கு எம்.ஜி.ஆரை கொண்டுவர நினைத்தார் கலைஞர். ஆனால், அப்பதவிக்கு போட்டியிட தேவ்சகாயம், செல்வராஜ் என்ற இருவர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.



பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி எம்.ஜி.ஆரை தேர்ந்தெடுக்க விரும்பிய கலைஞர், அந்த இருவரையும் சமாதானம் செய்து போட்டியிலிருந்து விலகவைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரம் தலைவர் பதவிக்கு கலைஞர் வந்ததில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் பெரியார்.


1971-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில் சட்டமன்றத்தையும் கலைத்துவிட்டு  தேர்தலை சந்திக்க முடிவுசெய்தார் கலைஞர். அதன்படி சட்டமன்றம் கலைக்கப்பட்டது. அந்த சமயத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டிருந்தது. இந்திராகாந்தி தலைமையிலான பிரிவு இந்திரா காங்கிரஸ் என்றும், காமராஜர் தலைமையிலான பிரிவு ஸ்தாபன காங்கிரஸ் என்றும் அழைக்கப்பட்டது. இந்திரா தலைமையிலான இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது தி.மு.க.,



தி.மு.க.,கூட்டணியை ஆதரித்து எம்.ஜி.ஆரும், காமராஜர் கூட்டணியை ஆதரித்து சிவாஜியும் பிரச்சாரம் செய்தனர். எம்.ஜி.ஆர்., செல்லும் இடமெல்லாம் அபார வரவேற்பு கிடைத்தது. அந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார் எம்.ஜி.ஆர்.

கடந்தமுறையை போலவே இந்த முறையும் பரங்கிமலை தொகுதியிலிருந்தே போட்டியிட்டார் எம்.ஜி.ஆர்.,பிரச்சாரம் ஓய்ந்ததும் இதயவீணை படப்பிடிப்பிற்காக காஷ்மீர் புறப்பட்டு சென்றார்.`   

தேர்தல் முடிவு வந்தது. தி.மு.க.,183 இடங்களை பெற்று அபார வெற்றி பெற்றிருந்தது. பரங்கிமலை தொகுதில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர்., 65,405 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருந்தார். தி.மு.க.,வெற்றிசெய்தியை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., தொலைபேசி மூலம் கலைஞருக்கு வாழ்த்துசொன்னார். கூடவே தனக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் பதவியையும் கோரினார். பின்னர், சென்னை திரும்பிய அவர் அதையே வலியுறுத்தினார்.

அதற்குள், நாவலர், செ.மாதவன் போன்றோரும் எம்.ஜி.ஆருக்கு மந்திரி பதவி கொடுக்கவேண்டுமென்று கலைஞரை வலியுறுத்தினர்.
எம்.ஜி.ஆர்.,அமைச்சராவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. அப்படி அமைச்சரானால், சினிமாவில் நடிப்பதை அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும். அமைச்சராக இருந்துகொண்டே நடிக்கவும் செய்தால் சட்டசிக்கல் வரக்கூடும் என்றார் கலைஞர்.இது எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியை அளித்தது. நடித்துக்கொண்டே அமைச்சராக பணியாற்றும் வகையில் அமைச்சருக்கான கோட்பாடுகளில் திருத்தம் கொண்டுவருமாறு இந்திராகாந்தியிடம் பேசலாமே என்று யோசனை தெரிவித்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அப்படி சட்டதிருத்தம் கொண்டுவர முடியாது என்று தெரியவரவே அத்துடன் எம்.ஜி.ஆரின் அமைச்சர் கனவு தகர்ந்தது.

ஆதித்தனார் அமைச்சரான விஷயத்தில் ஏற்கனவே கலைஞர் மீது அதிருப்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது மேலும் அதிருதியை தந்தது.

புதிய அமைச்சரவை பதவியேற்றது. (இந்த அமைச்சரவையில் தான் இப்போதைய தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் முதன்முதலாக அமைச்சராக நியமிக்கப்பட்டார்).

இரண்டாம் முறை முதல்வரான கலைஞர் மதுவிலக்கை ரத்துசெய்தார். கலைஞரின் இந்த முடிவில் எம்.ஜி.ஆருக்கு உடன்பாடில்லை. மதுவுக்கு எதிரியாக தன்னை சினிமாவில் காட்டிக்கொண்ட அவருக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி கலைஞரிடம் பேசினார் எம்.ஜி.ஆர்., மனசாட்சி இடம் அளிக்காமல்தான் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தற்காலிகமாகத்தான் என்று கூறி எம்.ஜி.ஆரை சமாதானம் செய்தார் கலைஞர்.

அதே நேரம், மதுவின் தீமைகளை விளக்கி சொல்வதற்காக குழு ஒன்றையும் தி.மு.க., அமைத்தது.அந்தக்குழுவின் தலைவராக எம்.ஜி.ஆர்., நியமிக்கப்பட்டார்.
மதுவிலக்கு ரத்தானதற்கு பொருளாதார சூழ்நிலைதான் காரணம் என்று பிரச்சாரம் செய்தார் அவர். மதுவிற்கு எதிராக என்னை யார் பிரச்சாரம் செய்ய அழைத்தாலும் வருவேன். எந்த கட்சி அழைத்தலும் வருவேன் என்றும் சொன்னார். எம்.ஜி.ஆர்.,இப்படி சொன்னது தி.மு.க.,வில் சர்ச்சையை கிளப்பியது.

1972-ஆம் ஆண்டு தி.மு.க.,வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு தஞ்சாவூரில் கூடியது. இந்த பொதுக்குழுவில் தன் கூட்டணி கட்சியான இந்திரா காங்கிரசுக்கு எதிரான நிலைபாட்டை தி.மு.க., எடுத்தது. மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதால் அதிருதியில் இருந்த எம்.ஜி.ஆர்., இந்தப்பொதுக்குழுவில் கலந்துகொள்ளவில்லை. இது தி.மு.க.,தலைவர்களிடையே அதிர்ச்சியளித்தது.

இந்த சமயத்தில் பம்பாயில்(அப்போது பம்பாய்தான்...மும்பை இல்லை) நிருபர்களை சந்தித்த சோஷலிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ஒரு அதிர்ச்சி செய்தியை தெரிவித்தார்...அது.....

இன்னும் வ(ள)ரும்)................


Post Comment

இதையும் படிக்கலாமே:


18 கருத்துகள்:

  1. விருப்பு வெறுப்பின்றி நடுநிலையில் அழகாக தொகுத்து எழுதி வருகிறீர்கள். படிக்கும் சுவாரசியமும் குறையவில்லை. வாழ்த்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு
  2. நடுநிலை தவறாத நல்ல தொடர்..நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா3 அக்., 2011, 11:59:00 AM

    பல தலைவர்களின் பிண்ணனி தெரிந்து கொண்டேன், மிகவும் கண்ணியத்துடனும் நடுநிலையுடனும் எழுதியிருக்கிறீர்கள், நன்றி...

    இன்று என் வலையில்
    உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள- பாகம் 2
    http://vigneshms.blogspot.com/2011/10/blog-post_8000.html

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா3 அக்., 2011, 12:01:00 PM

    தமிழ்மணம்-3
    இண்ட்லி-4
    தமிழ்10-6....

    நன்றி...

    பதிலளிநீக்கு
  5. சுவாரசியமான தகவல்கள் சீரான தொகுப்பு அருமை அண்ணா!

    பதிலளிநீக்கு
  6. நல்லா விறுவிறுப்பாகத்தான் போகிறது இந்த தொடர். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. எப்பக்கமும் சாராமல் அழகாக, நடுநிலமையாக எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள் அண்ணே!

    அண்ணே நானும் ஒரு ப்ளாக் வச்சு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு வாட்டி என்னான்னுதான் எட்டிப்பாருங்களேன்!

    தமிழ்மணத்தில் 7 வது ஓட்டுப் போட்டிருக்கேன்!

    பதிலளிநீக்கு
  8. நடிநிலை தவறாமல் இருக்கிறது பதிவு தொடர்..

    பதிலளிநீக்கு
  9. நிறைய புது தகவல்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  10. இன்று என் வலையில்
    நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?

    பதிலளிநீக்கு
  11. அரசியல் வரலாற்றில் பல முக்கிய தருனங்களை தொகுத்தளிப்பதற்கு இரத்தத்தின் இரத்தம் சார்பாகவும், உடன்பிறப்பின் சார்பாகவும் நன்றி நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  12. மிக தெளிவான பதிவு. தமிழக அரசியலின் மிக முக்கியமான காலகட்டம் அது. எனவே படிக்க விறுவிறுப்பு கூடிக்கொண்டே வருகிறது. தயவு செய்து எம் ஜி யார் என்ன காரணத்திற்க்காக ஆதித்தனார் அமைச்சர் ஆவதை விரும்பவில்லை என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. maஉண்மையில் உங்கள் பதிவுதான் உண்மையின் உரைகல்!

    இப்பணி தொடர என் வாழ்த்துக்கள்.ma

    பதிலளிநீக்கு
  14. கேள்விப்பட்டிராத அரிய தகவல்களையும், அரிய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறீர்கள் நண்பரே! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. சுவாரசியமான பதிவு..தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.