என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், டிசம்பர் 15, 2011

17 பிரபல பதிவர்களும் கூகுள் பஸ்சும்



நாங்கள் பிரபல பதிவர்கள் என்று தாங்களாகவே ஒரு வட்டம்போட்டுகொண்டு கூகுள் பஸ்(buzz)ஸில் ஒரு வரியும் ரெண்டு வரியும் எழுதிக்கொண்டிருந்தவர்களுக்கு கூகுள் ஆப்படித்திருக்கிறது. ஆம்...பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விட்டதால் இனி பஸ் ஓட்டி பயனில்லை என்று கூகுள் பஸ்சை மூடிவிட்டது அந்த நிறுவனம். நிறைய பதிவர்கள் மீண்டும் பதிவுலகத்தின் பக்கம் தன் பார்வையை திருப்புவார்கள் என்றே நினைக்கிறேன்.  ரெண்டுவரியில் எழுதாமல் பிளாக்கிலாவது நிறைய எழுதுங்க. 



நீங்கள் பிரபல பதிவர்கள் என்பது உங்கள் தலைமுறை பதிவர்களுக்குத்தான். இந்த ஒரு வருடத்தில் புதிதாய் நிறைய பதிவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் புதுமுகமே. அடிக்கடி பதிவு எழுதிய பதிவர்களை தவிர வேறு யாரையும் அவர்களுக்கு தெரியாது. நீங்களாகவே சொன்னாலும் நம்பமாட்டார்கள். புதிய பதிவர்களின் பதிவுக்கு போய் அவர்களின் பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் போட்டு, வாக்களித்து உங்கள் இருப்பை காட்டுங்கள். 


இல்லை நாங்கள் பிரபல பதிவர்கள், நாங்கள் யாருக்கும் பின்னூட்டம் போடமாட்டோம் என்று சொன்னீர்களானால் உங்கள் பதிவுகளும் சீண்டப்படாது என்பதை நினைவில் வையுங்கள். இன்னொரு முக்கியமான விஷயம்,  மறுபடியும் பஸ் மாதிரி கார், ஆட்டோன்னு ஏதாவது வந்தால் போயிடாதீங்க...அதையும் மூடிட்டா மறுபடியும் இங்கதான் வரனும். 


------------------


இந்த பிரச்சினைகளுக்கு மத்திய அரசுதான் காரணம். எனவே முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தீர்வு காண வேண்டும் மேலும். இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.க்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். நான் என் பதவியை ராஜினாமா செய்யத்தயார்.  என் கட்சி எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்யத்தயாராக இருக்கிறார்கள் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் கேப்டன். கேப்டன் இன்னும் உங்களுக்கு அரசியலே புரியலே..... நீங்க ராஜினாமா செய்தால் எதிர்கட்சி தலைவர் பதவிதான் போகும், ஆனால், அவர்கள் ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கான வருமானம் போய்விடுமே? அதை செய்வாங்கன்னு நினைக்கறீங்க...

  


Post Comment

இதையும் படிக்கலாமே:


17 கருத்துகள்:

  1. பல விஷயங்கள் சந்திக்கு வரும்னு சொல்லுங்க மாப்ள!

    பதிலளிநீக்கு
  2. Super Nanpa....!

    I too wish all bloggers should be back.

    பதிலளிநீக்கு
  3. பதிவர்கள் மறுபடியும் எழுதுவது நல்லா விஷயம் தான்

    பதிலளிநீக்கு
  4. இனி பிளாக் கலைக்கட்டும் என்று சொல்லுங்கள்...

    பதிலளிநீக்கு
  5. http://ungaveetupillai.blogspot.com/2011/12/blog-post_15.html

    இதையும் படிச்சி பாருங்க தல

    பதிலளிநீக்கு
  6. அவர்கள் ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கான வருமானம் போய்விடுமே?// இப்பதானே எல்கேஜி .. இன்னும் படிக்கணும்..

    பதிலளிநீக்கு
  7. //நீங்க ராஜினாமா செய்தால் எதிர்கட்சி தலைவர் பதவிதான் போகும், ஆனால், அவர்கள் ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கான வருமானம் போய்விடுமே? அதை செய்வாங்கன்னு நினைக்கறீங்க...



    //

    சத்தியமா செய்ய மாட்டானுங்க ..

    பதிலளிநீக்கு
  8. பஸ் பஞ்சர் ஆயிடுச்சு..

    பதிலளிநீக்கு
  9. அடடடடா .... நாட்ல இந்த பிரபல பதிவர்கள் தொல்லை தாங்க முடியலப்பா... குண்டூசி விக்கிறவன்... புண்ணாக்கு விக்கிறவன் விக்கிறவன் எல்லாம் பிரபல பதிவர்னு சொல்லிக்கிறாங்க....

    பதிலளிநீக்கு
  10. பஸ்ல இருந்து அடிச்சி எறக்கி ஓடவிட்டான்களா? போதும்பா, கீழ எறங்கி வந்து சாதா மக்களோட பழகுங்க.

    பதிலளிநீக்கு
  11. //நாங்கள் யாருக்கும் பின்னூட்டம் போடமாட்டோம் //பின்னூட்டம் போட்டு போட்டு சலிச்சுப்போனதால பின்னூட்டம் போடவே சலிப்பா இருக்கிறதுதான் காரணம் [நல்லா கவனிச்சீங்களா மூத்தப்பதிவர் பின்னூட்டம் போட்டிருக்காரு]

    பதிலளிநீக்கு
  12. பஸ்சை மூடிட்டாங்கண்ணு சொல்லிட்டு விஜயகாந்த் ராஜினாமா விஷயத்தையும் கோத்திட்டீங்களே.. பலா கில்லாடிதான் நீங்க.

    பதிலளிநீக்கு
  13. குடிச்சிட்டு ஏதோ உளறிட்டாப்புல அதை போயி சீரியஸா எடுத்துக்கிட்டு

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.