என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், டிசம்பர் 07, 2011

14 தமிழக அரசும் சிக்கனமும்.............


நிதித் தட்டுப்பாடு காரணமாக வரும் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு மக்களுக்கு இலவசப் பொருட்கள் ஏதும் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது தமிழக அரசு.

கடந்த திமுக ஆட்சியில் 2009ம் ஆண்டு முதல் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.

பச்சரிசி 500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசி பருப்பு 100 கிராம் மற்றும் முந்திரி-திராட்சை 20 கிராம் அடங்கிய பைகள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டன.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு ரூ.80 கோடி செலவிடப்பட்டது. பின்னர் விலைவாசியும் உயர, இந்த ஆண்டு இத்திட்டத்துக்கு கூடுதல் நிதி செலவானது.

இந் நிலையில் ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசு, மாநிலம் கடும் நிதித் தட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறி சமீபத்தில் பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியது. மின் கட்டணத்தையும் உயர்த்தவுள்ளது.

இதே நிதித் தட்டுப்பாட்டை காரணமாகச் சொல்லி, மக்களுக்கு இந்த முறை பொங்கல் இலவச பொருள்களை வழங்குவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சிக்கன நடவடிக்கையாம். இது சரிதான் என்றாலும், இன்னும் பொங்கல் வைக்ககூட இலவசங்களை எதிர்பார்க்கும் நிலையில்தான் எல்லா அரசும் மக்களை வைத்துள்ளது என்பது எத்தனை பெரிய கேவலம். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம் என்று சொல்லியே ஒவ்வொருமுறையும் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள், அவர்களின் வாழ்க்கத்தரத்தை மட்டும் ஐந்து வருடங்களில் கண்ணாபிண்ணாவென்று உயர்த்திக்கொண்டு மக்களை தெருவில் நிறுத்திவிடுகிறார்கள்.

சரி...சிக்கன நடவடிக்கைகளை ஏழைகளிடமிருந்துதான் துவங்கவேனுமா?

மக்கள் பிரச்சினை பற்றி பேசாமல், சும்மா சட்டசபைக்கு போய்வருவதற்காக மட்டும் சம்பளமாக ரூபாய் 55,000 பெற்றுக்கொள்கிறார்களே எம்.எல்.ஏ.,க்கள் அவர்களின் சம்பளத்தில் கொஞ்சம் குறைத்து நடவடிக்கை எடுக்கலாம்.

சட்டசபை மாற்றம், நூலக மாற்றம் என்று ஆட்டைத்தூக்கி குட்டியில் போட்டு, குட்டியை தூக்கி ஆட்டில் போடும் வேலையை நிறுத்தினால் இன்னும் கொஞ்சம் நிதி மிச்சமாகுமே....

தொட்டதற்கெல்லாம் ஹெலிகாப்டரில் பறந்து மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு ரயிலில் செல்லலாமே...அதுகூட சிக்கன நடவடிக்கைதான்.

அடப்போங்கப்பா..... நம்ம ஆட்சியாளர்கள் கண்ணுக்கு யானை போவதெல்லாம் தெரியாது. பூனை போவது மட்டும் பளிச்சென்று தெரியும் போல.....



.


Post Comment

இதையும் படிக்கலாமே:


14 கருத்துகள்:

  1. அம்மாவின் கருணை உள்ளத்தால், இந்த பொங்கலுக்கு, மக்களுக்கு இலவசமாக அல்வா கொடுப்பது பிடிக்காமல் அவதூறு பேசும் உங்களை கண்டிக்கின்றேன்...

    எப்பூடி?

    பதிலளிநீக்கு
  2. பூனையில்லிங்க...எறும்பு போறது மாதிரி சின்னது மட்டும் தெரியும்

    பதிலளிநீக்கு
  3. அது வந்து கஸாலி,ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடருமென்று க(கொ)லைஞர் சொன்னாரில்ல?இப்ப தான் ஏழைங்களே இல்லியே!எதுக்கு இலவசம்னு அம்மா மாத்தி யோசிச்சிருக்காங்க போல!

    பதிலளிநீக்கு
  4. என்னது... எம்..எல்.ஏ.க்களுக்கு அம்பத்தஞ்சாயிரம் சம்பளமா தம்பி? முப்பதாயிரம்னுல்ல நினைச்சுட்டிருக்கேன்... நிறையப் பேர் நீங்க சொன்ன மாதிரி பேசுறதுகூட இல்ல. எம்.எல்.ஏ. ஹாஸ்டல் கேன்டீனை மட்டும் பயன்படுத்திட்டிருக்காங்க...

    பதிலளிநீக்கு
  5. அதானே. நியாயமான ஆதங்கம்தான். விழவேண்டியவங்க காதில் விழணுமே?

    பதிலளிநீக்கு
  6. பொங்கல் இலவசத்தை நிறுத்தினா எப்பவும் போல ஏழைகள தான் பாதிக்கபடுவாங்க , நிங்க சொல்லுறத நிறுத்தினா அவங்கக் பாதிக்க படுவாங்க இல்லா.. அது ரொம்ப பாவம் வழக்கமா சாகிற ஏழை சாகாலாம், அதுக்காக அவங்க ஹெலிகப்டர விட்டு AC ரயில்ல எல்லாம் போக முடியுமா ?

    பதிலளிநீக்கு
  7. மாப்ள உமக்கு ரொம்ப நக்கலா போச்சு ஆமா...யாரப்போயி ரயில்ல போக சொல்றீங்க...அவங்க ராக்கெட்டு கேட்டாங்க கெடைக்கல பாத்துக்கங்க!

    பதிலளிநீக்கு
  8. //மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம் என்று சொல்லியே ஒவ்வொருமுறையும் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள், அவர்களின் வாழ்க்கத்தரத்தை மட்டும் ஐந்து வருடங்களில் கண்ணாபிண்ணாவென்று உயர்த்திக்கொண்டு மக்களை தெருவில் நிறுத்திவிடுகிறார்கள். //

    உணமைதான் நண்பரே.. இவர்கள் மக்களின் வரிப்பணத்தினை சுருட்டித்தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் கோர்ட் படியேறுவது வாடிக்கையாகிவிட்டது.மாறி மாறி மக்களுக்கு நல்லது பண்ணுகிறேன் என்று முதுகில் தான் குத்துகின்றனர்

    பதிலளிநீக்கு
  9. என்னைப் பின்னூட்டமிட பணித்த பதிவு.. அத்தனையும் உண்மை.. சிக்கனத்தைத் தொடங்க இவர்களுக்கு வேறு இடமே தெரியலையா...???

    பதிலளிநீக்கு
  10. என்னைப் பின்னூட்டமிட பணித்த பதிவு.. அத்தனையும் உண்மை.. சிக்கனத்தைத் தொடங்க இவர்களுக்கு வேறு இடமே தெரியலையா...???

    பதிலளிநீக்கு
  11. ஜெயலலிதாவுக்கு ஆளத்தெரியவில்லை ஆளத்தகுதியும் இல்லை. யார் சொன்னாலும் கேட்காத ஜென்மம் இருந்தென்ன லாபம்.எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கும் இந்த ஆட்சிக்கு ஓட்டளித்த மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. வருகைதந்து கருத்துசொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.