என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், டிசம்பர் 19, 2011

15 அண்ணாதி.மு.க.,விலிருந்து சசிகலா குடும்பமே நீக்கம்- ஜெ., அதிரடி-



அதிமுகவில் இருந்து வி.கே.சசிகலா, ம.நடராஜன், திவாகர் (மன்னார்குடி), டிடிவி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர். எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், இராவணன், மோகன் (அடையாறு), குலோத்துங்கன், ராஜராஜன் உள்ளிட்ட 12 பேர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர் என்றும், அஇஅதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முன்பு ஒருமுறை அதாவது 1996- ஆம் ஆண்டு தேர்தலில் படுதோல்விகண்ட பின் இந்த தோல்விக்கு சசிகலாதான் காரணம் என்று குற்றம்சாட்டிய  ஜெயலலிதா சசிகலாவை பிரிந்தார். பின்னர் சில மாதங்களுக்குள்ளாகவே மறுபடியும் அவரோடு இணைந்தார். இது இரண்டாம் முறை....
இது எத்தனை நாளுக்கு என்று பார்ப்போம். மன்னார்குடி குடும்பத்தை நீக்கியதன் மூலம் கட்சியை கைப்பற்றி காப்பாற்றியுள்ளார் ஜெ.

எப்படியோ....பத்திரிகை நிருபர்களுக்கும், பதிவர்களுக்கும் அவல் கொடுத்துள்ளார் ஜெயா.


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 கருத்துகள்:

  1. ஏதோ..உள்குத்து இருக்குடோய்

    பதிலளிநீக்கு
  2. அதிரடியான நடவடிக்கை ஏன்னென்றுதான் தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  3. அதிரடிக்கும் துணிச்சலுக்கும் பேர் பெற்றவங்கன்றதை மறுபடி நிரூபிச்சிருக்காங்க ஜெ! இந்த அதிரடியான நடவடிக்கையால ஏதாவது நல்ல விஷயங்கள் நடந்துச்சின்னா சந்தோஷம்தான்.

    பதிலளிநீக்கு
  4. ரஹீம் அண்ணா..

    மறுபடியும் சேர்ந்ததக்கு அப்புறம்

    ”எங்களுக்கும் கண்கள் பணிக்கும் இதயம் இனிக்கும்” அப்படின்னு டயலாக் விடுவாங்க பாருங்க..

    இது என்னவோ வழக்கு விசாரணையிலிருந்து தப்பிக்கிறதுக்கான தந்திரமாத் தோணுது

    பதிலளிநீக்கு
  5. ஜூனியர் விகடன் படிச்சதும் நெனச்சேன்..

    பதிலளிநீக்கு
  6. இனிமேல் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..

    முத்தங்களே முதற்படி

    பதிலளிநீக்கு
  7. தமிழ்மணம் 4
    தமிழ் 10 8

    பதிலளிநீக்கு
  8. அவல் மட்டுமா கொடுத்திருக்கிறார்?பொங்கல்,பூரி எல்லாம் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்!

    பதிலளிநீக்கு
  9. ஜெயலலிதா ஒரு புரியாத புதிர்!

    பதிலளிநீக்கு
  10. //.இது இரண்டாம் முறை....இது எத்தனை நாளுக்கு என்று பார்ப்போம். //
    உங்களுக்கும் நம்பிக்கை வரவில்லையா?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.