என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, டிசம்பர் 02, 2011

29 எதுக்கெல்லாம் டிவோர்ஸ் கேட்கறதுன்னு ஒரு விவஸ்தை இல்லை?


அந்த விவாகரத்து வழக்கு விசாரனைக்கு வந்தது. முதலில் மனைவியை விசாரனை செய்தார் வக்கீல்....

உங்கள் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கறீங்களே.... ஏன் அவரை உங்களுக்கு பிடிக்கலியா?

அப்படிலாம் இல்லை. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.

அப்படின்னா....தினமும் உங்களை அடிச்சு...உதைக்கிறாரா?

இல்லேங்க....கல்யாணம் ஆன நாளிலிருந்து இன்றுவரை கோபமா அவரு விரல் நகம் கூட என் மேல் பட்டதில்லை.

சரி... வேலைக்கு போகமாட்டேன்னு சொல்றாரா அவரு?

நல்ல வேலையில் இருக்கார். கை நிறைய சம்பளம்.

உங்களை சந்தோசமா வச்சுக்கலியா?
சந்தோசத்திற்கு குறையே இல்லை எங்களுக்கு

அப்படியா....சரி... நகை, நட்டு வாங்கித்தரலியா?
நிறையவே வாங்கித்தந்திருக்காரு

புடவை?

மாசத்திற்கு ஒண்ணுன்னு பீரோ நிறைய அடுக்கி இருக்கு.

சினிமா, கினிமான்னு உங்களை கூட்டிட்டு போகலியா?

வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமையானா தியேட்டர்தான்.

உங்களுக்கு அவரிடம் எந்தக்குறையும் இல்லை. சரி...இது கடைசிக்கேள்வி....வெளில ஏதாவது அப்படி இப்படின்னு இருக்காரா?

அய்யய்யோ அவரு சொக்கத்தங்கம் சார்

ஏம்மா...உனக்கும் அவருக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லைங்கறே. அப்புறம் எதுக்கும்மா டிவோர்ஸ் கேட்கறே?

இருக்கு சார்....

அப்படின்னா சொல்லும்மா?

அவரு தினமும் அஞ்சு தடவை குடிக்கறாரு சார்

என்னது குடிக்கறாரா? எத்தனை நாளா இந்த குடிப்பழக்கம்?

சின்ன வயசிலேர்ந்து குடிக்கறாரு


ஏம்மா...சின்ன வயசிலேருந்து குடிக்கிறாருன்னு சொல்றே.. இத்தனை நாளுக்கு அப்புறம் இப்ப வந்து புகார் சொல்றே?


இவ்வளவு நாள் ஒன்னும் தெரியலே....இப்பத்தானே விலை ஏறிப்போச்சு


என்ன விலை ஏறிப்போச்சா? ஆமா உன் கணவர் என்னத்தை குடிக்கறாரு பீர்?

இல்லை...


பிராந்தி, விஸ்கி 


அதெல்லாம் இல்லை.


வேறு என்னதான் குடிக்கறாரு?

ஒரு நாளைக்கு அஞ்சு வேளை டீ, காபின்னு ஏதாவது குடிச்சுக்கே இருக்காரு....  நீங்களே சொல்லுங்க...இப்ப பால் விற்கற விலையில இது ரொம்ப ஓவருங்க... இப்படி இருந்தா எப்படிங்க அவரோட குடும்பம் நடத்தறது?
 -----------------------------------------

நேற்று படிக்காமல் தவற விட்டவர்களுக்காக...

டீ,காபி,பால் ஜோக்ஸ்......சூடாகவும்....சுவையாகவும்....




Post Comment

இதையும் படிக்கலாமே:


29 கருத்துகள்:

  1. ஏனிந்தக் கொலைவெறி? இதுக்கெல்லாம் டைவர்ஸ் கேப்பாங்கற அளவுக்கு யோசிச்சுட்டிங்களே... ஃபாரின் மாதிரி இந்தியாவும் ஆயிடுமோ...

    பதிலளிநீக்கு
  2. கஸாலி, பாவம் அந்தப் பொண்ணு. நீதிபதியை டைவர்ஸ் கொடுத்திடச் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  3. எப்படி, இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?

    பதிலளிநீக்கு
  4. அன்பின் கஸாலி - நச்சுன்னு முடிச்சிருக்கீங்க - ம்ம்ம்ம்ம் - இது மாதிரி வழக்குகள் எதிர்பார்க்கலாம் .... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமைஇறுதிவரி வரை ரகசியம் தெரியாமல் போக மிக சுவார்ஸ்யமாக இருந்தது பதிவுமனம் கவர்ந்த பதிவுதொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. ஸலாம் சகோ.கஸாலி...

    அப்படீன்னா...
    ////////////////////////////////

    20km தூர'மே' இருக்கும் பக்கத்து ஊரு ஆபீசுக்கு டெயிலி 'சைக்கிளில் போயிட்டு வாங்கன்னு' சொன்னா கேட்டுக்க மாட்டேங்கிறார் என் புருஷன் என்று வேறொருத்தர் விவாகரத்து கேட்கிறார்.

    அப்புறம்,

    'அரிக்கேன் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி வச்சி படின்னு அம்மா அப்பா சொல்றாங்க' என்று சில குழந்தைகள் வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டன..!

    ////////////////////////

    என்னங்க சகோ... இது..!

    இப்படில்லாம் இனிமே பதிவு எழுதி படிக்கிறவங்க வயிற்றை கலக்குவீங்களா..!

    பதிலளிநீக்கு
  8. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கபா...
    பகிர்விற்கு நன்றி நண்பரே!

    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    பதிலளிநீக்கு
  9. அய்யோ சாமி இனி நான் பால் இல்லாத காபிக்கே மாறிடறேன்.

    பதிலளிநீக்கு
  10. இதுக்கெல்லாமா டைவோர்ஸ் நல்ல நகைச்சுவைதான்.

    பதிலளிநீக்கு
  11. என்னது குடிக்கறாரா? எத்தனை நாளா இந்த குடிப்பழக்கம்?சின்ன வயசிலேர்ந்து குடிக்கறாரு./// நான் "வேற" மாதிரி நினைச்சேன்!

    பதிலளிநீக்கு
  12. போகிற போக்கை பார்த்தல் கேட்டாலும் கேபாயிங்க

    பதிலளிநீக்கு
  13. இன்றைக்கு செத்தா நாளைக்கு பாலு என்பதும் இனி சொல்ல கூட முடியாது .... அம்பானிகளுக்கு மட்டுமே சாத்தியம் சகோ ...சூப்பர்

    பதிலளிநீக்கு
  14. இது சில காலம் முன்பு வந்த வழக்கு.
    அதில் கணவர் என் கட்சிக்காரர். படித்தவர், செல்வந்தர்.

    கட்டிக்கொண்டது ஒரு சுமாரான குடும்பத்தை சேர்ந்த பெண். கொஞ்சம் அழகு. மற்றபடி வேறு ஒரு விசேசமும் இல்லை. ஏழ்மையான குடும்பம்.

    பத்தாண்டுகள் மனைவியையும் அவரது குடும்பத்தையும் நன்கு கவனித்துக் கொண்டு வந்தார். வேண்டிய உதவிகள் செய்தார்.
    அவள் அவ்வப்போது செய்யும் பல தொந்தரவுகளை மன்னித்தார்.

    ஆனால் அவளோ.. இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டு தனது குடும்பத்தை மேலே கொண்டு வந்து விட்டாள். இனி அவருடைய அவசியம் ஏதும் இல்லை என்ற நிலை.

    விவாகரத்துக்கு மனு செய்தால் ஒரு பெரும் தொகையை அவரிடமிருந்து கறந்து விடலாம் என்பதை அம்மனைவி நாடி பிடித்து வைத்துக் கொண்டாள்.

    வீட்டில் பல்வேறு சித்தரிப்பு காட்சிகளை, அவரை அறியாமல் செய்து வைத்துக் கொண்டு அவற்றை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டாள். அதாவது பார்த்த மாத்திரத்தில் அவர் மீது தப்பான அபிபிராயம் தோன்றக் கூடிய அளவில்.

    பின் வீட்டை விட்டு ஓடி போய், ஆள் சேர்த்துக் கொண்டு அவர் மீது புகார் கொடுத்து, வழக்கிட்டு, அவரை அவமானப்படுத்தி, முடிவில் நிரந்திர ஜீவனாம்சமாக ஒரு பெருந்தொகையை பெற்றுவிட்டாள். கணவன் தனது சமுதாய நிலை கருதி, குற்ற வழக்குகளுக்கு பயந்து, கேட்ட தொகையை கொடுத்து விட்டார்.

    பரஸ்பர சம்மத விவாகரத்து வாங்கிய சில மாதங்களுக்குள் அவள் வேறு ஒருவரை மணந்து கொண்டாள் !

    இப்படி பிளாக் மெயில் கேஸ்களும் இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  15. * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

    * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

    * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    * போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

    பதிலளிநீக்கு
  16. நாம தமிழ்நாட்டோட நிலைமை அந்த அளவிற்கு மாறிவிட்டது.

    பதிலளிநீக்கு
  17. நகைச்சுவை கலந்த அதீதமான உண்மை.

    பதிலளிநீக்கு
  18. [@]c4873825404508704674[/@]இதுக்கும் ஸ்மைலிதானா?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.