என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், டிசம்பர் 20, 2011

16 ஜரூராய் அரங்கேறிய ஜெயா-சசி நாடகமும், மொட்டை போடப்பட்ட ரத்தத்தின் ரத்தங்களும்....



நேற்றுவரை கட்சியிலும், ஆட்சியிலும், போயஸ் தோட்டத்திலும் கோலோச்சிய மன்னார்குடி + விளார் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரையும் மொத்தமாய் துடைத்து கட்சியில் தன் பிடியை இறுக்கியிருக்கிறார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் உறுதியான நடவடிக்கை இது என்றும், அடப்போங்கப்பா...இது ஒரு நாடகம்...சீக்கிரமே சசிகலா கட்சிக்கு திரும்பிவிடுவார் என்றும் இரு வேறு கருத்துக்கள் றெக்கை கட்டி பறக்கிறது. எனக்கும் இது நாடகமாகவே தெரிகிறது.

ஏற்கனவே 1996-ஆம் ஆண்டு இப்படிப்பட்ட ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டு, ஒரு சில மாதங்களிலேயே அது சுபம் போடப்பட்டதை இப்போது நினைவு கூற விரும்புகிறேன். ஜெயா ஆட்சிக்கும் வந்தாலும், வராவிட்டாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மன்னார்குடி குடும்பத்தின் பிடி கட்சியில் சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது. அரசியல் பரமபதத்தில் அவர்களுக்கு சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்களான தினகரன், சுதாகரன், பாஸ்கரன், திவாகரன் போன்ற கரன்களும் டாக்டர் வெங்கடேஷ், ராவணன் என்று உறவினர்களும் முன்னிலை பெற்றே வந்திருக்கிறார்கள்.  இது எல்லாவற்றிற்கும் காரணம் ஜெ.,க்கு இருந்த சசிகலாவின் (கூடா)நட்புதான்.




வேட்பாளர்கள் தேர்வு, அமைச்சர்கள் தேர்வு, அதிகாரிகள் தேர்வு, தலைமை,மாவட்ட, ஒன்றிய  நிர்வாகிகள் தேர்வு என்று அனைத்திலும் சசிகலாவின் பங்கு இருந்ததை ஜெயா அனுமதித்ததும் அந்த நட்பின் உரிமையில்தான். அந்த நட்பே தனக்கு ஆபத்தாக வரும்போது சில அதிரடி நடவடிக்கைகளை விரும்பியோ விரும்பாமலோ எடுக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், இது நிரந்தரமான முடிவல்ல...இதயப்பூர்வமான முடிவாகவும் இருக்காது.  வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவோ, தற்காத்துக்கொள்ளவோதான் இந்த நாடகம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தனக்கு ஆபத்து வரும்போது தன்னை தற்காத்துக்கொள்ள பல்லி தன் வாலை தானாகவே துண்டித்துக்கொள்ளும். அப்படி துண்டிக்கப்பட்ட வால் துடிப்பதை எதிரிகள் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த சில வினாடிகளில் பல்லி தப்பித்து போய்விடும். மீண்டும் சில நாட்களில் புதிதாய் வளர்ந்த வாலுடன் அந்தப்பல்லி சுவரில் வலம்வரும்.
அதுபோல்தான் சசி நீக்கமும். நாளையே சசி ஒரு மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்படுவார். கண்கள் பனித்து இதயம் இனிக்கும் நாடகம் இங்கேயும் அரங்கேற்றப்படும்.

ஏற்கனவே ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்து வெளியேறியவர்களெல்லாம் தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் ஜெயாவிடமே அடைக்கலம் ஆகியிருக்கிறார்கள்.
அவர்களையே மன்னித்து ஏற்றுக்கொண்ட ஜெயாவிற்கு தன் உடன்பிறவா சகோதரியை, உற்ற தோழியை மன்னிக்க எவ்வளவு நேரமாகும்?

இது தெரிந்துதான் அந்தக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களெல்லாம் தன் தலைவியின் முடிவை ஆதரித்தோ எதிர்த்தோ கருத்துசொல்லாமல் மௌனமாக இருக்கிறார்கள்.(அதுசரி...அவர்கள் எப்போது கருத்துசொன்னார்கள். இப்போது சொல்வதற்கு?) மீண்டும் எப்படியும் சசிகலா உள்ளே வந்துவிடுவார். நாம் அவசரப்பட்டு விமர்சித்து எதற்கு மாட்டிகொள்வானேன் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால், தொண்டர்கள் தான் பாவம். ஜெயலலிதாவின் இந்த முடிவை உண்மையென நம்பி மொட்டையெல்லாம் அடித்து வரவேற்றிருக்கிறார்கள்.

சசிகலா மீண்டும் கட்சியில் புகுந்துவிடுவார். அப்போதும் ஒருமுறை மொட்டையடித்துக்கொள்ள தயாராக இருங்கள். அந்த மொட்டையில் சந்தனத்தையும், நெற்றியில் நாமத்தையும் ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்தே பூசுவார்கள்.



Post Comment

இதையும் படிக்கலாமே:


16 கருத்துகள்:

  1. நேத்தே நான் சொல்லிட்டேன்,இது ச்சும்மா ஒரு "பிட்"டுன்னு!தொண்டர்கள் தான் பாவம்!கூட இருக்கிறவங்க(அரசில்)பொத்திக்கிட்டுத்தான் இருக்கணும்!மறுபடி உள்ள வந்துட்டா "ஆப்பு"ல்ல?????

    பதிலளிநீக்கு
  2. அடுத்த பட்டியலும் இருப்பதாக தகவல்கள் வருகிறது இன்னும் யாரெல்லாம் வெளியே போகிறார்க்ள என்று பார்ப்போம்...

    ரத்தத்தின் ரத்தங்களுக்கு வேடிக்கைப்பார்ப்பது மட்டுதான் வேலை

    பதிலளிநீக்கு
  3. //அந்த மொட்டையில் சந்தனத்தையும், நெற்றியில் நாமத்தையும் ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்தே பூசுவார்கள். //

    ஹா...ஹா...ஹா....

    க.க.க.போ.

    பதிலளிநீக்கு
  4. யோவ் காஸாலி!!!!
    நீரு அரசியல நட்ட நடுவுல குந்திகினு, நடுநெலமைல பாக்குறியா இல்ல எப்புடின்னு தெரியாது!!!!

    ஆனா, என்னோட பார்வைய அப்பட்டமா படம்புடுச்சுப் போடுற.... :-)

    பதிலளிநீக்கு
  5. அட போங்கப்பா ஜோசியக்காரன் இந்த சனிபெயர்ச்சி உங்க நட்புக்கு ஆபத்துன்னு சொல்லிருப்பான் .அதான் இந்த விரிசல் நாடகம் சனி பெயர்ச்சி முடிந்தவுடன் மீண்டும் இனைந்து விடுவார்கள்

    பதிலளிநீக்கு
  6. [@]c7270864676850093109[/@]வெளங்காதவன் said...

    யோவ் காஸாலி!!!!
    நீரு அரசியல நட்ட நடுவுல குந்திகினு, நடுநெலமைல பாக்குறியா இல்ல எப்புடின்னு தெரியாது!!!!

    ஆனா, என்னோட பார்வைய அப்பட்டமா படம்புடுச்சுப் போடுற.... :-)//

    நாம ரெண்டுபேரும் ஒரே அலைவரிசையில யோசிக்கிற ஆளுகய்யா...அதான் இப்படி

    பதிலளிநீக்கு
  7. த.ம.8

    ஏதோ தொண்டர்கள் கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்காங்க.அது பொறுக்கவில்லையா!

    பதிலளிநீக்கு
  8. நான் கூட உண்மைன்னு நம்பிட்டேன்க

    பதிலளிநீக்கு
  9. அருமை.
    பகிர்விற்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  10. இதுஎல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.இப்போது ஏறிப்போன விலைவாசி,வால்மார்ட்,சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு எல்லாம் மறந்து போனதுதானே?

    பதிலளிநீக்கு
  11. ஜெ,சசி நட்பு பிரிந்தாலும், சேர்ந்தலும் மொட்டை போடும்(அம்மா சொன்னா சரி என்ற அடிமை இருக்கும் வரை) அ.தி.மு.க எண்ணிக்கை குறையாது.. நல்ல பகிர்வு அண்னே..

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.