என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, டிசம்பர் 16, 2011

15 அண்ணா.தி.மு.க.,வில் வடிவேலு- ஜெயாவை சந்தித்தார்.



தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக போயஸ் தோட்ட வரவேற்பறையில் காத்திருக்கிறார் நடிகர் வடிவேலு...
அப்போது அங்கு வருகிறார் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 


ஓ.பி: வாங்க..வடிவேலு, இப்பவாவது அம்மாதான் எல்லாம் என்று தெரிஞ்சுக்கிட்டீங்களே...சந்தோசம். இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா வருவாங்க. உங்களுக்கு 15 நிமிசம்தான் அப்பாயிமெண்ட். அதுக்குள்ள எல்லாத்தையும் பேசிடனும். இன்னொரு முக்கியமான விஷயம்...

வடிவேலு: சொல்லுங்கண்ணே

ஓ.பி: அம்மா வருவதற்கு முன்னால் சொல்லிடுவோம். பட்டுன்னு எந்திரிச்சிடனும். அப்புறம் அம்மா உட்கார்ந்த பிறகுதான் நீங்க உட்காரனும். உட்காரனும்ன்னு சொன்னதும் உங்க வீட்டில உட்கார்ரது மாதிரி ஹாயா சாஞ்சுக்கெல்லாம் உட்காரக்கூடாது. ஒரு திகில் படம் பார்க்கும்போது எப்படி கலவர முகத்துடன், சீட்டுக்கு நுனில உட்காருவோமோ அப்படி உட்காரனும். மேலோட்டமா பார்த்தா உட்கார்ந்த மாதிரியே தெரியக்கூடாது. அப்புறம்....கைய கட்டிக்கே உட்கார்ந்திருக்கனும். எடுத்தறக்கூடாது. குறிப்பா...குளோசப் விளம்பரத்துல வர்ர மாதிரி பல்லெல்லாம் தெரிய சிரிக்கக்கூடாது. லேசா புன் முறுவல்தான். அம்மா சிரிச்சாங்கன்னா நீங்க சிரிக்க தடையில்லை.

வடிவேலு: அண்ணே...எனக்கொரு சந்தேகம்? இப்ப நான் அம்மாவை பார்க்கப்போறேனா? கடவுள பார்க்க போறேனா?

ஓ.பி: என்ன வடிவேலு,சின்னப்புள்ளத்தனமா கேட்கறீங்க?...அம்மாவும் கடவுளும் வேறு வேறா? எங்களுக்கு ரெண்டுமே ஒண்ணுதான். இதை அறியாதவன் இருக்கவேண்டிய இடம் ஜெயிலு...அம்மான்னா சும்மா இல்லேடா....அவங்க இல்லேன்னா நாங்க இல்லேடா....என்று பாடுகிறார்.

அப்போது ஜெயலலிதாவின் உதவியாளர் வருகிறார்....
அம்மா வாராங்க....அம்மா வாராங்க....

(வடிவேலு மனதுக்குள்....அடேங்கப்பா நம்ம புலிகேசி படமே தோத்துடும் போல...)

ஜெயலலிதா வருகிறார்.


ஜெயலலிதா:  வாங்க வடிவேலு....எப்படி இருக்கீங்க?

வடிவேலு: எங்கேம்மா நல்லாஇருக்கேன். உங்க ஆட்சி வந்ததிலிருந்து நான் நல்லாவே இல்லைம்மா

ஜெயலலிதா:  என்ன முட்டாள்தனமா பேசறீங்க?....என் ஆட்சியில மக்கள் எல்லோரும் நல்லாத்தானே இருக்காங்க?

வடிவேலு: அய்யய்யோ.... நான் அப்படி சொல்லலேம்மா....உங்க ஆட்சியில் உங்களுக்கு பயந்து  ஒருத்தரும் என்னை நடிக்க கூப்பிடலேன்னு சொல்லவந்தேன்.

ஜெயலலிதா:  அதானே பார்த்தேன். நீங்க அந்த கருணாநிதிக்கு ஆதரவா  பேசும்போதே இதையெல்லாம் யோசிச்சிருக்கனும்.

வடிவேலு: நான் கலைஞருக்கு.....

ஜெயலலிதா:  ஸ்டுப்பிட்....கருணாநிதின்னு  சொல்லுங்க

வடிவேலு: சாரிம்மா.... நான் கருணாநிதிக்கு ஆதரவா பேசலம்மா....விஜயகாந்துக்கு எதிராத்தான் பேசினேன்.

ஜெயலலிதா:  அந்த ஒரு காரணத்துக்காகத்தான் நீங்க இப்ப வெளில இருக்கீங்க. இல்லேன்னா இப்ப களிதான் திண்ணுக்கு இருந்திருப்பீங்க...

வடிவேலு: அய்யய்யோ அப்படிலாம் செஞ்சுடாதீங்கம்மா நான் புள்ளை குட்டிக்காரன். இப்ப என் தவற உணர்ந்திட்டேன். இனிமே நீங்கதான் என் தெய்வம்.

ஜெயலலிதா:  ஓகே...ஓகே...இப்ப உங்களுக்கு என்ன வேணும்?

வடிவேலு: என்னை உங்க கட்சியில சேர்த்துக்கிட்டீங்கன்னா ஒரு பேச்சாளரா காலத்தை ஓட்டிடுவேன். நல்லா எம்.ஜி.ஆரு பாட்டெல்லாம் பாடுவேன்மா...

ஜெயலலிதா:  எங்கே பாடுங்க கேட்கிறேன்.

வடிவேலு தொண்டையை செருமியபடி......

பதவி வரும்போது பணிவு வரவேண்டும். துணிவு வரவேண்டும் தோழா....என்று பாடுகிறார்.

ஜெயலலிதா:  ஓகே...இந்த பாட்டுக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?

வடிவேலு: அது வந்தும்மா....

ஜெயலலிதா:  சரி நானே சொல்றேன் கேட்டுக்கங்க....அதாவது எனக்கு முதலமைச்சர்ங்கற பதவி வரும்போது, மத்தவங்களுக்கு என்னை பார்த்தவுடன் பணிவு வரவேண்டும். அதைப்பார்த்த எனக்கு பால் விலை, பஸ் டிக்கெட்டுன்னு எல்லாத்தையும் உயர்த்தற துணிவு வரவேண்டும்ன்னு அர்த்தம். என்னைப்பற்றி எப்படி ஒரு தீர்க்கதரிசனமா அன்னைக்கே மிஸ்டர் எம்.ஜி.ஆர்., பாடியிருக்கார் பாருங்க..

வடிவேலு: ஆமாம்மா.....

ஜெயலலிதா:  அதுசரி வடிவேலு, என் கட்சியில நிறைய பேச்சாளர்கள் இருக்காங்களே? உங்களுக்கு வேலையே இல்லையே?

வடிவேலு: அம்மா...அப்படி சொல்லாதீங்கம்மா...அவங்க பொதுவான பேச்சாளரா இருக்கட்டும். நான் அந்த விஜயகாந்த திட்ட்ற பேச்சாளரா இருந்திட்டு போறேன்.

ஜெயலலிதா:  அந்தாள் யாரும் திட்டக்கூடாதுன்னு நான் சொல்லிருக்கேன்.

வடிவேலு: அம்மா.... எதிரியக்கூட திட்டாத உங்க நல்ல மனசு யாருக்கு வரும்?

ஜெயலலிதா:  நல்ல மனசுலாம் இல்லை. எதுக்கு அவர திட்டி பெரியாளா ஆக்கனும்? சரி...ரொம்ப கெஞ்சி கேட்கறதால ஒரு வேலை தாறேன். ஜெயா டி.வி.,யில புதுசா ஒரு புரோக்ராம் செய்யலாம்ன்னு இருக்காங்க...

வடிவேலு: ஜெயா டி.வி.யிலா?

ஜெயலலிதா:  என்ன வடிவேலு? மரியாதை இல்லாம பேரெல்லாம் சொல்றீங்க... நான் மட்டும்தான் ஜெயா டி.வி.ன்னு சொல்லுவேன். மத்தவங்க அம்மா டி.வி.ன்னுதான் சொல்லனும்..சரியா?

வடிவேலு: மன்னிச்சிடுங்கம்மா...

ஜெயலலிதா:  ஜெயா டி.வி.ல சோல்ஜரான கேப்டன்னு ஒரு புரோக்ராம் செய்யறாங்க...அதுக்கு நீங்க தொகுப்பாளரா இருங்க...சும்மா இருக்கற உங்களுக்கும் பொழுதும் போகும். வருமானமும் கிடைச்சமாதிரி இருக்கும்...சரியா?

என்னை வாழவைத்த தெய்வம் அம்மா வாழ்க...என்ற படி காலில் விழுகிறார் வடிவேலு


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 கருத்துகள்:

  1. அய்யா இது நடக்கும்னு நெறையா பேரு எதிபார்கிறாங்க.. இப்பதான் தியாகு சேந்தாரு.. அடுத்தது இவர்தான்.

    பதிலளிநீக்கு
  2. யோவ் நான்கூட உண்மைன்னு நெனசிட்டேன்யா ஹிஹி!

    பதிலளிநீக்கு
  3. வடிவேலுக்கு இந்த பதிவு ரொம்ப யூசாகும்....

    பதிலளிநீக்கு
  4. அம்மாவை பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க..

    இப்படியோ போகட்டும்...

    பதிலளிநீக்கு
  5. இது போன்று நடந்தாலும் நடக்கும்.
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் வலையில்:
    "நீங்க மரமாக போறீங்க..."

    பதிலளிநீக்கு
  6. இது நடந்ததும், உங்க வாயில சர்க்கரை போடணும்.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. அதுசரி, நீங்க எப்போ அண்ணா.தி.மு.க.வில் சேர்ந்து ஜெயாவை.... இல்ல இல்ல அம்மாவை சந்திக்க போகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  9. //விக்கியுலகம் said...

    யோவ் நான்கூட உண்மைன்னு நெனசிட்டேன்யா ஹிஹி////

    :-)

    பதிலளிநீக்கு
  10. vijyakanth ivana mairukku kuda satta pannikka porathu illa, evanae yan poi matikiraan nu therila

    பதிலளிநீக்கு
  11. [ma] என்னத்த சொல்ல ? எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே ! [/ma]

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.