என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, டிசம்பர் 24, 2011

10 எம்.ஜி.ஆரை ஏமாற்றிய இந்திரகாந்தியும், இ.காங்கிரசும்....



முந்தைய பாகங்கள் 1, 2, 3, 4,


பாண்டிச்சேரியில் மைனாரிட்டி அண்ணா.தி.மு.க.,அரசு நீடிக்க இந்திராகாந்தியின் ஆதரவை நாடினார் எம்.ஜி.ஆர்., ஆதரவு தருவதாக கூறிய இந்திரா ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது....அசோக் லேலாண்ட் அதிபர் ரங்கனாதனை இ.காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக்க விரும்பிய இந்திரா, அவருக்கு அண்ணா.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்தால் பாண்டிச்சேரியில் இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அண்ணா.தி.மு.க.,ஆட்சி தொடர ஆதரவு அளிப்பார்கள் என்றார் இந்திரா. அதன்படியே எம்.ஜி.ஆரும் ஒத்துக்கொண்டார். அதன்படி ரங்கனாதன் ராஜ்யசபா எம்.பி.,யானார்.

ஆனால், பாண்டிச்சேரியிலோ.....
அண்ணா.தி.மு.க.,வளருவதை விரும்பாத இந்திராகாந்தி தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களை அண்ணா.தி.மு.க.,ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கவைத்து எஸ்.ராமசாமியின் ஆட்சியை கவிழ்த்தார். இந்திரா தன்னை ஏமாற்றி துரோகம் செய்துவிட்டதை எம்.ஜி.ஆர்., உணர்ந்திருந்தாலும் மத்தியில் சர்வ பலத்துடன் இருக்கும் அவரை எதிர்த்து ஏதும் செய்யமுடியாமல் அமைதியாகிவிட்டார்.

அதன்பின் தன் இருப்பை காட்ட எம்.ஜி.ஆர்.,ஆட்சியிலிருந்த தி.மு.க.,வை எதிர்த்து அவ்வப்போது போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார். அப்போதுதான், கச்சத்தீவு பிரச்சினை வந்தது. 1974-ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகா இந்தியா வந்து பிரதமர் இந்திராவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
பேச்சின் முடிவில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க முடிவு செய்தார் இந்திரா.

இதையறிந்த முதல்வர் கலைஞர், டெல்லிக்கு சென்று கச்சத்தீவு இந்தியாவிற்கே சொந்தம். அதை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது என்று தகுந்த ஆதாரத்துடன் விளக்கினார். ஆனாலும், பிடிவாதமாக இருந்தார் இந்திரா. நிலைமை கைமீறிப்போவதை உண்ர்ந்த கலைஞர், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். அதில் அண்ணா.தி.மு.க.,சார்பில் அரங்கநாயகம் கலந்துகொண்டார்.

மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் தயாரானது. அனைத்துக்கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டபோது அண்ணா.தி.மு.க.,பிரதிநிதி அரங்கநாயகம் மட்டும் கையெழுத்திடவில்லை. மாறாக, இந்த பிரச்சினை தொடர்பாக தி.மு.க.,அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்புக்குரல் எழுப்பி வெளிநடப்பு செய்தார். ஆயினும் தீர்மானம் நிறைவேறியது.

அதன்பின் சென்னையில் அமைக்கப்பட்ட ராஜாஜி நினைவில்லத்தை திறந்து வைக்குமாறு ஜெ.பி.,என்ற ஜெயப்பிரகாஷ் நாராயணனை அழைத்தார் கலைஞர். இந்த அழைப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த எம்.ஜி.ஆர்., ஜெ.பி.,அவர்கள் தமிழ் நாட்டிற்கு வந்து ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கவேண்டும் என்று தென்னகம் நாளிதழ் மூலமாக ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தி.மு.க.,எதிர்ப்பே பிரதானமாக இருந்ததை கவனிக்க தவறவில்லை ஜெ.பி.,

திட்டமிட்டபடியே சென்னை வந்து ராஜாஜி நினைவில்லத்தை திறந்துவைத்த ஜெபி., எம்.ஜி.ஆரின் கடித விஷயத்தையும் தொட்டார்.

எம்.ஜி.ஆரின் கடிதத்தில் இருந்த வாசகங்கள் மிகவும் தரம் குறைந்த கசப்பான வசைகள். தி.மு.க.,அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவதால் மட்டும் அந்த அரசு ஊழல் உள்ள அரசு என்றாகிவிடாது. தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவுடன் அதற்கான பதில்களை அச்சடித்து சட்டமன்றத்தில் வைத்தவர் இந்திய முதல்வர்களிலேயே கலைஞர் கருணாநிதி மட்டும்தான். இது யாரும் செய்யாத முன்மாதிரி. குற்றம் சுமத்துவது சுலபம், அதை நிருபிப்பது கடினம் என்று பேசி எம்.ஜி.ஆரை சங்கடப்படுத்தினார்.

இது நடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே இந்தியாவை உலுக்கிய எமெர்ஜென்ஸி பிரகடனப்படுத்தப்பட்டது.

இன்னும் வ(ள)ரும்..... 

 நேற்று படிக்காமல் விட்டவர்களுக்காக.....

ஜெயலலிதாவை காப்பாற்றிய நடராஜன்....



Post Comment

இதையும் படிக்கலாமே:


10 கருத்துகள்:

  1. வணக்கம்,கசாலி சார்!பிரமாதம்!!!!

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. கடந்தகாலத்தை இன்றைய நாளில் நினைவூட்டியமைக்கு நன்றி..

    வாக்கு (TM 3-TT 7)
    அன்போடு அழைக்கிறேன்..

    மௌனம் விளக்கிச் சொல்லும்

    பதிலளிநீக்கு
  4. சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்தாலும் சூடு குறையாமல் இருக்கிறது. நன்று தம்பி.

    பதிலளிநீக்கு
  5. அடேங்கப்பா... அரசியல்....ஹிம்

    பதிலளிநீக்கு
  6. நல்ல தொடர் .. புதிய தகவல்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  7. [@]c7212621329814886970[/@]இனி பெரிய இடைவெளியில்லாமல் வரும் சகோ

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.