என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, டிசம்பர் 23, 2011

20 ஜெயலலிதாவை காப்பாற்றிய நடராஜன்....



அது 1989-ஆம் ஆண்டு, அண்ணா.தி.மு.க., ஜானகி அணி- ஜெயலலிதா அணி என்று இரு பிரிவுகளாக பிளவுபட்டு தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில்தான் ஜெயலலிதா முதன்முதலாக (போடி தொகுதியில்) போட்டியிட்டு வென்றார்.

அதன்பின் சில நெருக்கடிகளால் அரசியலிலிருந்தும், எம்.எல்.ஏ.,பதவியிலிருந்தும் விலக முடிவு செய்த ஜெயா அதை ஒரு ஒரு கடிதமாக எழுதினார்.  அந்தக்கடிதத்தை சபாநாயகருக்கும் அனுப்ப முடிவு செய்தார். ஜெயலலிதாவின் இந்த முடிவை அறிந்த சசிகலாவின் கணவர் நடராஜன் அவசரப்படவேண்டாம் என்று ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி அந்தக்கடிதத்தை தன் வீட்டில் பத்திரப்படுத்தினார்.

அதன்பின் சில நாட்களில் நடராஜன் வீட்டில் நடந்த சோதனையில் அந்தக்கடிதம் போலீசார் கைகளில் சிக்கியது. அடுத்த நாள் வெளிவந்த நாளிதழ்களில் ஜெயலலிதா ராஜினாமா பற்றிய செய்தி வெளிவந்தது. இதையறிந்த ஜெயலலிதா வழ்க்கம்போல் இது கருணாநிதியின் சதி என்று கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாள் கூடிய சட்டமன்றத்திலும் இது எதிரொலித்தது. தொடர்ச்சியாக கலைஞர் பட்ஜெட் உரையை படித்தபோது, அண்ணா.தி.மு.க., உறுப்பினர்களால் அந்தபட்ஜெட் உரை பறிக்கப்பட்டு கிழிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.

அன்று மட்டும் ஜெயாவின் ராஜினாமாவை நடராஜன் தடுக்காமல் விட்டுருந்தால், இப்போது ஜெயலலிதா அரசியலிலிருந்தே ஒதுங்கியிருப்பார். ஒருவேளை தன் சக நடிகைகளான வெண்ணிற ஆடை நிர்மலா, லதாவைப்போல் ஏதேனும் சினிமா அல்லது சீரியல்களில் அம்மா, அத்தை, வில்லி வேடங்களில் நடித்துக்கொண்டிருப்பார்.
அந்த வகையில், இன்று அரசியல்வானில் ஜெ., ஜொலிப்பதற்கு நடராஜனும் ஒரு காரணம். 


Post Comment

இதையும் படிக்கலாமே:


20 கருத்துகள்:

  1. வணக்கம்,கசாலி!பின்னிட்டீங்க,போங்க!அம்மாவுக்கு பழசை கிளறினா புடிக்காதுன்னு தெரியுமில்ல?ஆட்டோ......................................!

    பதிலளிநீக்கு
  2. அதைவேறு ஞாபகப்படுத்தி ஏன் தலைவரே பீதிய கிளப்புறீங்க

    பதிலளிநீக்கு
  3. இப்ப ஆட்டோ இல்லை .. நிலா அபகரிப்பு வழக்கு தான்

    பதிலளிநீக்கு
  4. மாப்ள உங்களுக்கு ஒரு லோடு ஆளுங்க பார்சல் ஹிஹி!

    பதிலளிநீக்கு
  5. ஒரு கடிதத்தை மறைச்சி அவங்கள சிஎம் ஆக்கிட்டாங்களே...

    புதிய தகவல்

    பதிலளிநீக்கு
  6. ஜெயாவின் ராஜினாமாவை தடுக்காதிருந்தால் நடராஜன் யார் என மக்களுக்கு தெரியாது

    பதிலளிநீக்கு
  7. Srithar said...

    ஜெயாவின் ராஜினாமாவை தடுக்காதிருந்தால் நடராஜன் யார் என மக்களுக்கு தெரியாது//
    நிஜம்தான் சார். இந்த சம்பவம் நிகழாமல் இருந்திருந்தால் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றிருப்பார் நடராஜன், வினோத் வீடியோ விஷனின் முதலாளியாக மட்டுமே இருந்திருப்பார் சசிகலா.

    பதிலளிநீக்கு
  8. [@]c5363959500737647493[/@]
    இப்படி ஆளாளுக்கு பயங்காட்டினா எப்படி...அதுசரி... நில அபகரிப்பு தெரியும். அதென்ன நிலா அபகரிப்பு?..

    பதிலளிநீக்கு
  9. [@]c5987467693710533386[/@]
    யோவ்.. மாம்ஸ் பேசாமல் வியட்னாம் பக்கம் வந்துடவா? ஏதோ ஒரு ஐந்து மில்லியன் டோங்க் சம்பளமா கிடைச்சாலும் சரிதான்.

    பதிலளிநீக்கு
  10. [@]c7175302364061130401[/@]
    இன்னும் என்னனத்தை மறைச்சிருக்காங்களோ?...

    பதிலளிநீக்கு
  11. நடராஜனோட ஒரு சின்ன உதவி இன்னிக்கு தமிழ்நாட்டோட தலையெழுத்தையே மாத்திடுச்சே?

    பதிலளிநீக்கு
  12. ////ரஹீம் கஸாலி said...
    [@]c5363959500737647493[/@]
    இப்படி ஆளாளுக்கு பயங்காட்டினா எப்படி...அதுசரி... நில அபகரிப்பு தெரியும். அதென்ன நிலா அபகரிப்பு?../////

    அவரு நடிகை நிலாவை பத்தி ஏதோ கில்மா மேட்டர் சொல்றாரு போல....

    பதிலளிநீக்கு
  13. [@]c7282552443804072766[/@]
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////ரஹீம் கஸாலி said...

    இப்படி ஆளாளுக்கு பயங்காட்டினா எப்படி...அதுசரி... நில அபகரிப்பு தெரியும். அதென்ன நிலா அபகரிப்பு?../////

    அவரு நடிகை நிலாவை பத்தி ஏதோ கில்மா மேட்டர் சொல்றாரு போல....
    ஓ அந்த நிலாவை சொல்றாரா? விளங்கிருச்சு...

    பதிலளிநீக்கு
  14. [@]c8272494730149736907[/@]
    வருகிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  15. [@]c2667133300728471817[/@]
    அது சின்ன உதவி இல்லேண்ணே...பெரிய உதவி

    பதிலளிநீக்கு
  16. [@]c6419312952611229989[/@]
    தங்களின் தொடர் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி டேனியல் சார்.

    பதிலளிநீக்கு
  17. அன்று மட்டும் ஜெயாவின் ராஜினாமாவை நடராஜன் தடுக்காமல் விட்டுருந்தால்.....//////மலரும் நினைவுகளைக் கிளறி அவரை( நடராஜனை)புலம்ப வைத்து விட்டீர்களே????

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.