என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், மார்ச் 19, 2012

8 கழுகு-பற...பற...விமர்சனம்.....



அலிபாபா, கற்றது களவு...படத்திற்கு பின் கிருஷ்ணா நடிப்பில்(?) வெளிவந்திருக்கும் படம் கழுகு.

கதை என்று பார்த்தால்....மலையிலிருந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் உடலை மீட்டு எடுத்து வருபவர்களின் சிரமத்தை விளக்கும்  கதை.

மிக அருமையான கதைக்களம்தான். ஆனால், இவர்கள் சொன்ன விதத்தில்தான் அழுத்தமில்லை. கிருஷ்ணா, கருணாஸ், தம்பி ராமையா, மற்றும் ஒரு ஊமை நபர் ஆகிய நால்வரணிதான் உடலை மீட்டுவரும் வேலையை செய்கிறது. ஆனால், அந்த வேலையையும் ஓரிரு முறை செய்ததோடு சரி....மற்ற நேரம் முழுக்க கட்டுக்கட்டாய் புகைத்துக்கொண்டும், பாட்டில் பாட்டிலாய் குடித்துக்கொண்டும் திரிகிறார்கள் இவர்கள்.

தற்கொலை செய்துகொண்ட பிந்துமாதவியின் தங்கையின் உடலை கிருஷ்ணா மீட்டுக்கொண்டு வரும்போது, கிருஷ்ணா மீது காதல்வருகிறது பிந்துமாதவிக்கு....காசுக்காக வேலை செய்யும் அதுவும் கறாராக இருக்கும் கிருஷ்ணா மீது திடீரென்று ஒரு ஈர்ப்பு காதல்  வருவதற்கான
வருவதற்கான காரணத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

பிந்துமாதவிக்கு நடிப்பதற்கு ஸ்கோப் இருந்தும் வழக்கமான தமிழ் பட கதாநாயகிக்கென இருக்கும் இலக்கணத்தை மீறவில்லை. ஆம்....கொஞ்சம் அழுவது, கொஞ்சம் சிரிப்பது, கொஞ்சம் பார்ப்பது, இரு பாடல்கள் என்று தலையை காட்டிவிட்டு செத்துப்போகிறார்.

ஜெயப்பிரகாஷ் அவ்வப்போது மர்ம மனிதன்போல் வந்து தலையை காட்டிவிட்டு போகிறார்.

கேமரா இந்தப்படத்திற்கு ப்ளஸ்என்றே சொல்லலாம்.இன்றைய காதலை அப்பட்டமாக சொல்லும், ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் காதல்,ஆத்தாடி மனசுதான்  போன்ற  பாடல்கள் மனதில் நின்றாலும் மற்றபடி பெரிதாக சோபிக்கவில்லை யுவன்.

மொத்தத்தில் கழுகு ஒரு ஊர்க்குருவி.



Post Comment

இதையும் படிக்கலாமே:


8 கருத்துகள்:

  1. பெயரில்லா19 மார்., 2012, 5:43:00 PM

    படம் ஓடுமா?

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு எளிமையாக சுருக்கமாக விமர்சனமா...

    கலக்குங்க தல..!

    பதிலளிநீக்கு
  3. அப்பாடா... கதையை சொல்லாமல் விமர்சனம் எழுதியதற்கு முதலில் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா20 மார்., 2012, 4:04:00 AM

    சிறகுகள் சீக்கிரம் ஓய்வைத்தேடும் போல...

    பதிலளிநீக்கு
  5. எல்லாரும் தான் மொக்க படம்ன்னு சொல்லிட்டாங்களே.. நீங்களுமா :)

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.