என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், மார்ச் 12, 2012

10 முலாயமின் தியாகமும், கலைஞரின் பிடிவாதமும்....




முலாயம் சிங் தன் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது குறித்து?.....

2014-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க.,அல்லாத மூன்றாவது அணியை அமைத்து,தானே பிரதமர் ஆகவும் ஆசைப்படலாம்.அதற்கு ஏதுவாக இப்போது முதல்வர் பதவியை மறுத்திருக்கலாம் என்பது என் கருத்து. அரசியல்வாதிகள் ஒரு விஷயத்தில் விட்டுக்கொடுத்தால் அதற்கு பின் ஒரு பெரிய கணக்கு இருக்கும்.

================================

முலாயமின் வழியை கலைஞரும் பின்பற்றலாமே?


பின்பற்றலாம்தான். ஆனால், முலாயமின் மகனும், தற்போது உ.பி.முதல்வராக பொறுப்பேற்கவிருக்கும் அகிலேஷின் தம்பியுமான சிவ்பால்சிங் யாதவ், தனது அண்ணன் முதல்வராவதை பெரிதாக எதிர்க்கவில்லை. அதைப்போல் சமாஜ்வாதியின் மூத தலைவர் அசம்கானையும் சரிகட்டிவிட்டார்கள். அகிலேஷை எதிர்த்த அமர்சிங்கும் இப்போது கட்சியில் இல்லை. அதனால் அகிலேஷின் ரூட் க்ளியர். ஆனால், இங்கோ....ஸ்டாலின் அடுத்த தலைவராவதற்கு அழகிரி, கனிமொழி என்று குடும்ப உறுப்பினர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களில் சிலரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அத்தனை பேரையும் சமாளித்து சரி கட்டுவதென்பது பெரிய சவால். அந்த சவால் கலைஞருக்கு முன் இப்போது இருக்கிறது.

==========================

அகிலேஷ்தான் மிக இளம் வயது முதல்வரா?

ஆம்....உ.பி.யில் மாயாவதி 39 வயதிலும், அஸ்ஸாமில் பிரபல்ல குமார் மகந்தா 39 வயதிலும், காஷ்மீரில் உமர் அப்துல்லாஹ் 39 வயதிலும் முதல்வராக இருந்துள்ளார்கள். ஆனால், 38 வயதில் ஒருவர் இந்தியாவில் இருக்கும் மா நிலங்களில் ஒன்றில் முதல்வராவது இதுதான் முதல்முறை.



Post Comment

இதையும் படிக்கலாமே:


10 கருத்துகள்:

  1. //முலாயம் சிங் தன் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது குறித்து?.....

    2014-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க.,அல்லாத மூன்றாவது அணியை அமைத்து,தானே பிரதமர் ஆகவும் ஆசைப்படலாம்.அதற்கு ஏதுவாக இப்போது முதல்வர் பதவியை மறுத்திருக்கலாம் என்பது என் கருத்து. அரசியல்வாதிகள் ஒரு விஷயத்தில் விட்டுக்கொடுத்தால் அதற்கு பின் ஒரு பெரிய கணக்கு இருக்கும்.////

    அரசியலைக் கரைத்துக் குடித்துவிட்டாய் போ...
    க.க.க.போ!!!!

    # பா.ஜ.க. மற்றும் கூட்டணிகள் + முலாயம்+ மம்தா+ கம்யூனிஸ்ட்ஸ் அப்புடின்னு பட்சி சொல்லுது...

    பதிலளிநீக்கு
  2. /38 வயதில் ஒருவர் இந்தியாவில் இருக்கும் மா நிலங்களில் ஒன்றில் முதல்வராவது இதுதான் முதல்முறை
    //

    அடுத்த முதல்வர் நான்தான்

    பதிலளிநீக்கு
  3. முலாயமின் செய்கை எல்லோரையும் கலைஞர் பக்கம் பார்வையை திருப்பி விட்டது உண்மைதான். ஆனால் எல்லோரும் செய்வதையே செய்வது அவர் ஸ்டைல் இல்லையே?

    பதிலளிநீக்கு
  4. அண்ணே முலாயமின் மகன் அவர் கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்..கலைஞரின் மகன்கள் ?!

    பதிலளிநீக்கு
  5. ஹிந்தியாவே முடிவு செய்.
    தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

    -------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு.‘அகிலேஷின் தம்பியுமான சிவ்பால்சிங் யாதவ்’ என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். உண்மையில் சிவ்பால்சிங் முலாயமின் தம்பி அதாவது அகிலேஷுக்கு சித்தப்பா. அதனால்தான் அங்கு சகோதர பிரச்சினை எழவில்லை என எண்ணுகிறேன். அப்படியும் கூட அகிலேஷ் முதல்வர் ஆவதை கட்சியில் மூத்த உறுப்பினர்கள் ஆன சிவ்பால்சிங்கும்,அஸம் கானும் ஆரம்பத்தில் எதிர்த்தார்கள். முலாயம் அவர்களிடம் பேசி அகிலேஷை முதல்வர் ஆக்க சமாதிக்க வைத்ததாக பேச்சு.

    பதிலளிநீக்கு
  7. அப்படியே களிங்கர்ஜீக்கு ஒரு ஆலோசனை கொடுங்களேன்.......

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.