என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, மார்ச் 03, 2012

23 முடியரசுக்கும் குடியரசுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான்....அது என்ன?...

சில ட்வீட்கள்......


கூட்டணிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சியது அதிமுக, ஆதாரம் இருக்கிறது- பிரேமலதா # அடக்கிவாசிங்க,சசிகலாவை பார்த்துமா உங்களுக்கு புத்திவரல

============

ஜெனரேட்டர் கொடுத்த 'அம்மா' வாழ்க... சரத்குமார் # ஏதுமே கொடுக்காட்டியும் வாழ்கன்னு நீங்க சொல்லிட்டுத்தான் இருக்கனும்...வேற வழியே இல்லை.

=============

எனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம்..அழகான பெண், அண்ணா என்றழைப்பதுதான்....# என்னையல்ல..என் நண்பனை...

==============
ஒரு ஓட்டுக்கு என்ன மதிப்பு?...இப்போதுதான் தெரிகிறது#சங்கரன்கோவில் தொகுதி வாசிகள்.

============

குடியரசு-முடியரசு என்ன வித்தியாசம்?
மக்களிடம் ஓட்டு வாங்கி மகன்களுக்கு பதவி கொடுப்பது குடியரசு....
மக்களிடம் ஓட்டு வாங்காமல் மகனுக்கு பதவி கொடுப்பது முடியரசு


Post Comment

இதையும் படிக்கலாமே:


23 கருத்துகள்:

  1. /* எனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம்..அழகான ஃபிகர் அண்ணா என்றழைப்பதுதான்....என்னையல்ல..என் நண்பனை.
    */
    அப்படி யாரும் இதுவரை என்னை அண்ணா என்று கூப்பிட வில்லையே??? ஏன் பொய் சொல்ற????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சே...சே...பொதுவுல சொல்லமுடியுமா அந்த ரகசியத்தை?

      நீக்கு
  2. /* குடியரசு-முடியரசு என்ன வித்தியாசம்?
    மக்களிடம் ஓட்டு வாங்கி மகன்களுக்கு பதவி கொடுப்பது குடியரசு....
    மக்களிடம் ஓட்டு வாங்காமல் மகனுக்கு பதவி கொடுப்பது முடியரசு
    */

    பதிவுலகில்.. நீ ஒரு வல்லரசு.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வல்லரசுன்னா... நீ ஒரு வாஞ்சிநாதன், இன்னும் கொஞ்ச நேரத்தில் சிவா வருவாப்ல....எனக்காக புதுசா ஒரு பேரோட....

      நீக்கு
  3. //குடியரசு-முடியரசு என்ன வித்தியாசம்?
    மக்களிடம் ஓட்டு வாங்கி மகன்களுக்கு பதவி கொடுப்பது குடியரசு....
    மக்களிடம் ஓட்டு வாங்காமல் மகனுக்கு பதவி கொடுப்பது முடியரசு///

    வாழும் வள்ளுவரை நேரடியாகத் தாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

    #யோவ், இது தமிழ்க் குடிதாங்கியப்பத்தின்னு சொல்லி தப்பிக்கப் பார்க்காத.. ஆங்...

    பதிலளிநீக்கு
  4. அய்யா அடுத்தவங்க பதிவுக்கு வராம இவனுங்க லிங்க் மட்டும் கொடுத்துட்டு போற நாதாறிங்கள என்ன பன்னலாம்...ஹெல்ப் பிளீஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லிங்க் கொடுக்கறவங்களை ஒன்னும் பன்னமுடியாது.அந்த லிங்க் வழியா போறதும் போகாம இருக்கதும் உங்க இஷ்டம். ஹி...ஹி...

      நீக்கு
  5. ஸலாம் சகோ.கஸாலி,
    ///குடியரசு-முடியரசு என்ன வித்தியாசம்?///---கு ..... மு .... இதுதான்யா வித்தியாசம்..... என்று கடைசியில் பல்பு கொடுப்பீர்கள் என்று பார்த்தால்.... ம்ம்ம்ம்ம்ம்...... ரியல்ல்ல்ல்ல்ல்லி சூப்பர்ப்ப்ப்ப் சகோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சலாம் சகோ....வருகைக்கு நன்றி...
      ஆஹா..இந்த யோசனை நமக்கு தோணாமல் போச்சே...

      நீக்கு
  6. முடியரசு = நேரு குடும்பம்

    குடியரசு : கலைஞர் குடும்பம்?!

    பதிலளிநீக்கு
  7. ஓட்டோட மதிப்பு சங்கரன் கோவில் மக்களுக்கு இப்போது புரியும். கரண்ட்னால ரொம்ப அடிபட்டு இருக்காங்களே. சுரணை வருதான்னு பார்க்கலாம். அத்தனை ட்வீட்ஸ்-ம் அருமை சார்.

    பதிலளிநீக்கு
  8. /* எனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம்..அழகான ஃபிகர் அண்ணா என்றழைப்பதுதான்....என்னையல்ல..என் நண்பனை.
    */
    அப்படி யாரும் இதுவரை என்னை அண்ணா என்று கூப்பிட வில்லையே??? ஏன் பொய் சொல்ற????//

    வணக்கம் சிராஜ் அண்ணா. எப்படி இருக்கிறீர்கள் அண்ணா?

    பதிலளிநீக்கு
  9. உங்களை அண்ணா என்று சொல்ல நான் உள்ளேன். கவலை ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா என்று சொன்னாலும், கலைஞர் என்று சொன்னாலும் சிராஜ் கவலைப்பட மாட்டான்.

      நீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.