என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், மார்ச் 06, 2012

36 குடிகெடுக்கும் டாஸ்மாக்- அரசுக்கு சில யோசனைகள்....



Tamil nadu State Marketing Corporation....
தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரமான TASMAC-க்கின் விரிவாக்கம்தான் மேலே பார்த்தது.
இந்த டாஸ்மாக்கின் தாக்கம் எவ்வளவு வீரியமானது என்று கடந்த வாரம் வந்த ஒரு செய்தியை பார்ப்போம்...
ஒன்பதாம் வகுப்பு மணவன் ஒருவன் குடிப்பதற்காக ஒரு பீரை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட குலுக்கலில் அந்த பீர் பாட்டில் திடீரென வெடித்ததில், அந்த மாணவன் உயிரிழந்தான். இந்த செய்தியை படித்ததும் பகீரென்று இருந்தது.

இன்று சிறுவர்கள், பெரியர்கள் என்று வயது வித்தியாசமில்லாமல்,அனேகமாக எல்லோர் கையில் பீர், பிராந்தி, விஸ்கி என்று ஏதோ ஒன்று நீக்கமற நிறைந்திருக்கிறது. குடிப்பது தவறென்ற குற்ற உணர்ச்சி துளியும் இல்லாமல் குடிக்கும் அளவிற்கு மாணவர்களையும் மாற்றி வைத்திருக்கிறது நம் சமூகம்.
யார் செத்தால் என்ன? எவன் குடி கெட்டாலென்ன? நமக்கு கஜானா நிறைந்தால் சரிதான் என்று வாய்மூடி மௌனமாக இருக்கிறது அரசு.

மற்றவர்கள் குடிப்பதை நாம் தடுக்கவோ, திருத்தவோ முடியாது. ஓரளவு சொல்லத்தான் முடியும். அதையும் மீறி குடிப்பேன் என்று அடம்பிடிப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்? அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு.

காங்கிரஸ் காலத்தில் குடிப்பவர்களுக்கு பர்மிட் வழங்கப்பட்டு வந்தது. குடிப்பவரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த பர்மிட் இருக்கும். அப்படி வழங்கப்படும் பர்மிட்டில் ஒருவர் குடிக்கும் அளவு குறிக்கப்பட்டிருக்கும். அந்த அளவை மீறி சரக்கு வாங்க முடியாது. தேவையென்றால், தகுந்த காரணங்கள் கூறி இன்னொரு பர்மிட் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்.

ஆனால், இப்போதோ... வயது வரம்பில்லாமல் எல்லோருக்கும் சரக்கு வழங்கப்படுகிறது. காசு இருந்தால் போதும் யாரும் குடிக்கலாம் என்ற நிலையை மாற்றி அரசு சில விதிமுறைகளை வகுக்கவேண்டும். குடிப்பவர்களுக்கு வயது வரம்புகளை அமல் படுத்த வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் தான் சரக்கு விற்கவேண்டும், சிறுவர்களுக்கு /மாணவர்களுக்கு விற்கக்கூடாது என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு கட்டளையிட வேண்டும் அரசு. அதையும் மீறி சிறுவர்கள்/ மாணவர்களுக்கு விற்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்.


இப்படி ஏதாவது செய்தால் தான் வருங்காலத்தில் மாணவர்கள் குடியினால் சீரழிவதை ஓரளவாவது தடுக்கமுடியும்.

டாஸ்மாக் ஊழியர்கள் கவனத்திற்கு.....
உங்களிடம் சரக்கு வாங்கும் மாணவர்களை/ சிறுவர்களை பார்க்கும்போது, உங்கள் வீட்டிலிருக்கும் உங்கள் மகனையோ, தம்பியையோ நினைவில் நிறுத்துங்கள். சரக்கு கொடுக்காதீர்கள்.

அதையும் மீறி கேட்டால், அவர்களின் முகவரியையும், வீட்டு போன் நம்பரையும் வாங்கிவைத்து கொண்டு, வீட்டில் சொல்லிவிடுவதாக மிரட்டுங்கள். நீங்கள் இப்படி ஏதாவது செய்யும் பட்சத்தில் அவர்கள் குடிக்காமல் திரும்பும் சாத்தியம் உண்டு.



Post Comment

இதையும் படிக்கலாமே:


36 கருத்துகள்:

  1. //..டாஸ்மாக் ஊழியர்கள் கவனத்திற்கு..... //

    நீங்க சொல்லுற மாதிரி நடக்காது...
    அதுக்கு பதில்...
    பள்ளி மாணவர் வந்து பியர் பிராந்தி வாங்கின... வீட்டில் சொல்லிடுவேன்னு மிரட்டி அதிக விலைக்கு விற்பது வேண்ண நடக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டதுதான் இது..

      நீக்கு
  2. பெயரில்லா6 மார்., 2012, 1:11:00 PM

    வினோத் குமார் சொன்ன கருத்துதான் யதார்த்தம். தன் வேலைக்கு உலை வைத்து கொள்ள எந்த ஊழியரும் விரும்ப மாட்டார். இதற்கு அரசாங்கம் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் டாஸ்மாக்கே அரசுக்கடை என்பதால் அதுவும் பணால்தான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சிவாஜி.....
      ஆனால், டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொஞ்சம் மனசாட்சி இருந்தாலே போதும். மாற்றத்தை கொண்டுவந்து விடலாம்.

      நீக்கு
    2. மனசாட்சி உள்ளவர்கள் டாஸ்மாக் கடையில் வேலைக்கு சேருவார்களா? அரசுக்கு மட்டுமல்ல...அதில் வேலைக்கு சேருவோர்க்கும் உங்களது இந்த கருத்து பொருந்தும் // யார் செத்தால் என்ன? எவன் குடி கெட்டாலென்ன? நமக்கு கஜானா நிறைந்தால் சரிதான்//

      நீக்கு
  3. /* அதையும் மீறி கேட்டால், அவர்களின் முகவரியையும், வீட்டு போன் நம்பரையும் வாங்கிவைத்து கொண்டு, வீட்டில் சொல்லிவிடுவதாக மிரட்டுங்கள். நீங்கள் இப்படி ஏதாவது செய்யும் பட்சத்தில் அவர்கள் குடிக்காமல் திரும்பும் சாத்தியம் உண்டு. */

    கசாலி நானா,

    நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க???? இப்ப உள்ள பசங்கல்லாம் செம உசாரு. தனக்கு பிடிக்காதவன் அட்ரஸ் போன் நம்பர் கொடுத்துட்டு எதிரிய மாட்டிவிட்ட சந்தோசத்தில ஒரு குவாட்டர் extraaaaaa வாங்கிட்டு போயிருவான்.

    பதிலளிநீக்கு
  4. இந்த வெளங்காதவன் எங்க போனாலும் smiley போடறாரே... வெளங்குவாரா இந்த ஆளு????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட...சாபமெல்லாம் கொடுக்காதே.அவரு கம்ப்யூட்டரில் ஸ்மைலியை தவிர வேற பட்டன் வேலை செய்யாதாம்.

      நீக்கு
  5. நல்ல யோசனைதான்.... முதலில் ஒரு வயது வரம்பயாவது அரசு நியமிக்க வேண்டும்...டாஸ்மாக்கில் வாங்குவதற்கு

    பதிலளிநீக்கு
  6. //மாணவர்களையும் மாற்றி வைத்திருக்கிறது நம் சமூகம்.//

    சமூகமா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்...சமூகம், சமுதாயம், நாடு, மாநிலம் எல்லாம்.

      நீக்கு
  7. நல்ல யோசனைதான்.

    //யார் செத்தால் என்ன? எவன் குடி கெட்டாலென்ன? நமக்கு கஜானா நிறைந்தால் சரிதான் என்று வாய்மூடி மௌனமாக இருக்கிறது அரசு.//

    இந்த நிலை இருக்கும் போது.....செவிடன் காதில் ஊதும் சங்கு.

    பதிலளிநீக்கு
  8. அருமையான விழிப்புணர்வுப் பதிவு. அனைவரும் வாசித்து பகிர வேண்டிய செய்தி. அரசுக்கும் டாஸ்மாக் ஊழியருக்கும் வழங்கிய அறிவுரைகள் அருமை. கடைப்பிடிப்பார்களா? அல்லது செவிடன் காதில் ஊதிய சங்காய் போகுமா? தெரியவில்லை. அருமை கஸாலி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செவிடன் காதில் ஊதிய சங்காய்தான் போய்விடும் போல

      நீக்கு
  9. TASMAC கின் விரிவாக்கம் இருக்கே. அட...அட...கொடுங்க சார் உங்க கையை. டைப் பண்ணின விரல்களுக்கு தங்கக் காப்பே போடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாஸ்மாக்கின் விரிவாக்கம் முன்பு ஒரு தடவை விகடனில் படித்து மனதில் ஏற்றியது. அப்புறம் தங்கமெல்லாம் ஆபரணமாக அணியும் பழக்கம் எனக்கில்லை. ஆகவே, பணமாக அனுப்பிவிடவும்...ஹி...ஹி...அதுசரி...காப்பு போடலாம் என்றதும் எனக்கு ஒரு டவுட்டு... நீங்கள் காவல்துறை சம்பந்தமான வேலையில் இருப்பதால் வேறெந்த காப்பும் இல்லையே?

      நீக்கு
  10. Ennathai solla!

    Arasu vikkuthu-
    Kudimakan saavuraan!

    பதிலளிநீக்கு
  11. Ennathai solla!

    Arasu vikkuthu-
    Kudimakan saavuraan!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களை காக்கவேண்டிய அரசே...குடிகாரர்களாக மாற்றுவது கேவலமான விஷயம்.

      நீக்கு
  12. விழிப்புணர்வுப் பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான விழிப்புணர்வுப் பதிவு ! இதனால் எத்தனை குடும்பம் வீணாய் போகிறது சார் ! அதை விடுங்கள் ! நம்ம பதிவுலகில் எத்தனை உத்தமர்கள் ? தனி பதிவு விரைவில் வரும் ! நன்றி சார் !

    பதிலளிநீக்கு
  14. நல்ல பல பயனுள்ள கருத்துகள்..!!! பகிர்வுக்கு நன்றி கஸாலி..!!

    பதிலளிநீக்கு
  15. Good Suggestion ! Why dont u pass it to cmcell@tn.nic.in?

    பதிலளிநீக்கு
  16. தங்களின் கட்டுரையில் சிறுவர்களுக்கு டாஸ்மாக் பணியாளர்கள் மது வழங்கக்கூடாது என கூறியுள்ளீர்கள்.எந்த டாஸ்மாக் பணியாளர்களும் சிறுவர்களுக்கு மது விற்பனை செய்வதை விரும்பி செய்வதில்லை.மதுரையில் கூலி கொலையாளர்கள் பெரும்பான்மையாளர்கள் சிறுவர்களே.எனவே மது தரமறுத்தால் கொலைசெய்வர்.இவ்வாறு உயிர் பயத்துடன் பணியாற்றி வருக்கின்றோம்.எங்களை மர்மயோகி என்பவர் டாஸ்மாக்கில் மனசாட்சியுள்ளவர்கள் பணியாற்றுவார்களா? என்று விமர்சனத்தில் கூறியுள்ளார் அதாவது 35000 டாஸ்மாக் பணியாளர்களும் மனசாட்சியற்றவர்கள் என கூறிஉள்ளார்.இதை டாஸ்மாக் பணியாளர்கள் சார்ப்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.இப்படிக்குhttp://tasmacnews.blogspot.com.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.