என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், மார்ச் 05, 2012

19 சங்கரன்கோவிலில் வைகோவின் நெத்தியடியும், காப்பியடித்த மருத்துவர்களும்...

சங்கரன்கோவிலில் வைகோவின் நெத்தியடி.....

32 அமைச்சர்கள் சங்கரன்கோவிலில் முற்றுகையிட்டு தேர்தல் பணியை மேற்கொள்ளவிருக்கிறார்கள். தானே புயலில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள், அப்போது எத்தனை அமைச்சர்கள் அங்குபோய் முகாமிட்டு நிவாரன பணியை மேற்கொண்டார்கள்? முதலமைச்சரான ஜெயலலிதாவே பத்து நிமிடம் மட்டுமே சிலவு செய்து தானே புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். இப்போது சங்கரன்கோவிலுக்கே தலைமைச்செயலகத்தையே மாற்றியிருக்கிறார்கள்

சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ கேட்ட நெத்தியடி கேள்விதான் மேலே படித்தது. என்ன செய்வது? தானே புயல் பாதித்த பகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவில்லையே?

====================




சமீபத்தில் ஒரு செய்தி கண்ணில் பட்டது. அதைப்பற்றி அப்போதே எழுதவேண்டும் என்று நினைத்தேன். அதாவது....
எந்திரன் படத்தில் ஐஸ்வர்யாராய் பரீட்சையில் காப்பியடிப்பதற்கு சிட்டி ரஜினி ப்ளூடூத் மூலம் உதவிசெய்வார். இப்போது அதே பாணியில் பிட் அடித்து சில மணவர்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். மாட்டியவர்கள் யாரும் சாதாரணமானவர்கள் இல்லை. அனைவரும் உயிரை காப்பாற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்.
இப்படி காப்பியடித்து பாஸ் செய்யும் மருத்துவர்கள் எப்படி நோயாளிக்கு நல்ல முறையில் சிகிட்சையளிப்பார்கள், அறுவை சிகிட்சை செய்வார்கள்?
அப்போதும் காதில் ப்ளூடூத்தை மாட்டி, யாரிடமாவது கேட்டுக்கேட்டு மருத்துவம் செய்தால் நோயாளிகளின் கதி?....
என்னவோ போங்க...

=====================


Post Comment

இதையும் படிக்கலாமே:


19 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    வை.கோ நெத்தியடியாய் கேட்டிருக்கின்றார்.

    //சிட்டி ரஜினி ப்ளூடூத் மூலம் உதவிசெய்வார்//

    சகோ அது ப்ளுடூத் இல்லை. அதனை zigbee என்பார்கள். ப்ளுடூத் போன்றது தான் என்றாலும் இந்த தொழில்நுட்பம் மூலமாக 400 மீட்டர்கள் வரை தகவல்கள் பரிமாற்றம் செய்யலாம். ஆனால் ப்ளுடூத் மூலமாக சுமார் பத்து மீட்டர் வரை மட்டுமே தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும்.

    //மாட்டியவர்கள் யாரும் சாதாரணமானவர்கள் இல்லை. அனைவரும் உயிரை காப்பாற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்.//

    சுத்தம்..வேறென்னத்த சொல்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சலாம் சகோ....
      தங்கள் உடனடி வருகைக்கும் திருத்தத்திற்கும் நன்றி....

      நீக்கு
  2. நவீனங்களை நல்லதை விட தவறு செய்வதற்கே பயன்படுத்துகிறார்கள்....அதுவும் மருத்துவ மாணவர்கள்....பயமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன் கூற்றில் நூறு சதவீதம் உண்மை இருக்கிறது

      நீக்கு
  3. //நெத்தியடி கேள்விதான்//

    ஜெயித்து விட்டு பதில் தாரோம். ஒக்..கே. ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயித்து விடுவீர்கள்...ஆனால், பதில் தருவீர்களா?

      நீக்கு
  4. பணம் கொடுத்து மருத்துவம் படிக்க வந்தால் இது தான் நிலைமை..

    பதிலளிநீக்கு
  5. சரியான கேள்வி ஆனால் இதுக்கு யாரும் பதில் சொல்ல மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
  6. நண்பர் ரஹீம் கஸ்ஸாலி ,

    இந்தியாவின் நம்பர் ஒன் தேச துரோகி வைக்கோ என்பவனை எப்போதும் உயர்த்தி எழுதாதீர்..அவன் இந்தியாவில் ஓட்டுப்பிச்சை எடுத்து, பயங்கரவாதிகள் விடுதலைப்புலிகளின் கைக்கூலியாக செயல்படுபவன்..கோயமுத்தூர் சிறையில் எத்தனையோ அப்பாவி முஸ்லீம்கள் குற்றப்பத்திரிக்கைகூட கொடுக்கப்படாமல் ஜாமீனில் வெளிவரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்க, இந்தியாவில் படுபாதக செயல்கல்புரிந்த, கீழ்கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று பல கோர்ட்களில் குற்றம் நிரூபிக்கபட்ட பயங்கரவாத விடுதலைப்புலிகளுக்காக ஓலமிடுபவன் இந்த தேச துரோகி.. தயவு செய்து இவனது செய்திகளை புறக்கணியுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வைகோவை ஆதரித்து எழுதப்பட்டதல்ல..வைகோவின் கருத்தை ஆதரித்து எழுதப்பட்டது.

      நீக்கு
  7. மருத்துவர்கள் பற்றி யோசிக்க வேண்டிய விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள். இதை போன்ற விஷயங்களை ஒழிக்க வேண்டும் என்றால் இதை முதலில் சினிமாவில் காண்பிக்கும் போதே தடை விதித்திருக்க வேண்டும்.

    தலையை விட்டுவிட்டு வாலை பிடிப்பது நமக்கு ஒன்றும் புதிதில்லையே.

    சினிமாவிற்கு தனிக்கை குழு என்று இருப்பதையே மக்களால் நம்ப முடியவில்லை, அந்தளவிற்கு மக்களை தீய வழியின் பக்கம் கொண்டு செல்லும் ஒரு வழிகாட்டியாகவே செயல்படுகிறது சினிமாக்கள்.

    சினிமாவை பார்த்து கொலை செய்த மாணவன், சினிமாவை பார்த்து தோழியையே சீரழித்த நண்பர்கள், காப்பி அடித்த மாணவர்கள் என்று இன்னும் பட்டியலை அடுக்கி கொண்டே போகலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சமூகத்தில் நடப்பதைதான் சினிமா பிரதிபலிக்கிறது

      நீக்கு
  8. வைகோ கேட்டது சரியான கேள்வி....

    ப்ளூடூத் மூலம் ஆபரேஷன் செய்பவர்கள், நோயாளி மல்லாக்க படுத்திருக்கிறாரா இல்லை குப்புற படுத்திருக்கிறாரா என்று செக் செய்வார்களா?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.