என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, மார்ச் 02, 2012

18 மின்வெட்டை சமாளிக்க சுலபமான வழிகளும்,ஜெயலலிதாவின் அறிக்கையும்....


சூரியன் தன் உக்கிரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. நாளுக்கு நாள் மின்வெட்டின் நேரம்வேறு அதிகரித்துக்கொண்டே போகிறது. இரவு பகல் என்று பாரபட்சமில்லாமல் மின்தடை ஏற்படுகிறது. இந்த நேரத்தில் இந்த பிரச்சினையை சமாளிக்க என்ன செய்யலாம்?

மின் விளக்குகளுக்கு பதிலாக மெழுகுவர்த்திகளை வாங்கி ஆங்காங்கே வைத்துவிடுங்கள். திடீரென்று மின் தடை ஏற்பட்டால் சுலபமாக சமாளிக்கலாம்.

மின்விசிறிக்கு பதிலாக பனைஓலை விசிறியை கையோடு வைத்துக்கொள்ளுங்கள். ரொம்பவும் வியர்க்கிறதா? விசிறியில் கொஞ்சம் குளிர்ந்த நீரை தெளித்து பின் விசிறுங்கள். குளுகுளுவென்று காற்று வரும். ஏர்கூலரில் இருப்பதுபோல் இருக்கும்.

=====================



ஒரு ஜோக்....

ஏப்பா...அவன் ரெண்டுமாசத்துக்கு முன்னாடி வரை ஏழையாத்தானே இருந்தான். இப்போ எப்படி திடீர்ன்னு பணக்காரன் ஆனான்?

வேறென்ன...எல்லாம் மெழுகுவர்த்தி விற்றுத்தான்.

==========================

ஒரு ட்வீட்...

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் எடிசன் நினைவு நாளன்று ஒரு நிமிடம் மின்சாரத்தை நிறுத்துவார்களாம்...
ஆனால், தமிழ் நாட்டில் மட்டும் ஒவ்வொரு நாளும் 10 மணி நேரம் எடிசன் நினைவு நாள்தான்...

====================



அதிகமாக மின் விளக்குகளை பயன்படுத்துவதாலும், மின்சாரம் தயாரிக்க எரிக்கப்படும் அனுவிலிருந்து அதிக வெப்பம் வெளியேறுவதாலும்,வளி மண்டலம் வெப்பமடைந்து விடுகிறதாம்.... ...அதனால், மின்வெட்டை அதிக நேரம் அமல் படுத்தினால்....காற்று வெப்பமடையாமல் குளுகுளுவென்று இருக்கும்..ஏதோ இந்த பூமிக்கு நம்மாலான உதவி...

ஜெயலலிதாவிடமிருந்து இப்படியும் அறிக்கை வந்தாலும் வரலாம்...


 ++++++++++++++++++++++++++++++++++++++++


Post Comment

இதையும் படிக்கலாமே:


18 கருத்துகள்:

  1. //சூரியன் தன் உக்கிரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது.//

    தி.மு.க. ஆதரவு பிரச்சாரம்? உங்க ரூட்டே தனிதான் தலைவா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோவ்....இம்சை அரசன் 2012-ஆம் புலிகேசி.... முடியல.....அழுதுடுவேன் சொல்லிட்டேன்

      நீக்கு
  2. mmmmmm -என்ன செய்றது - ஒண்ணூம் செய்ய முடியாது - 10 மணி நேரம் இன்னிக்கு வரைக்கும் - எப்பக் குறையுதுன்னு பாப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் குறையும் அய்யா... மின்வெட்டின் நேரமல்ல....மின்சாரம் கொடுக்கும் நேரம்

      நீக்கு
  3. salaam,

    //அதிகமாக மின் விளக்குகளை பயன்படுத்துவதாலும், மின்சாரம் தயாரிக்க எரிக்கப்படும் அனுவிலிருந்து அதிக வெப்பம் வெளியேறுவதாலும்,வளி மண்டலம் வெப்பமடைந்து விடுகிறதாம்.... ...அதனால், மின்வெட்டை அதிக நேரம் அமல் படுத்தினால்....காற்று வெப்பமடையாமல் குளுகுளுவென்று இருக்கும்..ஏதோ இந்த பூமிக்கு நம்மாலான உதவி...//

    ithu romba correcttaa irukkae... :) :)

    பதிலளிநீக்கு
  4. ஸ்டாலின் பிறந்த நாள் பரிசாக ஜெர்மன் ஜெனெரேட்டர் பரிசளித்த உங்களை கலைஞர் டி.வி. நிகழ்ச்சியில் பார்த்தேன். கலக்குங்க கஸாலி !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்னய்யா..ஜெனெரேட்டர்....பெரிய வெளி நாட்டு பென்ஸ் கார் லெவெல்ல ஏதாவது சொல்லக்கூடாதா?

      நீக்கு
  5. என்னதான் வீட்டில் ஏசி இருந்தாலும் விசி(விசிறி)வைத்து இருப்பவன்தான் புத்திசாலி....

    பதிலளிநீக்கு
  6. /*
    அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் எடிசன் நினைவு நாளன்று ஒரு நிமிடம் மின்சாரத்தை நிறுத்துவார்களாம்...
    ஆனால், தமிழ் நாட்டில் மட்டும் ஒவ்வொரு நாளும் 10 மணி நேரம் எடிசன் நினைவு நாள்தான்... */

    கஜாலி நானா,

    அமெரிக்காகாரன் கெடக்குறான் கஞ்சூஸ் பசங்க. நம்மாளுங்க எதையும் பிரம்மாண்டமாத்தான் கொண்டாடுவாங்க. அதான் 10 மணி நேரம். புரியுதா????
    ஹி..ஹி.ஹி..

    பதிலளிநீக்கு
  7. கசாலி,

    வணக்கம்,
    //அதிகமாக மின் விளக்குகளை பயன்படுத்துவதாலும், மின்சாரம் தயாரிக்க எரிக்கப்படும் அனுவிலிருந்து அதிக வெப்பம் வெளியேறுவதாலும்,வளி மண்டலம் வெப்பமடைந்து விடுகிறதாம்.... ...அதனால், மின்வெட்டை அதிக நேரம் அமல் படுத்தினால்....காற்று வெப்பமடையாமல் குளுகுளுவென்று இருக்கும்..ஏதோ இந்த பூமிக்கு நம்மாலான உதவி...//

    மின் வெட்டை சமாளிக்க நானும் கடந்த மாதம் ஒரு பதிவு போட்டேன் அதிலும் இது போல சொன்னது,

    உலகம் முழுக்க புவி வெப்பமாதல் தடுக்க 5 நிமிடம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வாங்க அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை ஆனால் தமிழக அரசு தினசரி 8 மணிநேரம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வதன் மூலம் புவி வெப்பமயமாதலை தடுக்க கடுமையாக போராடி வருகிறது என்று சொன்னால் மிகையல்ல!

    பதிலளிநீக்கு
  8. //அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் எடிசன் நினைவு நாளன்று ஒரு நிமிடம் மின்சாரத்தை நிறுத்துவார்களாம்...
    ஆனால், தமிழ் நாட்டில் மட்டும் ஒவ்வொரு நாளும் 10 மணி நேரம் எடிசன் நினைவு நாள்தான்...//

    - தூள் தலைவா! கலக்கல். அடுத்த பொதுத்தேர்தல் வாக்குறுதில வீட்டுக்கொரு ஜெனரேட்டர் கொடுத்து அசத்தப்போறாங்களாம் நம்ம கட்சிகள். வாழ்க ஜனநாயகம்!

    பதிலளிநீக்கு
  9. அதிகமாக மின் விளக்குகளை பயன்படுத்துவதாலும், மின்சாரம் தயாரிக்க எரிக்கப்படும் அனுவிலிருந்து அதிக வெப்பம் வெளியேறுவதாலும்,வளி மண்டலம் வெப்பமடைந்து விடுகிறதாம்.... ...அதனால், மின்வெட்டை அதிக நேரம் அமல் படுத்தினால்....காற்று வெப்பமடையாமல் குளுகுளுவென்று இருக்கும்..ஏதோ இந்த பூமிக்கு நம்மாலான உதவி.
    >>>
    இதுபோல ஒரு அறிக்கை அம்மாக்கிட்ட இருந்து வந்தாலும் ஆச்சர்யப்படுறாதுக்கில்லை சகோ

    பதிலளிநீக்கு
  10. ஸலாம் சகோ
    நல்ல பதிவு வாழ்த்துகள்
    மகுடத்திற்கு கொண்டுவந்தாச்சு

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.