என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, மார்ச் 23, 2012

12 இதை நீங்க அவசியம் படிச்சே ஆகனும்........



சமீபத்தில் என் நெருங்கிய நண்பன் ஒருவன் தன் குடும்பத்துடன் திருச்சியில் நடந்த பொருட்காட்சிக்கு சென்றிருந்த போது, அவன் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் சங்கிலையை தொலைத்துவிட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால் இனி அந்த செயின் நமக்கில்லை என்று விதியை நொந்தபடி ஊர் திரும்பிவிட்டான்.

காணாமல் போயிருந்த அந்த செயினை அன்று மாலை அதே பொருட்காட்சிக்கு சென்றிருந்த திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த காய்கறி வியாபாரி கண்டெடுத்திருக்கிறார். செயினை கண்டெடுத்ததோடு மட்டுமல்லாமல், அதை திருச்சி போலிசிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த செய்தி அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளிவந்தது.அதைப்படித்த என் நண்பன் அது தன் குழந்தையின் செயினாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்து, அதற்குரிய ஆதாரங்களுடன் போலிசாரை சந்தித்து அந்த செயினை திரும்பபெற்றான்.

நூறு ரூபாய் கண்டெடுத்தாலே  நாமே வைத்துக்கொள்வோமா வேண்டாமா என்ற மனப்போராட்டத்தில் இருக்கும் இக்காலத்தில், இரண்டு பவுன் செயினையே கண்டெடுத்தும் கொஞ்சம் கூட சபலத்திற்கு ஆளாகாமல், அதை போலிசாரிடம் ஒப்படைத்த அந்த காய்கறிக்கடைக்காரரின் நேர்மை பாராட்டுக்குரியது.


அவரின் நேர்மையை கலக்டர் பாராட்டியபோது...

=============================


டாஸ்மாக் பற்றி என்னதான் காட்டுக்கத்து கத்தினாலும், யார் காதிலும் அது விழுவதாக தெரியவில்லை. சமீபத்தில் கூட,இதுபற்றி நான் எழுதிய  குடிகெடுக்கும் டாஸ்மாக்- அரசுக்கு சில யோசனைகள்....என்ற கட்டுரை யூத்ஃபுல் விகடன் குட்பிளாக் பகுதியில் இடம் பிடித்திருந்தது. டாஸ்மாக்கின் கொடூரத்திற்கு மீண்டும் ஒரு சம்பவம்....

நேற்று சேலத்தில், மிதமிஞ்சிய போதையில் தண்டவாளத்தில் படுத்திருந்த இருவர் மீது சோதனை செய்யும் ரயிலின் எஞ்சின் ஏறியதில் ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றொருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்திருக்கிறார்கள். என்ன சொல்வதென்றே விளங்கவில்லை. டாஸ்மாக் என்றொரு அரக்கன் இன்னும் எத்தனை உயிர்களை கொன்று எத்தனை பேர் தாலியறுக்குமோ?....என்று தணியும் இந்த டாஸ்மாக்கின் கொலைவெறி?



Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. யாருன்னே அந்த நண்பர்...?நகையை எடுத்து கொடுத்த அந்த நாணயமான நல்லவருக்கு பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  2. ஸலாம் சகோ.கஸாலி,
    மானுடம் இன்னும் வாழ்கிறது என்ற மனதுக்கு தெம்பூட்டும் மகிழ்ச்சியான செய்தி.

    'கிடைத்தவரை லாபம்' என்று கீழே கிடந்த பொருளை கமுக்கமாக எடுத்து சென்று விடாமல் 'அதை உரியவரிடம் சேர்ப்பிக்க வேண்டும்' என்ற எண்ணம் மானுடத்துக்கு விதை தூவியது..!

    கண்டெடுத்த பொருளை காவல்துறை பெற்ற போது, 'சரி.. ஓகே போயிட்டு வாங்க நாங்க குடுத்துக்குவோம்' என்று... அதனை 'நைசாக அமுக்கிக்கொள்லாமல்', ஒப்படைத்தவரின் நேர்மையை கலெக்டரோடு காவல்துறை இணைந்து பாராட்டிய போது மீண்டும் துளிர்த்தது மானுடம்..!

    'நடிகையின் நாய் குட்டிபோட்டால், அது நியூஸ்... இதெல்லாம் ஒரு நியூஸா' என்று கருதாமல் எவ்வித வருவாயும் இல்லாத இந்த நியுசையும் ஃபோட்டோவுடன் பெரிதாக மாலைமலர் வெளியிட்டு மானுடத்துக்கு பப்ளிசிட்டி தந்தபோது வளர்ந்தது மானுடம்..!

    அப்படி ஒரு 'நல்ல தினசரியை' படிக்கும் பழக்கம் கொண்டவர் தங்கள் நண்பர் என்பதால்... நகை வாங்கிய ஆவணங்களை பாதுகாத்து வைக்கும் நல்ல பழக்கமும் அவரிடம் இருந்ததால்... காவல்நிலையம் சென்றார்.. நகையை பெற்றார்... வென்றது மானுடம்..!

    ஆக...
    இதிலிருந்து தெரிவது என்னவென்றால்...
    சமூகத்தில் மக்கள் நல்லதை மட்டுமே நாடினால் அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம்..!

    இந்த மானுடம் வென்றதை பதிவாக பகிர்ந்து அதை இன்னும் சிறப்பித்த உங்களுக்கு மிகவும் நன்றி சகோ..!

    பதிலளிநீக்கு
  3. இந்த மானுடம் வென்றதை பதிவாக பகிர்ந்து அதை இன்னும் சிறப்பித்த உங்களுக்கு மிகவும் நன்றி

    பதிலளிநீக்கு
  4. கங்கை இன்னும் வற்றி விடவில்லை!மேலும் பெருகட்டும் அவர் போன்றோர்

    பதிலளிநீக்கு
  5. அந்த வியாபாரி "குமார்" விற்பது வேண்டுமானால் 'காய்'ஆக இருக்கலாம், ஆனால் அவர் உள்ளம் 'கனி'ந்துள்ளது என்பதை இச்செயல் காட்டுகிறது.. பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

    -
    DREAMER

    பதிலளிநீக்கு
  6. அந்த நல்ல மனிதருக்கு பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  7. "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்றோ சொன்னது இன்றும் உண்மையாகுது.

    பதிலளிநீக்கு
  8. அந்த மாமனிதருக்கு யாவையும் நன்மையே உண்டாகும்!

    பதிலளிநீக்கு
  9. யாருன்னே அந்த நண்பர்...?நகையை எடுத்து கொடுத்த அந்த நாணயமான நல்லவருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. அந்த நல்ல மனிதருக்கு பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.