எதிரும் புதிருமாய் இருப்பதற்கு பெயர் பெற்றது அரசியல் களம்.ஒன்றாய் பழகிய கலைஞர்- எம்.ஜி.ஆரிலிருந்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த சோனியா-மேனகா வரை யாரையும் விட்டுவைப்பதில்லை இந்த அரசியல் விளையாட்டு.
இந்த எதிரும் புதிரும் அரசியலில் தமிழகத்தின் பங்கு நிறையவே இருக்கிறது, இருந்திருக்கிறது.
பெரியார் காலத்தில் திராவிடர் கழகத்தில் ஏற்பட்ட களகம் காரணமாக அறிஞர் அண்ணா விலகி திராவிட முன்னேற்றா கழகத்தை துவங்கியபோது கூடவே இருந்தவர் ஈ.வி.கே.சம்பத். இவர் பெரியாரின் உடன்பிறந்த அண்ணன் ஈ.வி.கிருஷ்ணசாமியின் மகன்.
சம்பத்தின் மனைவி சுலோச்சனா சம்பத் இப்போது அண்ணா.தி.மு.க.,விலும்
இவரது மகன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரசிலும், எதிரும் புதிருமாய் இருக்கிறார்கள். இவர்களின் இன்னோரு மகன் இனியன் சம்பத் காங்கிரசில் பணியாற்றினாலும் தீவிர அரசியலில் இல்லை. என் மகனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சுலோச்சனா சம்பத்தும், சுலோச்சனாவை என் தாயார் என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன் என்று இளங்கோவனும் பரஸ்பரம் திட்டிக்கொள்ளுமளவிற்கு இவர்களை அரசியல் பிரித்து வைத்திருக்கிறது.
============
இதைப்போல் தமிழக காங்கிரசில் தலைவராக இருந்த குமரி அனந்தன் அவர்களின் மகள் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச்செயளாலராக இருந்துவருகிறார். இவரின் சித்தப்பாதான் வசந்த்&கோ வசந்தகுமார். இவர் நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலைப்படாத குடும்பம் இவர்களுடையது.
===========
2009-ஆம் ஆண்டு கடலூர் நாடாளுமன்றத்தொகுதியில் அண்ணா.தி.மு.க.சார்பில் போட்டியிட்டவர் எம்.சி.சம்பத். இவரை எதிர்த்து போட்டியிட்ட எம்.சி.தாமோதரன் சம்பத்தின் உடன் பிறப்பு. இதில் தாமோதரன் 1991-ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராகவும், 1999-ஆம் ஆண்டு அண்ணா.தி.மு.க.,எம்.பி.யாகவும் பதவி வகித்தவர்.
சம்பத் 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தவர். சில பிரச்சினை காரணமாக தாமோதரன் அண்ணா.தி.மு.க.,விலிருந்து விலகி தே.மு.தி.க.,வில் இணைந்து விட்டார்.
இருவரும் தேர்தலில் எதிரும்புதிருமாக மோதியதில் வாக்குகள் பிரிந்து காங்கிரஸ் வேட்பாளர் அழகிரி வெற்றிபெற்றுவிட்டார்.
இவர்களின் குடும்பத்தையெல்லாம் மிஞ்சிய ஒரு அதிரடி குடும்பம் வரும் பதிவில்...........
Tweet |
பதிலளிநீக்குஉங்கள் நினைவாற்றலையும் அதைத் தொகுத்து வெளி
யிடும் பாங்கையும் கண்டு வியக்கிறேன்!யன்றி!
பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... (TM 4)
பதிலளிநீக்குஅண்ணே அந்த அதிரடி குடும்பம் பற்றி சீக்கிரம் சொல்லுங்கள்
பதிலளிநீக்குஅண்ணே அந்த அதிரடி குடும்பம் பற்றி சீக்கிரம் சொல்லுங்கள்
பதிலளிநீக்குசூப்பர்!
பதிலளிநீக்குஎதிரும் புதிருமாக காட்டிக்கொள்வார்கள்
பதிலளிநீக்குஅது தாமரைக்கனி குடும்பம்தானே
பதிலளிநீக்குதாமரைக்கனியை விட்டுட்டீங்களே!!
பதிலளிநீக்குஅடடா,,, அரசியல்ல அதிக ஈடுபாடு காட்டாததன் விளைவு... அடுத்து நீஙக சொல்லப் போற அதிரடிக் குடும்பம் எதுவாயிருக்கும்னு தலையைப் பிச்சுக்க வேண்டியிருக்கு தம்பி. இங்கே நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் ! ரகம். அருமை.
பதிலளிநீக்குவித்தியாசமான தொகுப்பு! சுவையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html
வித்தியாசமான அரசியல் பகிர்வு..! இதுதான் சிறப்பான் அரசியல் சாணக்கியத்தனம்..!
பதிலளிநீக்குபட்டுக்கோட்டை 'நகர தந்தை' என்று சொல்லப்படுபவர் சீனிவாசன்..!
இவர் பல பதவிகளில் இருந்த பக்கா காங்கிரஸ்காரர்..!
இவருக்கு மூன்று மகன்கள்..!
மூத்தவர் சீனி.பாஸ்கரன் முன்னாள் பட்டுக்கோட்டை அதிமுக எம் எல் ஏ..!
அடுத்தவர் சீனி.அண்ணாதுரை. அவர் முன்னாள் பட்டுக்கோட்டை திமுக சேர்மன்...!
அப்புறமாக இன்னொருவர் சீனி.பன்னீர்செல்வம்..!
/// ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலைப்படாத குடும்பம் இவர்களுடையது. ///----அது இவர்களுக்குத்தான் பொருந்தும்..!
போலிஸ் ஸ்டேஷன் வாசலில் வைத்து யாராலோ சீனி.பன்னீர்செல்வம் கொலை செய்யப்பட்டு விட்டார்..!
அப்போதுதான் பார்த்தேன்...
காங்கிரஸ்... திமுக... ஆதிமுக... இவர்களின் ஒற்றுமையை...!
அப்போது... சிலநாட்கள்... பட்டுக்கொட்டையில், ஒரு... ஈ... காக்கா... அசையலை....!
எனக்கு கட்சிகளின் நுண்ணரசியல் புரிந்தது..!
எதிர்பார்ப்பு...
பதிலளிநீக்குசுவாரசியமான தகவல்கள், நன்றி!
பதிலளிநீக்கு