என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012

43 இது நல்லாருக்கான்னு சொல்லிட்டு போங்க...


என் ட்வீட்டிலிருந்து சில உங்கள் பார்வைக்கு......


கலைஞர் கொண்டுவந்த எல்லா திட்டத்தையும் ரத்துசெய்த ஜெ., கைவைக்காத ஒரே திட்டம் மதுவிலக்கு திட்டம்தான்.

-----------------------------


சென்னையில் காலரா இல்லை- மேயர் துரைசாமி# அண்ணே இல்லே...இல்லேன்னு சொல்றதுக்கு காலராங்கறது கரண்ட் இல்லேண்ணே...அது ஒரு வியாதி

-------------------------------


எங்களை எதிர்கட்சியாக மதிப்பதில்லை ஜெயலலிதா- விஜயகாந்த்# சரி விடுங்க.. நீங்க மட்டும் என்ன எதிர்கட்சி மாதிரியா நடந்துக்கறீங்க?

----------------------------

மழை பொய்த்தாலும் உணவு பற்றாக்குறை வராது-மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ்# யாருக்கு வராது? அரசியல்வாதிக்கா மக்களுக்கான்னு சொல்லிட்டு போங்க

----------------------------------------


நம் வீட்டுக்கு எப்போது ஃப்ரிட்ஜ் வந்ததோ, அப்போதே ஒழிந்துவிட்டார்கள் ராப்பிச்சைக்காரர்கள்

-------------------------------------------



Post Comment

இதையும் படிக்கலாமே:


43 கருத்துகள்:

  1. அந்த கடைசி ட்வீட் படிச்சுட்டு இன்னும் சிரிப்பு நிக்கல............

    பதிலளிநீக்கு
  2. நம் வீட்டுக்கு எப்போது ஃப்ரிட்ஜ் வந்ததோ, அப்போதே ஒழிந்துவிட்டார்கள் ராப்பிச்சைக்காரர்கள்//

    யோசிக்க வேண்டிய விசயம் :-)))))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் யோசிக்கத்தான் வேணும் சகோ

      நீக்கு
    2. நீங்க ரெண்டு பேரும் ராப்பிச்சைய பத்தி யோசிச்சு இப்ப என்ன செய்யப் போறீங்க???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

      நீக்கு
  3. ஹா..ஹா.. ஹா.. நல்லா இருக்குங்க... மிக்க நன்றி... (TM 4)

    பதிலளிநீக்கு
  4. முதல் இரண்டும். கடைசியும் மிகப் பிரமாதம். தொடருங்க தம்பி.

    பதிலளிநீக்கு
  5. இது நல்லாருக்கான்னு சொல்லிட்டு போங்க...


    இது நல்லா இருக்குங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா சொல்றீங்க... நீங்க சொன்னா சரிதான்

      நீக்கு
  6. ///மழை பொய்த்தாலும் உணவு பற்றாக்குறை வராது-மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ்# யாருக்கு வராது? அரசியல்வாதிக்கா மக்களுக்கான்னு சொல்லிட்டு போங்க///

    செம!

    பதிலளிநீக்கு
  7. மழை பொய்த்தாலும் உணவு பற்றாக்குறை வராது-மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ்# யாருக்கு வராது? அரசியல்வாதிக்கா மக்களுக்கான்னு சொல்லிட்டு போங்க

    /////////////
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    இது நல்லா இருக்கு பாஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்ன கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//// வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. அரசியல் கோமாளிகள் பலர் உண்டு
    அதை தினம் வேடிக்கை காண நாமுண்டு!
    அன்புடன் ஆயிஷாபாரூக்...

    பதிலளிநீக்கு
  9. நல்லா இருக்கிறதை
    நல்லா இருக்குன்னுதானே சொல்லனும்
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. கலக்கல்! அந்த கடைசி டிவிட் சூப்பர்!
    இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி.... நானும் வருகிறேன் உங்கள் தளத்திற்கு

      நீக்கு
  11. நல்லாத்தான் இருக்குது சகோ ஆனா கடைசி ஒன்னு மட்டும் முன்னமே படிச்ச மாதிரி இருக்கு. இது நல்லா இருக்கான்னு பாத்து சொல்லுங்கப்பா..http://tamilmottu.blogspot.in/2012/08/25.html மேரி கோம் பற்றிய சுவையான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? என்ன ஒண்ணு படிச்ச மாதிரி இருக்குன்னு சொல்லிருக்கலாம்.....

      நீக்கு
  12. very nice....and last one made me laugh lot...(im at work so no tamil )

    பதிலளிநீக்கு
  13. கடைசி வரிகள் உண்மையை சொல்கின்றன.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.