என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

15 பாசத்தை மறக்கடித்த பதவி (தாமரைக்கனி குடும்பம்)




தாமரைக்கனி................
தமிழக அரசியலில் செல்லமாய் தட்டுவதற்கு பேர்போனவர், தன் கையில் கேடயம்போல் மோதிரம் போட்டிருந்தவர். பண்ரூட்டி ராமச்சந்திரன், வீரபாண்டி ஆறுமுகம் போன்றோர் தன் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்கள்தான்.எம்.ஜி.ஆர்.,காலத்தில் செல்வாக்கான அரசியல்வாதியாக திகழ்ந்த இவர்மூன்று முறை எம்.ஜி.ஆர்.,தலைமையிலான அண்ணா.தி.மு..,சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வென்றவர்

அதன்பிறகு ஜெயலலிதா தலைமையின் கீழ் அண்ணா.தி.மு..,வந்ததும் 1991-ஆம் ஆண்டு தேர்தலில் இவருக்கு சீட் மறுக்கப்பட்டு சுயேட்சையாக களமிறங்கி வெற்றிபெற்றவர். பிறகு மீண்டும் அண்ணா.தி.மு..,வில் இணைந்து 1996-ஆம் ஆண்டு வெற்றிபெற்றார்.
அதன்பிறகு தி.மு..,வில் இணைந்து 2001 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்டவர் யார் தெரியுமா? அவரது சொந்த மகன் இன்பத்தமிழன்தான். போட்டி கடுமையாக இருந்தது. தன் சொந்த மகனிடமே வெற்றியை பறிகொடுத்தார் தாமரைக்கனி. தாமரைக்கனியை நோஸ்கட் செய்யவேண்டும் என்பதற்காகவே இன்பத்தமிழனை விளையாட்டுத்துறை அமைச்சராக்கினார் ஜெயலலிதா.



அதன் பிறகு எதிரும் புதிரும் அரசியல்தான் இருவரும் நடத்தி வந்தனர். தாமரைக்கனி நோய்வாய்ப்பட்டிருந்த போது மருத்துவமனைப்பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்த இருந்த இன்பத்தமிழன் தாமரைக்கனி இறந்த போது இறுதி சடங்கில் கூட கலந்துகொள்ள வராமல் சென்னையிலேயே தங்கிவிட்டார். எல்லாம் பதவி படுத்திய பாடு. தாமரைக்கனி மறைவிற்கு பின் அவர் வீட்டில் போலீஸ் புகுந்து அவரின் மனைவியையும், மகன்களையும் போலிசார் கைது செய்தனர். அதன்பின் அவரது இரு மகன்களும் ஜெயிலில் நிர்வாணமாக்க பட்டதாக புகார் எழுந்தது. தன் தாயாரும் சகோதர்களும் அசிங்கப்பட்டபோது கூட வாயைத்திறக்கவில்லை இன்பத்தமிழன்.

தாமரைக்கனிக்கு செக் வைக்கத்தானே அவரது மகனையே கொம்பு சீவினார் ஜெ....தாமரைக்கனிதான் இறந்துவிட்டாரே இனி எதற்கு இன்பத்தமிழனுக்கு பதவி என்று நினைத்தாரோ என்னவோ 2006-ஆம் ஆண்டு தேர்தலில் இன்பத்தமிழனுக்கு சீட் கொடுக்கவில்லை ஜெ.


அரசியல் அம்மா சீட் கொடுக்க மறுத்ததும்  இதுவரை மறந்துபோயிருந்த சொந்த அம்மா நினைவுக்கு வந்தார் இன்பத்தமிழனுக்கு. பதவி மறைத்திருந்த பாசம் இப்போது தெரிந்தது. 

உடனே தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு குடும்பத்திலும், கடைசி காலத்தில் தாமரைக்கனி இருந்த தி.மு.க.,விலும் இணைந்தார். ஆனாலும் பெரிதாக எடுபடவில்லை. அம்மா இருந்த தி.முக.,வை விட்டு மீண்டும் அண்ணா.தி.மு.க.,வில் இணைந்தார் இன்பத்தமிழன். இப்போதும் அண்ணா.தி.மு.க.,வில் தொடர்கிறார். 








Post Comment

இதையும் படிக்கலாமே:


15 கருத்துகள்:

  1. அரசியல் உதவிக்காக குடும்பத்தை தன் பக்கம் சேர்க்கும் அரசியல் வாதிகளைப் பார்த்துள்ளேன் இவர் எனக்கு மிகவும் வித்தியாசமாகவும் பரிதாமாகவும் தோன்றுகிறார்.... 2

    பதிலளிநீக்கு
  2. இந்த குடும்பம்தானா அது .........ஓகே ஓகே...

    பதிலளிநீக்கு
  3. பதவி,புகழ், பணம் இதுமாதிரியானவற்றின் பின்னால் செல்லும் பெரும்பான்மையோர் பாசம்,மனிதாபிமானம் போன்றவற்றை பறிகொடுத்துவிடுகிறார்கள் கஸாலி.

    பதிலளிநீக்கு
  4. அரசியலில் நுழைந்தவர்கள் அன்போடு உறவுகளை அரவணைக்க தவறிவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. ம்ம்ம் இண்டரஸ்ட்டிங்!

    பதிலளிநீக்கு
  6. பதவி படுத்தும் பாடு! தேவைதான்!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
    http://thalirssb.blogspot.in/2012/08/6.html
    மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  7. கலைஞருக்கு போட்டியா?

    பதிலளிநீக்கு
  8. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.
    http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

    பதிலளிநீக்கு
  9. பெற்ற தகப்பனின் இறுதிச்சடங்கில் கலந்து கொல்லாமல்....?

    பதிலளிநீக்கு
  10. அண்ணே இந்த யோக்கிய அரசியல் வாதியை பற்றி இன்று தான் அறிந்து கொள்கிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
  11. என்ன? தேய்ந்த செருப்பிலும் கேவலமானவர்கள் போலுள்ளதே!! கட்டாயம் தெரியவேண்டியவரே!!

    பதிலளிநீக்கு
  12. தாமரைக்கனியின் மோதிரக்குட்டு பலரும் அறிந்ததே.ஆனால் தொடர்ந்து வெற்றி பெற்றதின் ரகசியம் என்ன?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.