மாட்டுக்கறி கட்டுரைக்காக நக்கீரன் மீதும், கொடநாட்டில் ஜெயலலிதாவை சந்தித்தார் என்ற கட்டுரைக்காக ஜூனியர் விகடன் மீதும் பாய்ந்த வழக்குகளை தொடர்ந்து, ஜெயலலிதா, சசிகலா பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்காக இந்தியாடுடே இதழ் மீது ஜெயா சார்பில் ஒரு அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர் ஜெயலலிதா என்று அனைவரும் அறிந்ததே...இப்படியே போனால் பதிவர்கள் மீதும் வழக்கு பாய்ந்தாலும் பாயலாம்......அதனால்தான் கடந்த தி.மு.க.,ஆட்சியில் நடுநிலை பேசிய(பதி)வர்கள் எல்லாம் இப்போது அடக்கி வாசிக்கிறார்கள் போல...பதிவர்களிலும் தீர்க்கதரிசி இருக்காங்கப்பா....
========================
எனக்கு கோபம் வரத்தான் செய்யும். நான் கோபக்காரன்தான். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும். கோபப்படுவது எனது ஸ்டைல் என்றால், லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல் என்று தேனி பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் விஜயகாந்த். பார்த்து இருங்க கேப்டன் கோபப்படுவது மட்டும்தான் உங்க ஸ்டைல். ஆனால், கோபப்பட்டு வழக்குப்போட்டு, உள்ளே தள்ளுவது ஜெயா ஸ்டைல்
=========================
இப்போதான் தூக்கத்திலிருந்து எழுந்தார் போல நடிகர் கார்த்திக்.... அவரின் லட்டர்பேட் கட்சி ஒன்று இருக்குமே அதாங்க நா.ம.கட்சி சார்பில் நடந்த
========================
காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும், அதை தொடர்ந்து அண்ணா ஆட்சிக்கலத்திலும் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தார் கலைஞர். அடுத்த கட்டமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ஒயின்ஷாப்களை டாஸ்மாக் என்ற பெயரில் ஒருங்கிணைத்து அரசுடமை ஆக்கியவர் ஜெயலலிதா. அதாவது, மது என்ற அரக்கனுக்கு அஸ்திவாரம் போட்டவர் கலைஞர் என்றால், அந்த அஸ்திவாரத்தில் கட்டிடம் கட்டி, கிரஹப்பிரவேஷம் நடத்தியவர் ஜெயலலிதாதான். இப்போது அந்த கட்டடத்தையே இடிக்க ஜெயலலிதா அரசு முயற்சிப்பதாக செய்திகள் வருகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் பாரட்டப்பட வேண்டிய நடவடிக்கை.
ஜெயா அப்படி செய்தாரேயானால், தமிழகத்தில் தாய்மார்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜெயாவே தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே, லாட்டரி சீட்டு விஷயத்தில் ஜெயாவின் உறுதியான நடவடிக்கையை நாம் அறிவோம். அதேநேரம், அதற்கு மாற்றாக கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஒடினாலும் ஆச்சர்யமில்லை. முதலில் அதற்கு கடுமையான தண்டனையை அறிவித்துவிட்டு அதன் பிறகு டாஸ்மாக்கில் கைவைக்க வேண்டும் என்பதே என் ஆசை. இல்லாவிட்டால் மறைமுகமாக இன்றும் வெளிமாநில லாட்டரி சீட்டூக்கள் விற்பதுபோல இதுவும் ஆகிவிடும்.
Tweet |
அருமையான பதிவு நன்றி
பதிலளிநீக்குமதுவிலக்கை அமுல்படுத்துவது வரவேற்கத்தக்க விஷயம்..அதற்காக - கள்ள சாராயம் காய்ச்சுவோருக்கு கடும் தண்டனையை அறிவித்து விட்டுதான் மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும் என்பதற்கில்லை..இந்த நாட்டில் சட்டத்தை யார் மதிர்க்கிரார்கள்? அப்படி கள்ள சாராயம்தான் குடிப்பேன் என்றால் குடித்துவிட்டு சாகட்டுமே? அவங்களுக்கு இந்த அரசுகள் செத்தால் எந்த நஷ்ட ஈடும் கொடுக்ககூடாது..
பதிலளிநீக்குஎவ்வளவு விசயத்த சார் ஞாபகம் வச்சிருக்கிறீங்க பேசாம அரசியல்ல கட்சி ஒன்னு ஆரம்பிச்சிடுங்க....(3)
பதிலளிநீக்குஅருமையான அலசல்.. எதற்கும் பதிவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா.
பதிலளிநீக்குநல்லது தம்பி. மதுவிலக்கை அமல்படுத்தினால் இப்போது போல இலவசங்களை அரசு அள்ளிவிட முடியாது. பார்க்கலாம் செயல்படுத்த முடிகிறதா என்பதை. கார்த்திக்கின் தூக்கம்தான் ஜெகப்பிரசித்தமாச்சே... அந்த பதிவர்கள் மேல வழக்கு மேட்டர்.. நடந்தா நல்லதுதான். இன்னும நிறைய பப்ளிகுட்டி கிடைக்குமே..! ஹி... ஹி....
பதிலளிநீக்குதெளிவான பார்வை......
பதிலளிநீக்குஆனால் மது விலக்கு சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.....
இப்படியே ஜெயலலிதா வழக்கு போட்டு கொண்டே போனால் நமது எம் ஜி ஆர் பத்திரிக்கை மட்டும்தான் தப்பும் போல....
பதிலளிநீக்கு//எல்லாம் இப்போது அடக்கி வாசிக்கிறார்கள் போல...பதிவர்களிலும் தீர்க்கதரிசி இருக்காங்கப்பா....//
பதிலளிநீக்குஇப்படி ஆரம்பித்து
//தமிழகத்தில் தாய்மார்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜெயாவே தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருப்பார் //
இப்படி முடித்த உங்க திறமைக்கு சபாஸ்
நல்ல அலசல்...
பதிலளிநீக்குபாராட்டுக்கள்...
நன்றி…
(த.ம. 10)
மது விலக்கு விஷயத்தில் அம்மாவின் முடிவு என்னவென்று பொருத்திருந்து பார்ப்போம்...
பதிலளிநீக்குஅரசியல்... அரசியல்...
supeb
பதிலளிநீக்குநறுக்....
பதிலளிநீக்குநல்ல வேளை பிளாக்கை தடைபன்ன சொல்லல ..
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குத.ம.15
அருமையான அலசல்! பத்திரிக்கைகள் மீது வழக்கு போடுவது ஜெயாவுக்கு புதிது அல்லவே? பதிவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
பதிலளிநீக்குதனிமனிதர் தாக்குதல் இல்லாமல் அருமையான பதிவை தந்தத்தற்கு நன்றி
பதிலளிநீக்குஅருமை.........
பதிலளிநீக்குதங்களது இந்த பதிவில் வஞ்சபுகழ்சி அணி துாக்கலாகத் தெரிகிறதே?
பதிலளிநீக்குஅதென்ன பதிவர்கள் அடக்கி வாசிக்கிறாங்க?முந்தைய தி.மு.க ஆட்சியுடன் ஒப்பிடும் போது இப்போதைய அ.தி.மு.க ஆட்சி ஓரளவுக்கு சரியாக செயல்படுவது மாதிரிதான் தெரிகிறது.2G அளவுக்கு இல்லாமல் போனாலும் 1G (ஒரு பெட்டி) அளவுக்கான ஊழல்களும் கூட அதிகம் வெளியில் தெரியவில்லை.தவறுகள் கண்ணை உறுத்தும் பட்சத்தில்
பதிலளிநீக்குயாமார்க்கும் குடியல்லோம்!இவரை அஞ்சோம்.
எல்லா தரப்பினருமே கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள் என்பது உண்மைதான்.
பதிலளிநீக்குஅருமை பாஸ்...கட்சி தொடங்கேக்க எனக்கும் சொல்லி அனுப்புங்கோ.சுவாரஸ்ய பதிவுஃ
பதிலளிநீக்குஎனக்கொரு பதில்!!!!!